சிங்கப்பூர் பேருந்துக்கு 500 லிட்டர் டீசல் விற்பனை; வழக்கு கோரும் மலேசியர்

ஜோகூர் பாரு: வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்துக்கு சென்ற ஆண்டு இருமுறை 250 லிட்டர் வரை அளவிலான டீசலை விற்றதாக மலேசிய பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அச்செயலைப் புரிந்ததாக நம்பப்படும் 38 வயது சொராயா முகம்மது தாம்யெஸ் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். நீதிபதியின் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு சொராயா விசாரணை கோரினார்.

விதிமுறைகளின்படி ஒருநாளில் வெளிநாட்டு வாகனங்களுக்கு ஒரு பரிவர்த்தனையில் 20 லிட்டருக்கு மேற்பட்ட டீசலை நிரப்பக்கூடாது.

சென்ற ஆண்டு மே மாதம் 19, 30ஆம் தேதிகளில் ஜாலான் கெம்பாஸ் பாருவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் சொராயா சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு பேருந்துக்கு இருமுறை தலா 250 லிட்டர் டீசலை விற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. முதல் சம்பவம் மே 19ஆம் தேதி காலை 11.04 மணிக்கும் இரண்டாவது சம்பவம் மே 30ஆம் தேதி காலை 10.34 மணிக்கும் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!