பாலஸ்தீன தனி நாடு கோரிக்கை சாத்தியமாகலாம்: பைடன்

வாஷிங்டன்: பாலஸ்தீன தனி நாடு கோரிக்கை சாத்தியமாகக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனவரி 19ஆம் தேதி தெரிவித்துள்ளார்.

காஸா போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு அதிபர் பைடன் இவ்வாறு கூறினார்.

ஹமாஸ் இயக்கத்துடன் நடைபெறும் போரைக் கருத்தில் கொண்டு, பாலஸ்தீனத்துக்குத் தனிநாடு உரிமையை வழங்குவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று பிரதமர் நெட்டன்யாகு தெரிவித்த ஒரு நாளைக்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

தலைவர்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், “பாலஸ்தீனத்துக்குத் தனி நாடு அந்தஸ்து வழங்க முடியாது என்று திரு நெட்டன்யாகு முன்னதாகக் கூறியதை அவர் மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கில் பல பத்தாண்டுகளாக நிலவிவரும் இந்தப் பதற்றநிலையைக் குறைக்க இதுதான் சிறந்த வழி,” என்றார்.

இரு நாட்டுத் தீர்வுகள் என்று பார்த்தால் அதில் சில வகை உண்டு. ஐக்கிய நாட்டு அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் சில நாடுகளில் அவர்களுக்கென தனி ராணுவம் கிடையாது. ஆக, தனி நாடு அந்தஸ்து பெறுவதில் சில வழிகள் உண்டு,” என்று திரு பைடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கு திரு நெட்டன்யாகு சம்மதிப்பாரா என்று கேட்கப்பட்டதற்கு, “அது குறித்து பின்னர் தெரிவிக்கிறேன்,” என்றார் திரு பைடன்.

கடந்த 40 ஆண்டுகளாக திரு பைடனும் திரு நெட்டன்யாகுவும் சிக்கலான நட்புணர்வைக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அவர்கள் கடைசியாக சந்தித்து பேசியதற்குப் பிறகு அவர்களுக்கிடையே அமைதி நிலவுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம், இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக ஹமாஸ் இயக்கத்தை ஒழித்தே தீருவேன் என்று திரு நெட்டன்யாகு சூளூரைத்து வருகிறார். பாலஸ்தீனத்துக்குத் தனி நாடு அந்தஸ்து கொடுத்துவிட்டால் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டிவிடலாம் என்று அமெரிக்கா கூறி வரும் யோசனை, தனது நாட்டுப் பாதுகாப்புக்குப் பாதகமாக அமைந்துவிடும் என்ற காரணத்தால் இஸ்‌ரேலிய பிரதமர் தொடர்ந்து அதனை மறுத்து வருகிறார்.

திரு நெட்டன்யாகு, “ஜோர்தான் ஆற்றின் மேற்குத் கரையில் உள்ள அனைத்துப் பிரதேசங்களும் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். இதை நான் எனது ‘அமெரிக்க நண்பர்களிடத்தில்’ தெளிவாகக் கூறி விட்டேன். இது ஓர் அவசியமான நிபந்தனை. அது பாலஸ்தீனத்தின் தனிநாடு கோரிக்கைக்கு எதிர்மாறானது,” என்று ஜனவரி 18ஆம் தேதியன்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு நெட்டன்யாகுவின் இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து திரு பைடன் அவருடன் தொலைபேசியில் பேசவில்லை என்றும் அவர்களின் உரையாடலின்போது, திரு பைடன் இந்த விவகாரம் குறித்து மறுபரிசீலிக்குமாறு திரு நெட்டன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்தார் என்றும் வெள்ளை மாளிகை கூறியது.

“இஸ்‌ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே இரு நாட்டுத் தீர்வு சாத்தியமாகலாம் என்று அதிபர் பைடன் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளார்,” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!