ஈப்போ: மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் தீ மூண்டதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் தீக்கு இரையாகின.
ஜனநாயகச் செயல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஙெ கூ ஹாமுக்குச் சொந்தமாக வீடு தமான் செமராக் ஜெயாவில் உள்ளது.
அந்த வீட்டில் ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தீ மூண்டதாக பேராக் மாநில தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.
தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு அவர்கள் சென்றடைந்தபோது மூன்று கார்களும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடம் முற்றிலும் அழிந்ததாகத் தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.