அலாஸ்கா ஏர்லைன்ஸ் சம்பவம்: போயிங் 737 ‘மேக்ஸ் 9’ ரக விமானங்கள் பறப்பதற்குத் தடை

வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய விமானத்துறை நிர்வாகம் போயிங் 737 ‘மேக்ஸ் 9’ ரக விமானங்கள் பறப்பதற்கு விதித்துள்ள தடையை நீட்டித்துள்ளது.

விமானக் கதவு ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததைத் தொடர்ந்து போயிங் மீதான கண்காணிப்பை அதிகரிக்கப்போவதாக அது அறிவித்தது.

ஜனவரி 16ஆம் தேதி வரை யுனைடெட் ஏர்லைன்சும் அலாஸ்கா ஏர்லைன்சும் விமானச் சேவைகளை ரத்துசெய்திருக்கும் நிலையில், அவற்றை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் மேலும் ஒரு முறை சோதனைகளை நடத்தவேண்டியிருக்கும் என்று மத்திய விமானத்துறை நிர்வாகம் தெரிவித்தது.

அண்மைய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட விமானத்தைப் போன்ற மற்ற 171 விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தொடர் தடை, அமெரிக்கப் பயணிகளின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்டது என்று அது கூறியது. அவை சோதிக்கப்பட்ட பிறகு அந்தத் தடை அகற்றப்படும் என்றும் அது தெரிவித்தது.

40 விமானங்கள் மீண்டும் சோதிக்கப்பட வேண்டும் என்று மத்திய விமானத்துறை நிர்வாகம் ஜனவரி 12ஆம் தேதி கூறியது. அதன் பிறகு அது முடிவுகளை மறுஆய்வு செய்து, ‘மேக்ஸ் 9’ ரக விமானங்களை மீண்டும் செயல்படுத்த போதுமான பாதுகாப்பு இருக்கின்றதா என்பதை உறுதிசெய்யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!