12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டதில் அவமானம் இல்லை: ஸ்டாலின்

தமிழ்­நாட்­டில் அண்­மை­யில் சச்­ச­ரவை ஏற்­ப­டுத்­திய ‘12 மணி நேர வேலை’ எனும் சட்ட மசோ­தாவை திரும்­பப் பெற்­றுக்­கொண்­ட­தாக தமி­ழக முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அறி­வித்­துள்­ளார்.

தொழி­லா­ளர் தினத்தை முன்­னிட்டு சென்னை சிந்­தா­தி­ரிப்­பேட்­டை­யில் உள்ள மே தினப் பூங்­கா­வில் இருக்­கும் நினை­வுச்­சின்­னத்­துக்கு மலர் வளை­யம் வைத்து நேற்று மரி­யாதை செலுத்­தி­னார் அவர்.

பின்­னர் உரை­யாற்­றிய அவர், “12 மணி நேர வேலை மசோதா திரும்­பப் பெறப்­பட்­டது பற்றி எம்.எல்.ஏக்­க­ளுக்கு செய்­திக் குறிப்பு வாயி­லாக தெரி­விக்­கப்­படும்.

“அந்த மசோ­தாவை நிறுத்­தி­வைத்த பின்­ன­ரும் சிலர் அவ­தூறு பரப்பி வரு­கின்­ற­னர். தமிழ்­நாட்­டின் வட, தென் மாவட்­டங்­களில் வேலை­வாய்ப்பை அதி­க­ரிக்­க­வும் பெரும் முத­லீ­டு­களை ஈர்க்­க­வும் 12 மணி நேர வேலை மசோதா கொண்­டு­வ­ரப்­பட்­டது,” என விளக்­க­ம­ளித்­தார்.

மசோ­தாவை விட்­டுக்­கொ­டுப்­பதை தாம் அவ­மா­ன­மாக நினைக்­க­வில்லை என்­றும் திரு ஸ்டா­லின் குறிப்­பிட்­டார்.

“இதை விட்­டுக்­கொ­டுப்­பதை நான் அவ­மா­ன­மாக கரு­த­வில்லை. மாறாக, இதைப் பெரு­மை­யா­கவே கரு­து­கி­றேன். மசோ­தா­வைக் கொண்­டு­வ­ரு­வ­தில் துணிச்­சல் என்­றால், அதைத் திரும்­பப் பெறு­வ­தும் துணிச்­சல்­தான்.

“திமுக அரசு கொண்­டு­வந்த 12 மணி நேர வேலை மசோ­தாவை திமுக கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றி­ருக்­கும் தொழிற்­சங்­கமே எதிர்த்­ததை நான் பாராட்டு­கி­றேன்.

“திமுக ஜன­நா­யக இயக்கம் என்­ப­தற்கு இதுவே ஓர் எடுத்துக்­காட்டு,” என்­றும் திரு ஸ்டாலின் கூறி­னார்.

அந்த மசோ­தாவை அதிபரின் ஒப்­பு­த­லுக்கு அனுப்­பா­மல் நிறுத்தி வைத்­த­து­டன், மே தினத்­தில் அத­னைத் திரும்­பப் பெறு­வ­தாக திரு ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளதை தாங்­கள் வர­வேற்­ப­தாக விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சித் தலை­வர் தொல். திரு­மா­வ­ள­வன், திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி உள்­ளிட்­டோர் கூறி­யுள்ளனர்.

“எட்டு மணி நேர வேலையை மீண்­டும் உறு­திப்­படுத்­திய முதல்­வ­ரின் இந்த நிலை­பாட்டை விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி வர­வேற்றுப் பாராட்­டு­கிறது,” என்­றார் திரு திரு­மா­வ­ள­வன்.

“மசோ­தாவை திரும்­பப் பெற்­றுக்­கொள்­ளும்­படி பல­ரும் வலி­யு­றுத்தி வந்­துள்­ள­னர். அதனை இன்று முத­ல­மைச்­சர் ஏற்று, மே தினக் கொண்­டாட்­டத்­தில் அனைத்­துத் தொழி­லா­ள­ருக்­கும் முழு மகிழ்ச்சி அளிக்­கும் வகை­யில், சட்ட வரை­வைத் திரும்­பப் பெற்­ற­தாக அறி­வித்­தி­ருப்­ப­தற்கு நெஞ்­சம் நிறைந்த பாராட்­டு­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்,” என்­றார் திரு வீர­மணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!