வாயுக்கசிவு: சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

பஞ்­சாப் மாநி­லம் லூதி­யா­னா­வின் கியாஸ்­புரா பகு­தி­யில் நேற்­றுக் காலை வாயு கசிந்ததால் 11 பேர் உயி­ரி­ழந்­த­னர். அவர்களுள் இரண்டு சிறு­வர்­களும் அடங்­கு­வர் என்று இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

பால் பொருள்­களை உற்­பத்தி செய்­யும் தொழிற்­சா­லை­யில் அமைந்­துள்ள குளி­ரூட்டு இயந்­தி­ரத்­தில் இருந்து நேற்று காலை 7 மணி­ய­ள­வில் வாயுக்கசிவு ஏற்­பட்­ட­தா­க­வும்  தொழிற்­சாலை முழு­வ­தும் பர­வி­ய­தா­க­வும் நம்­பப்­ப­டு­கிறது.

இதனால் வேலையில் இருந்த ஊழி­யர்­க­ளுக்கு மூச்­சுத் திண­றல் ஏற்­பட்­ட­து­டன் ஒரு­சி­லர் மயங்­கிக் கீழே விழுந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

தக­வல் அறிந்த தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யும் தீய­ணைப்­புப் படை­யும் தொழிற்­சாலை வளா­கத்­திற்கு பாது­காப்பு முகக்­க­வ­சம் அணிந்­து­கொண்டு விரைந்து தொழிற்­சா­லைக்­குள் சென்று மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­ன.

வாயுக்­க­சி­வால் உயி­ரி­ழந்­த­வர்­கள் தொழி­லா­ளர்­கள் என்று கூறப்­ப­டு­கிறது. மருத்­து­வ­ம­னை­யில் குறைந்­தது 11 பேர் சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தா­க­வும் நம்­பப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, தொழிற்­சா­லை­யில் இருந்து கசிந்த வாயு, கிட்­டத்­தட்ட 300 மீட்­டர் சுற்­ற­ள­வுக்­குப் பர­வி­ய­தா­க­வும் அப்­ப­குதி மக்­கள் மூச்­சுத் திண­றல், கண் எரிச்­சலால் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

மக்­கள் அதி­கம் வசிக்­கும் ஒரு பகு­தி­யில் இந்த வாயுக்கசிவு சம்­ப­வம் ஏற்­பட்­டுள்­ள­தால் அங்­கி­ருந்து அனை­வ­ரும் உட­னடி­யாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

வாயு எந்த வகை­யைச் சேர்ந்­தது என்­பது தொடர்­பான விசா­ரணை நடந்து வரு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!