பிலிப்பீன்சிடமிருந்து கூடுதல் ராணுவ ஒத்துழைப்பை விரும்பும் அமெரிக்கா

இன்று நடை­பெ­ற­வுள்ள சந்­திப்­பின்­போது அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் பிலிப்­பீன்ஸ் அதி­பர் ஃபெர்டி­னண்ட் மார்­கோஸ் ஜூனி­ய­ரும் பல­த­ரப்­பட்ட விவ­காரங்­கள் தொடர்­பில் ஒப்­பந்­தங்­கள் செய்­து­கொள்ள உள்­ள­னர்.

இரு­நா­டு­க­ளுக்­கும் இடை­யிலான வர்த்­தக உறவை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­து­டன் சீனா தொடர்­பில் இரு­த­ரப்­பி­ன­ருக்­கும் எழுந்­து­வ­ரும் கவ­லை­க­ளுக்­கிடையே பிலிப்­பீன்­சி­ட­மி­ருந்து கூடு­தல் ராணுவ ஒத்­து­ழைப்­பை­யும் அமெ­ரிக்கா எதிர்­பார்ப்­பதாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. நீண்­ட­கால நட்­பு­ற­வு நாடுகளான பிலிப்­பீன்­சும் அமெ­ரிக்­கா­வும் அதை மறு­உ­று­திப்­ப­டுத்­திக்­கொள்ள திரு மார்­கோஸ் நான்கு நாள் பய­ணமாக அமெ­ரிக்கா சென்­றுள்­ளார்.

பிலிப்­பீன்­சின் உத்­தி­பூர்வ முக்­கி­யத்­து­வத்­தைக் குறைத்து எடை­போட்­டு­விட முடி­யாது என்று ராய்ட்­டர்­சி­டம் பேசிய மூத்த அமெ­ரிக்க வெள்ளை மாளிகை அதி­காரி, இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான உறவு வெறும் பாது­காப்­புக்­கும் அப்­பாற்­பட்­டது என்று கூறி­யி­ருந்­தார்.

சீனா­வு­ட­னும் அமெ­ரிக்­கா­வுடனும் திரு மார்­கோஸ் நல்­லுறவு ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முயன்­ற­போ­தும் சீனா­வின் அர­ச­தந்­திர அணு­கு­முறை எரிச்­ச­லூட்­டும் வகை­யில் இருப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாக உள்­ளது எனக் கூறப்­ப­டு­கிறது.

தைவா­னைக் கைப்­பற்­றும் முயற்­சி­யில் சீனா இறங்­கி­னால் அதற்கு எதி­ராக ஏவு­க­ணை­களைப் பாய்ச்­சு­வ­தற்கு பிலிப்­பீன்ஸ் சிறந்­த­தொரு இட­மாக விளங்­கு­வதை அமெ­ரிக்கா கருது­வ­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­றனர்.

‘அச்­சு­றுத்­தலை நிறுத்­துக’

இதற்­கி­டையே, சர்ச்­சைக்­கு­ரிய தென்­சீ­னக் கடல் பகு­தி­யில் ‘பாது­காப்­பற்ற, அச்­சு­றுத்­தல் விடுக்­கும் நடத்­தையை’ நிறுத்து­மாறு நேற்று முன்­தி­னம் சீனா­வி­டம் அமெ­ரிக்கா கேட்­டுக்­கொண்­டது.

பிலிப்­பீன்­சின் சுற்­றுக்­கா­வல் கப்­பல் ஒன்றை சீனா­வின் கடற்­க­ரைக் காவல் படை வழி­மறித்­த­து­டன் இரண்­டும் மோதிக்­கொள்­ளும் நிலை ஏற்­ப­ட­வி­ருந்த சம்­ப­வம் நடந்­ததை அடுத்து, அமெ­ரிக்கா இவ்­வாறு கோரி­யுள்­ளது.

இதை­ய­டுத்து பிலிப்­பீன்ஸ் பட­கு­கள் சீனா­வின் அனு­ம­தி­யின்றி ஊடு­ரு­வியுள்ளன என்­றும் இது ‘திட்­ட­மிடப்பட்ட அச்­சு­றுத்­தும் ஒரு செயல்’ என்­றும் சீன வெளி­யு­றவு அமைச்­சர் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!