உடனடி வாய்ப்புகள் நம்பிக்கை தருகின்றன

பொரு­ளி­யல் வளர்ச்சி இவ்­வாண்டு சற்று மெது­வ­டைந்­தாலும் ஒரே­ய­டி­யாக வீழ்ச்சி அடை­யும் நிலையை சிங்­கப்­பூர் தவிர்த்­து­வி­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தொழி­லா­ளர் தினத்தை முன்­னிட்டு தமது மே தினச் செய்­தி­யில் தெரி­வித்­துள்­ளார்.

பண­வீக்­கம் தொடர்ந்து அதி­க­ரித்­து­வந்­தா­லும் இவ்­வாண்­டின் பிற்­பா­தி­யில் அது மித­மா­க­லாம். இதற்­கி­டையே, வேலை­யின்மை விகி­தம் குறை­வாக இருந்­து­வ­ரு­வ­து­டன் ஆள் குறைப்பு எண்­ணிக்­கை­யும் சமா­ளிக்­கக்­கூ­டிய வகை­யில் உள்­ளது என்று திரு லீ நேற்று குறிப்­பிட்­டார்.

“ஆக மொத்­தத்­தில் நம் உட­ன­டிப் பொரு­ளி­யல் வாய்ப்­பு­கள் குறித்து நாம் எச்­ச­ரிக்கை கலந்த நம்­பிக்­கை­யு­டன் இருக்­க­லாம்,” என்­றார் அவர். கொவிட்-19 கொள்­ளை­நோயி­லி­ருந்து சிங்­கப்­பூர் மீண்டு­வ­ரும் நிலை­யில், பொரு­ளி­ய­லும் தொடர்ந்து மீட்சி காண்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 3.6% வளர்ச்சி கண்­டது. கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட துறை­களும் வேக­மாக மீட்சி கண்டு வரு­கின்­றன என்­றார் அவர். பய­ணத்­து­றை­யும் விருந்­தோம்­பல் துறை­யும் மீண்­டும் சூடு­பிடிக்­கத் தொடங்­கி­விட்­டன.

கொள்­ளை­நோய்க்கு முந்­திய நிலை­யின் 80% பய­ணி­கள் போக்­கு­வ­ரத்தை சாங்கி விமான நிலை­யம் தற்­போது அடைந்­துள்­ளது. படிப்­ப­டி­யாக அனைத்­து­லக தொடர்­பு­கள் பழைய நிலைக்­குத் திரும்ப, இந்த விகி­த­மும் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சேவை­கள், உணவு, சில்­லறை வர்த்­த­கம் ஆகி­ய­வற்­றின் விலை குறை­வாக உயர்ந்­து­வந்­துள்ள பின்­ன­ணி­யில் பண­வீக்­கம் பல மாதங்­க­ளாக உச்­சத்­தைத் தொட்­டதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் குறை­யத் தொடங்­கி­யது.

இதற்­கி­டையே, இவ்­வாண்­டின் முதல் மூன்று மாதங்­களில் ஆண்டு அடிப்­ப­டை­யில் பதி­வான பொரு­ளி­யல் வளர்ச்சி 0.1%. அனைத்­து­லக அள­வில் பொரு­ளி­யல் மெது­வ­டை­யும் போக்­கைக் கருத்­தில்­கொண்டு ஆய்­வா­ளர்­கள் தங்­க­ளின் வளர்ச்சி முன்­னு­ரைப்­பைக் குறைத்­தும் உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரர்­களுக்கு ஆத­ரவு அளிப்­ப­தற்­காக தன்­னால் முடிந்த அளவு அர­சாங்­கம் செய்­யும் என்­றார் திரு லீ.

“எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய நிலை­யில் இருக்­கும் ஊழி­யர்­களை படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­வழி மேம்­ப­டுத்­து­வ­தில் நாங்­கள் முன்­னேற்­றம் கண்­டு­வ­ரு­கி­றோம். திறன்­சார்ந்த வர்த்­த­கங்­களை நிபு­ணத்­து­வம் வாய்ந்­த­வை­யாக்கி வெற்­றிக்­குக் கூடு­தல் பாதை­களை உரு­வாக்­கு­வோம். அத்­து­டன் வாழ்க்­கைத்­தொ­ழில் திட்­ட­மி­டு­தல் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வழங்­கப்­படும் ஆத­ரவை மேம்­ப­டுத்­து­வோம்,” என்­றார்.

இந்த விவ­கா­ரங்­கள் குறித்து ‘முன்­னே­றும் சிங்­கப்­பூர்’ திட்­டம் கலந்­தா­லோ­சித்து வரு­வ­தா­க­வும் பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் எனக் குறிப்­பி­டப்­படும் அர­சாங்­கம், தொழிற்­சங்­கங்­கள், நிறு­வனங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு இடையே வலு­வான ஒத்­து­ழைப்பு இருந்­தால் இத்­த­கைய முயற்­சி­கள் கைகூ­டி­வ­ரும் என்­றார் அவர்.

ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்சி, மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் நன்கு நடை­பெற்று வரு­வ­தா­கச் சுட்­டிய திரு லீ, அவற்­றால் பல­ரும் தங்­க­ளின் திறன்­களை மேம்­படுத்­திக்­கொள்ள முடி­வ­தா­கச் சொன்­னார்.

“ஊழி­யர்­க­ளின் மாறி­வ­ரும் தேவை­க­ளுக்கு ஏற்ப நடந்­து­கொள்­ளும் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது. இத­னால் உற்­பத்­தித்­தி­றன் மேம்­ப­டு­வ­து­டன் திற­னாளர்­க­ளை­யும் நிறு­வ­னங்­கள் தக்­க­வைத்­துக்­கொள்ள முடி­கிறது,” என்­றார் அவர்.

இருப்­பி­னும் புவி­யி­யல்­சார் அர­சி­யல் நெருக்­கு­தல்­கள் நிறைந்த நிச்­ச­ய­மற்ற அனைத்­து­லக சூழல் குறித்து பிர­த­மர் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

மேலை­நா­டு­களில் பொரு­ளியல் மந்­த­நிலை ஏற்­படும் அபா­யம் உண்டு என்­றார். அனைத்­து­லக வர்த்­த­க­மும் ஒத்­து­ழைப்­பும் பாதிப்­புக்கு உள்­ளா­கின்­றன. அதே­வேளை வளர்ச்­சி­கண்டு வரும் தொழில்­து­றை­களும் புதிய தொழில்­நுட்­பங்­களும் உல­க­நா­டு­க­ளின் பொரு­ளி­ய­லுக்­குத் தடங்­க­லாக இருக்­க­லாம்.

“இத்­த­கைய சூழல்­க­ளுக்கு ஏற்ப நாம் மாறிக்­கொள்­ளும் அதே நேரத்­தில் மோச­மா­கப் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்கு உத­வ­வும் முடிந்த அளவு செய்­ய­வேண்­டும்,” என்­றார்.

“நாம் தொடர்ந்து செயல்­படு­வ­தும் உல­கத்­து­டன் வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டு­வ­து­மாக இருப்­பதைப் பொறுத்து சிங்­கப்­பூ­ரின் வளர்ச்சி உள்­ளது. நமது தொழில்­து­றை­க­ளைத் தொடர்ச்சி­யாக உரு­மாற்­றிக்­கொண்டு, தற்­போ­தைய ஆற்­றல்­களை மேம்­ப­டுத்­திக்­கொண்டு, வளர்ச்சி வாய்ப்­பு­களை நோக்­கி­ய­படி புதிய ஆற்­றல்­களை உரு­வாக்­கிக்­கொண்டு இருக்க வேண்­டும்.

“இத­னால் தற்­போது இருக்­கும் வேலை­களில் தடங்­கல் ஏற்­பட்­டா­லும் எதிர்­கா­லத்­துக்கு ஏற்ப சிறந்த வாய்ப்­பு­க­ளு­டைய புதிய வேலை­களை நம்­மால் உரு­வாக்க முடி­யும்,” என்­றார் பிர­த­மர் லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!