மீண்டும் கொரோனா: நிறுவனம் எச்சரிக்கை

உல­கில் கொரோனா கிருமி இன்­ன­மும் ஒழிந்­த­பா­டில்லை.அது மேலும் தொல்லை தரக்­கூடிய சூழ்­நிலை உரு­வா­கக் கூடும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது.

உலக அள­வில் கடந்த 28 நாள்களில் 23,000க்கும் மேற்­பட்ட மக்­கள் மாண்­டு­விட்­ட­தா­கவும் மூன்று மில்­லி­யன் பேர் புதி­தாக பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் தனக்­குத் தக­வல் கிடைத்து உள்ளதாக அந்த அமைப்பு கூறி­யது.

இப்­போது பரி­சோ­த­னை­கள் அவ்­வ­ள­வாக நடத்­தப்­படு­வ­தில்லை. இந்த நிலை­யிலும் அந்த அள­வுக்­குப் பாதிப்பு இருக்கிறது என்பதை அது சுட்­டி­யது.

இன்­ன­மும் அதிக மக்­கள் மடி­கி­றார்­கள். அதிக மக்­கள் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்று நிறு­வ­னத்­தின் அவ­ச­ர­கால சுகா­தார செயல்­திட்­டத்­துறை இயக்­கு­நர் மைக்­கல் ரயன் கூறி­னார்.

இந்த நிறுவ­னத்­தின் அவ­ச­ர­கா­லக் குழு மூன்று மாதங்­களுக்கு ஒரு­முறை கூடும். அதன் அடுத்த கூட்­டம் அடுத்த மாதத் தொடக்­கத்­தில் நடக்க உள்­ளது. கொரோனா தொற்று அனைத்­து­லக அள­வில் அபாய சங்கு ஊதும் அள­வுக்­குக் கூடி­விட்­டதா என்­பதை அது கூட்­டத்­தில் முடிவு செய்­யும்.

“கொரானா கிரு­மி­யைத் துடைத்து ஒழிக்க முடி­யாது. சளிக்காய்ச்­ச­லைப்போல் அப்­போ­தைக்கு அப்­போது அது தொல்லை கொடுக்­கும். பல­வீ­ன­மா­ன­வர்­கள் பாதிக்­கப்­ப­டுவர். மக்­கள் சுகா­தார பழக்க வழ­க்கங்­க­ளைக் கைக்­கொண்டு வர­வேண்­டும்,” என்று திரு ரயன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!