You are here

வாழ்வும் வளமும்

உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தகத் தொகுப்பு வெளியீடு

படம்: மார்ஷல்கேவண்டிஷ்

உள்ளூர் படைப்பாளர்களின் எழுத்துகளைத் தாங்கி நான்கு மொழிகளிலும் வெளிவந்துள்ள புதிய தொகுப்பு நூல்கள் ‘நுழைவுச்சீட்டுப் புத்தகம்’ (டிக்டெக் புக்). உள்ளூர் இலக்கியங்களை சிங்கப்பூரர்கள் அதிக அளவில் வாங்குவதை ஊக்குவிக்கும் ‘உள்ளூர் இலக்கியங்களை வாங்குங்கள்’ (BuySingLit) இயக்கத்தின் ஓர் அங்கமாக இந்தத் தொகுப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

தேசிய கவிதை விழா கவிதைப் போட்டி

நான்கு மொழிகளில் தேசிய கவிதை விழா ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. விழாவையொட்டி நான்கு மொழிகளில் கவிதைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் கவிதைகளை ஆங்கில மொழி பெயர்ப்புடன் அனுப்ப வேண்டும் (தொகுப்பில் வெளியிட). எனினும் தமிழ்க் கவிதைகளின் அடிப்படையிலேயே கவிதைகள் தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு பிரிவிலும் போட்டியில் வெற்றி பெறும் மூன்று கவிதைகளும் தேர்வு பெறும் கவிதைகளும் தேசிய கவிதை விழாவில் வாசிக்கப்படும். வெற்றி பெறுவோருக்கு புத்தகப் பரிசுடன் புத்தகப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப் படும். அத்துடன் தேர்வுபெறும் கவிதைகள் நான்குமொழி தொகுப் பிலும் இடம்பெறும்.

இஸ்ரேலுடன் ராணுவ ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் இஸ்ரேலுடன் இணைந்து 17,000 கோடி ரூபாய் செலவில் தரையிலிருந்து விண்ணில் பாயும் வகையிலான ஏவுகணை தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்படும் பெரும்பாலான ஆயுதங்கள், இந்திய ராணுவ பயன் பாட்டிற்காக வாங்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

 

மகா சிவராத்திரி ஏற்பாடுகள் மும்முரம்

படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத் தில் ஸ்ரீ சிவபெருமானுக்காகக் கொண்டாட்டப்படும் மகா சிவ ராத்திரி விழாவிற்கு சிங்கப்பூரில் இருக்கும் கோவில்கள் ஆயத்த மாகி வருகின்றன. பக்தர்கள் நாளை மறுநாள் இரவு முழுவதும் கண்விழித்து கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வர். இதன் தொடர்பில், கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோவில் இந்த விழாவிற்குச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறது. நாளை முதல் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை அங்கு சிவபெருமானுக்குச் சிறப்பு லட் சார்ச்சனை இடம்பெறும்.

‘கவிமணம் 2017’ கவிதைப் போட்டி

தமிழ்மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் இந்தியர் சங்கம் படைக்கும் கவிதைத்திறன் போட்டி ‘கவிமணம் 2017’ சிங்கப்பூர்வாழ் அனைத்துக் கவிஞர்களையும் அழைக்கின்றது! கவிதைப் போட்டிக்குரிய தலைப்பு: ‘காதலென்றால்...’ அனுப்பவேண்டிய இறுதி நாள் 10 மார்ச் 2017.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

 

மலையாளச் சமூகம் பற்றிய நூல் வெளியீடு

மலையாளச் சமூகம் பற்றிய நூல் வெளியீடு

இந்தியாவின் கேரள மாநிலத்திலி- ருந்து சிங்கப்பூருக்குப் புலம் பெயர்ந்த மலையாளச் சமூகத்தின ரின் கதைகளைப் பற்றிய நூல் ஒன்று எழுதப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. டாக்டர் அனிதா தேவி பிள்ளை, டாக்டர் புவா ஆறுமுகம் ஆகியோ ரின் படைப்பான இந்த நூலின் தலைப்பு “From Kerala to Singapore: Voices from the Singapore Malayalee Community”. தாய் நாட்டைவிட்டு சிங்கப்பூ- ரில் குடியேறிய அனுபவத்தையும் சமூக மாக ஒன்றிணைந்து அவர்- கள் புரிந்த சாதனைகளையும் மலரும் நினைவுகளாக இந்த நூல் சித்திரிக்கிறது. இம்மாதம் 11ஆம் தேதி அன்று ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸில்’ இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற் றது.

‘வாட்ஸ்அப்’ போலவே ‘சைம்’

வாட்ஸ்அப் செயலிக்குப் போட்டி யாக அமேஸே„ன் நிறுவனம் ‘சைம்’ (Chime) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. ‘ஸ்கைப்’ செயலியில் உள்ளது போல காணொளி உரையாடல், ஒரே நேரத்தில் பலர் உரையாடும் வசதி (கான்பரன்ஸ் கால்) போன்ற வசதிகள் இதில் உள்ளன. வாட்ஸ்அப்பில் உள்ள வசதி களான இணையம் வழி உரையாடுவது, பிடிஎஃப் போன்ற கோப்புகளை அனுப்புவதும் பெறுவதுமான வசதிகளை இந்த புதிய செயலி கொண்டுள்ளது. பணியிடத்திலோ பணி சார்ந்தோ குழுவுக்கும் தனிப்பட்ட வருக்கும் இடையே உரையாடலை இந்தப் புதிய செயலி எளிதாக்கு கிறது.

ஃபேஸ்புக்கில் வேலை வாய்ப்புச் சேவை

ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்கா, கனடாவில் புதிய வேலைவாய்ப்பு சேவையைத் துவங்கி உள்ளது. வணிகம் தொடர்பான சந்தேகங் கள், வேலை தேடுவது போன்ற பணிகளையும் இனி ஃபேஸ்புக் வழி செய்யலாம் என்று கூறப் படுகின்றது. வேலை வாய்ப்பு விளம்பரங் களுக்கு பணம் அளித்தால் செய்தி பகுதியிலும் விளம்பரம் செய்யப்படும் என்று கூறப்படு கின்றது. ‘இப்போதே விண்ணப் பிக்கவும்’ போன்ற பொத்தான்கள் ஃபேஸ்புக் இணையத்தளத்தில் ஏற்கெனவே உள்ளன.

பிரம்மாண்ட வண்ணக்கலவையில் ‘சிங்கே’

ரேஷ்மி, ஈவா கல்லா கோவிந்தராஸ், ரேஷ்மா. படங்கள்: திமத்தி

அஷ்வினி செல்வராஜ்

ஐம்பது நடனக் குழுக்களில் எட்டாயிரம் நடனக் கலைஞர்களின் பங்கேற்பில் 45வது சிங்கே அணிவகுப்பு பிரமிப்பூட்டும் வகையில் வண்ணமயமாக நடைபெற்றது. ஆசியாவின் ஆக பிரம்மாண்டமான தெருக் கொண்டாட்டம் எனும் பெருமையுடையது சிங்கே அணிவகுப்பு. சாதனை அளவில் இந்த ஆண்டு மக்கள் கழகத்தின் அடித்தள அமைப்புகளைச் சேர்ந்த 1,000 பேரும் அணிவகுப்பில் பங்கேற்றனர். மேலும், சீனா, மலேசியா, தென் கொரியா, ஜாப்பான், இந்தோனீசியா, கம்போடியா, தாய்லாந்து, தைவான் முதலிய நாடுகளில் இருந்து 10 நடனக் குழுக்கள் அணிவகுப்பில் பங்கேற்றன.

ஆயர் ராஜாவில் பொங்கல் விழா

பாண்டான் கார்டன்சில் உள்ள ஆயர் ராஜா சமூக மன்றத்தில் இம்மாதம் 19ஆம் தேதி பொங்கல் விழா 2017 நடைபெறவுள்ளது. அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் $3 நுழைவுச் சீட்டுகளுக்கு ஆயர் ராஜா சமூக மன்றத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு திரு ராமுவை 82093215 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Pages