You are here

வாழ்வும் வளமும்

பங்குனி உத்திர திருவிழா

முருகக் கடவுளுக்காகக் கொண்டாப்படும் பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் யீ‌ஷூன் தொழிற்பூங்கா ‘ஏ’யில் அமைந்துள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணிக்குப் பால் குடம், பால் காவடிகளுடன் தொடங்கும் பங் குனி உத்திர விழாவில் இவ் வாண்டு கிட்டத்தட்ட 10,000 முதல் 12,000 பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது.

மனதைரியம் அளிக்கும் திருக்குறள்

படம்: தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்

தமிழின் சிறப்புமிக்க நூலாகக் கருதப்படும் திருக்குறள் மீது குழந்தைகளுக்குச் சிறு வயதிலே ஆர்வத்தை உண்டாக்குவதற்காக திருக்குறள் விழாவைத் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் கடந்த 31 ஆண்டுகளாக நடத்தி வரு கிறது. கடந்த சனிக்கிழமை நடந்த விழாவில் திருக்குறளின் முப்பால் களான அறத்துப்பால், பொருட் பால், காமத்துப்பால் ஆகியவற்றைப் பற்றி தங்களது அறிவுபூர்வமான, சுவாரசியமான பேச்சுடன் பார்வை யாளர்களைக் கவர்ந்தனர் நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளர்க ளான முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், திரு ஜோதி மாணிக்கவாசகம், முனைவர் க.ராஜகோபாலன் ஆகியோர்.

நாடே ஒன்றுசேர்ந்து உருவாக்கும் நினைவிடம்

கரையோரப் பூந்தோட்டங்களில் இடம்பெற்று வரும் கண்காட்சியின் ஓர் அங்கம். படம்: திமத்தி டேவிட்

சிங்கப்பூரை நிறுவியவர்களின் கொள்கைகளையும் கோட்பாடு களையும் நினைவூட்டும் நினை விடம் எப்படித் திகழவேண்டும் என்பதை மக்களே தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறது ‘வாட்டர்வியூ’ கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காட்சி. ‘பே ஈஸ்ட்’ தோட்டத்தில் நினைவிடம் உருவாக்கப்பட்டால் எத்தகைய அனுபவத்தைப் பெற லாம் என்பதை மக்கள் அறிந்து கொள்ள கரையோரப் பூந்தோட்டங் களின் ‘வாட்டர்வியூ’ கூடத்தில் இம்மாதம் 13ஆம் தேதி இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கண்காட்சிக்கு தமிழ் விளக்கங்களுடன் கூடிய ஒரு பிரத்தியேக சுற்றுலாவுக்குத் தமிழ் முரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

குடும்ப வன்முறை ஒழிப்பில் சுதா

சமுதாயத்தில் வன்முறையைக் களையும் போராட்டத்தில் முனைவர் சுதா நாயர். படம்: திமத்தி டேவிட்

யாஸ்மின் பேகம்

கணவரின் வன்முறையால் பாதிக் கப்பட்ட மனைவிக்கு முனைவர் சுதா நாயர் ‘அங் மோ கியோ குடும்ப சேவை மையத்தில்’ ஆலோசனை, ஆதரவு ஆகிய வற்றை அளித்து வந்த காலகட்டம் அது.

வீட்டில் எந்தவிதப் பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடி உதவிக்கு ‘999’ எனும் எண்ணை அழைத்து போலிசாருக்குத் தெரிவிக்கும்படி குடும்ப வன்முறையால் பாதிக் கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் பிள்ளைகளிடம் சுதா அறிவுரை கூறியிருந்தார்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடிப்புப் பயிலரங்கு

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடிப்புப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிலரங்கு இம்மாதம் 25ஆம் தேதி பிற்பகல் 1 மணியிலிருந்து 3 மணி வரை இரண்டாவது மாடியில் இருக்கும் நடவடிக்கை அறையில் நடைபெறும். பயிலரங் கில் பங்கெடுக்க விரும்புவோர் பயிலரங்கு நடைபெறும் நாளன்று பிற்பகல் 12.30 மணியிலிருந்து 1 மணிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். அல்லது [email protected] nhb.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.

வாட்ஸ்அப்: மீண்டும் ‘ஸ்டேட்டஸ்’ வசதி

குறுந்தகவல் செயலியான வாட்ஸ் அப்பில் ஏற்கெனவே வழங்கப் பட்டிருந்த ‘டெக்ஸ் ஸ்டேட்டஸ்’ வசதி மீண்டும் வழங்கப்பட் டுள்ளது. இதற்கான ‘அப்டேட்’ வாட்ஸ்அப் தரப்பில் வழங்கப் பட்டுவிட்டது. வாட்ஸ்அப்பில் பழையபடி ‘ஸ்டேட்டஸ் செட்’ செய்துகொள்ளும் வசதி முதலில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கியச் சோலை

சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின் 66வது இலக்கியச் சோலை நிகழ்ச்சி நாளை 19-3-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 101, பாலஸ்டியர் சாலை, சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கில் நடைபெறும். விழாவில் MGR நூற்றாண்டு விழா விருது பெற்ற திரு ஏ.பி.இராமன், கடந்த வாரம் நூல் வெளியிட்ட கவிஞர் முத்துப்பேட்டை மாறன் ஆகியோருக்குப் பாராட்டு விழா, ஓய்வுபெற்ற ஆசிரியர் துரை. முத்துக்கிருஷ்ணனின் ‘சிலப்பதிகார உரை’ ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவர்களுக்குப் புத்தகப் பற்றுச்சீட்டு பரிசு வழங்கப்படும்.

முதியோரைப் போற்றிய குடும்ப தினம்

படம்: ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) இம்மாதம் 12ஆம் தேதி பாசிர் ரிஸ் பூங்காவில் பல இனத்தவர் கலந்து கொண்ட குடும்ப தின விழாவைக் கொண் டாடியது. முதியோரைப் போற்றிப் பரா மரிப்பதன் அவசியத்தை வலியுறுத் துவது இவ் விழாவின் கருப் பொருள். ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் வசித்து வரும் முதியோர்கள் சிலர் இந்த நல் லிணக்க குடும்ப தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பல இன சமூகங்களைச் சேர்ந்த முதியவர்களுடன் சங்க உறுப்பினர்களும் மாணவர்களும் கலந்து உரையாடியதுடன், அவர்களுக்கு புத்தாடைகளையும் அன்பளிப்பாக வழங்கினர்.

இயற்கை எழில் கொஞ்சும் படகு வீடு சவாரி

கேரளாவில் ஆலப்புழா, குமரகோம் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகு வீடூகள் வாடகைக்கு கிடைக் கின்றன. மனதிற்கு ரம்மியமான காட்சி களுக்கு மத்தியில் நீர்நிலைகளின் அழகைக் கண்டு மகிழ ஆலப் புழாவின் கால்வாய் வழியாக வரும் காற்றை நுகர்ந்தபடி செல்ல நாட்டுப்படகைத் தேர்வு செய்யலாம். கால்வாய் பயணம் வேம்பநாடு ஏரியின் ஒரு பகுதியாக உள்ளது. கால்வாயின் ஓரமாகப் படகில் செல்லும்போது காணும் காட்சிகள் மனதைப் பறிக்கும். பருவத்திற்குத் தகுந்தாற்போல் படகு கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் சென்றால் கட்டணம் குறைவாக இருக்கும்.

‘டிரோன்’ ரக பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகம்

‘டிரோன்’ ரக பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகம்

பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நான்கு உந்து கருவிகளைக் கொண்ட ‘குவாட்காப்டர்’ எனப் படும் டிரோன்களின் பெரிய அளவிலான ‘இகாங்’ ரக வாகனமே இத்தகைய டாக்சி களாகப் பயன்படுத்தப்பட உள்ளன. பொழுதுபோக்கு டிரோன்களைத் தயாரித்து வந்த சீன நிறுவனம் ஒன்று இந்த விதமான வாகனங் களைத் தயாரிக்கிறது. பறக்கும் டாக்சி சேவை இவ்வாண்டு கோடைக்காலம் முதல் தொடங்க இருப்பதாக அண்மையில் நடைபெற்ற அனைத்துலக அரசாங்க உச்ச நிலை மாநாட்டில் துபாய் சாலைப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.

Pages