வாழ்வும் வளமும்

நீண்ட நேரம் அமர்ந்தே பணிபுரியும் பலருக்கும் உடலின் பல பாகங்களில் வலி ஏற்படும். இவற்றை கவனிக்காமல் விட்டால், நாட்பட்ட பிரச்சினைகள் உருவாகும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றைத் தடுக்க வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மூன்றில் ஒரு மரணத்துக்கு, இதயநோய் அல்லது பக்கவாதம் காரணமாக இருந்தது. மூத்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்நோய்களின் பாதிப்பு வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என கணிக்கப்படுகிறது.
ஒரு செயலில் வெற்றி பெற மன உறுதியும் அர்ப்பணிப்பும் முக்கியம் எனச் சொல்கிறார், தொடர்ந்து ஐந்து நாள்கள் காரில் தங்கி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள டோனி செபாஸ்டியன், 39.
புனித ரமலான் மாதத்தின் முதல் தராவீஹ் தொழுகைக்காக தீவெங்கிலுமுள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம் அன்பர்கள் திரண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
நோன்பு மாதத்தை முன்னிட்டு, சூரிய மின்னாற்றல் உதவியுடன் இயங்கும் சிங்கப்பூரின் முதல் ரமலான் சந்தை, பிடோக் நார்த் அவென்யூ 3ன் திறந்தவெளியில் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்று வருகிறது.