You are here

தலையங்கம்

காரை முந்தும் பேருந்து, ரயில்

சிங்கப்பூரில் பத்தில் ஆறு பேர் பேருந்து அல்லது ரயில் மூலம் வேலைக்குச் செல்கிறார்கள். கார் இருந்தும் அதை விட்டுவிட்டு பொதுப் போக்குவரத்தை நாடும் சிங்கப்பூரர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து தங்களுக்கு மனநிறைவாக இருக்கிறது என்று சொல்லும் மக்களின் விழுக்காடும் கூடி வருகிறது. கடந்த 2015ல் இது 91.8% என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் தேர்வில்  மோடி தேர்ச்சி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் 2016=2017ஆம் ஆண்டுக்கான தன்னுடைய வரவு செலவுத் திட்டத்தை சென்ற மாதம் 29ஆம் தேதி நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த அந்தத் திட்டம் பாஜக அரசின் மூன்றாவது நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா 1.25 பில்லியன் மக்களைக் கொண்ட நாடு என்பதாலும் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் என்ப தாலும் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் உலக அளவில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிற-து. 

கண்காணிப்பை முடுக்கி, கொசுக்களை முடக்குவோம்

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்பானிய மொழியில் டெங்கி என்பதற்கு “கவனமாக இருத்தல்” அல்லது “ஜாக்கிரதையாக இருத்தல்” என்ற பொருள் உண்டு. எவ்வளவு பொருத்தமான காரணப் பெயர்! முன்னெப்போதையும்விட இந்த ஆண்டில் சிங்கப்பூரர்கள் டெங்கி காய்ச்சல் குறித்தும் அதனை உண்டுபண்ணும் ஏடிஸ் கொசுக்கள் குறித்தும் மிகக் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு டெங்கி சம்பவங்கள் சாதனை அளவாக 30,000த்தைத் தொடக்கூடும் என தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்திருக்கிறது. இதற்கு முன் 2013ல் டெங்கி சம்பவங்கள் 22,000ஆக இருந்தன.

‘சிகிச்சை’ எடுத்துக்கொள்ளும் பொது மருத்துவமனை

புதிய பொதுமருத்துவமனைக்கான ஓவியரின் வடிவமைப்பு.

சிங்கப்பூர் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தயாராகிறது. அதன் ஒரு பகுதியாக தனது ஒரே சொத்தான தன் மக்களின் உடல்நலனைப் பாதுகாத்து, அவர்கள் முதுமை யிலும் இளமையுடன் திகழவேண்டும் என்று அது தொலை நோக்குத் திட்டங்களை வகுக்கிறது. ‘சிங்கப்பூரில் எதிர்கால சுகாதாரப் பராமரிப்பு என்பது தலைசிறந்த வசதிகளைக் கொண்டு இருக்கவேண்டும். தலை சிறந்த தொழில்நுட்பங்களை அரவணைக்கவேண்டும். அதேவேளையில் நோயாளிகளை நடுநாயகமாக மனதில் கொள்ளவேண்டும்’ என்ற சித்தாந்தத்துடன் அந்தத் திட்டங்களை அமலாக்க சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது.

கார்கள் மண்டும் காடல்ல, மக்கள் வாழும் நாடு

சிங்கப்பூரின் நிலவரம் கடந்த 50 ஆண்டுகளைப் போல இப்போது இல்லை. காலம் மாறுகிறது. பரிணாம வளர்ச்சி இடம்பெறுகிறது. மக்கள்தொகை கூடுகிறது. பொருளியல் அடியோடு உருமாறுகிறது. சுற்றுச்சூழல், மக்களின் மன நிலை, தேவைகள் எல்லாம் மாறுகின்றன. இந்த மாற்றங்கள், சிங்கப்பூரர் ஒருவர் தன் வீட்டை விட்டுக் கிளம்பி உலகம் முழுவதற்கும் வசதியாக, இடையூறு இல்லாமல், தேக்கமில்லாமல், தங்குதடை இல்லாமல் சென்று வந்து தன் வேலைகளைத் திறம்பட, ஆற்றல்மிக்க, நவீன முறைகளில் உடனுக்குடன் செய்யவேண்டிய தேவை யைக் கட்டாயமாக்கிவிட்டன. அதேபோல பொருளியல் காரியங்களையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

அரசியலுக்கும் தேவை பரிணாம வளர்ச்சி

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்

பிரிட்டனின் காலனியாக முன்பு இருந்துவந்த நாடுகள் உட்பட உலகில் இப்போது மக்களாட்சி நடக்கும் சுதந்திர நாடுகளின் அரசியல் முறைகளில் சிங்கப்பூருக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. சிங்கப்பூர் 1965ல் சுதந்திரம் அடைந்தது முதலே அதை ஆட்சிபுரிந்துவரும் மக்கள் செயல் கட்சி, முதல் 50 ஆண்டுகளில் வாக்களிப்பு மூலம் மக்களின் ஏகோபித்த முழு ஆதரவைப் பெற்றதால் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் குரல் ஒலிக்காத நிலை ஏற்பட்டது. என்றாலும், அரசாங்கத்தைத் தட்டிக்கேட்க குரல் ஒலிக்கவேண்டும் என்று ஏறக்குறைய ஒரு தலைமுறைக்கு முன்பே தானே முன்வந்து பல புதுமைகளைச் செய்த மக்களாட்சி நாடு சிங்கப்பூர்.

பாதாளம் நோக்கிப் பாயும் கறுப்புத் தங்கம்

கோப்புப்படம். ராய்ட்டர்ஸ்

உலகப் பொருளியலுக்கும் எண்ணெய் விலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்ணெய் தேவையில்லாத நாடே இல்லை என்ற அளவுக்கு அதன் தாக்கம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதனால்தான் அது கறுப்புத் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. சாதாரண தங்கத்தின் விலை வீழும்போது அனைவரும் குறிப்பாகப் பெண்கள், தங்கள் வயிற்றில் பால் வார்த்தது போல் உணர்வர். ஆனால் கறுப்புத் தங்கத்தின் விலை வீழும்போது, அதனையே மூலதனமாகக் கொண்ட பல நாடுகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும்.

தென்கிழக்கு ஆசியாவில் பயங்கரவாத தீ

எதிர்பார்த்ததைப் போலவே தென்கிழக்கு ஆசியாவில் பயங்கரவாத தீயைப் பற்றவைத்துவிட்டது ஐஎஸ் அமைப்பு. ஈராக்கிலும் சிரியாவிலும் தளம் கொண்டு இருந்தாலும் உலகத்தையே தனது பயங்கரவாதப் பசிக்கு இரையாக்க வேண்டும் என்ற அந்த அழிவு சக்தியின் ஆசைக்கு கடைசியாக இப்போது இந்தோனீசியா இலக்காகி இருக்கிறது. பிரான்ஸ், துருக்கி என்று வரிசையாக பல நாடுகளைப் பதம்பார்த்துவிட்டு இப்போது இந்த வட்டாரத்தில் அந்த அமைப்பு கைவரிசை காட்டியுள்ளது.

இன்றைய சிவப்புப் புள்ளி எதிர்கால பச்சைப் புள்ளி

உலகை அச்சுறுத்தி வரும் மாபெரும் பிரச்சினைகள் என்று பட்டியலிட்டால் தீவிரமடைந்து வரும் பயங்கரவாதமும் மோசமடைந்து வரும் சுற்றுச் சூழல் பாதிப்பும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும்.
பயங்கரவாதம் என்பது மனிதன், மனிதன் மீது தொடுக்கும் போர்; சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது மனிதன் இயற்கை மீது தொடுக்கும் போர். மனிதன் தொடுக்கும் இந்த இரண்டு போர்களிலுமே தோற்கப்போவது அதே மனிதன்தான்.

அதே உறுதி, அதே ஒற்றுமை; அடுத்த பயணம் தொடக்கம்

ஒற்றுமையான மக்கள், திட்டவட்டமான உறுதி - இரண்டும் இருந்தால் ஒரு நாடு வெற்றி பெற்று சாதனைகளைப் படைக்கும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு சிங்கப்பூர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதம், ஜித் மிரட்டல்கள், சகிப்புத்தன்மை இல்லாத போக்கு, இனப் பதற்றங்கள் ஒரு பக்கம்; அரசியல் பிணக்குகள், அவநம்பிக்கையுடன் கூடிய அடுத்த தலைமுறை இவை எல்லாம் மறுபக்கம் என்று உலகின் பல்வேறு சமூகங்களும் தேங்கி நிற்கின்றன.
வளங்கள் மண்டிக்கிடக்கின்ற, பெரும் நிலபரப்பைக் கொண்டுள்ள நாடுகள் பலவும் தடுமாறி நிற்கையில், மக்களை மட்டும் வளமாகக் கொண்டுள்ள சிங்கப்பூர் வாழ்ந்து காட்டுவது இதனால்தான்.

Pages