இந்தியா

ஸ்ரீநகர்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வாக்காளர்களுக்காக மட்டும் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட இருக்கிறது.
புதுடெல்லி: சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் ஆயுத உதிரிப் பாகங்களை நேட்டோ அணியில் இல்லாத நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஜெர்மனி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அவ்வகையில், நேட்டோ அணியில் இல்லை என்பதால் இந்தியாவால் ஜெர்மனியிடம் இருந்து சிறிய ரக ஆயுதங்களை வாங்க முடியாமல் இருந்தது.
புதுடெல்லி: டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் லவ்லி தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அர்வீந்தர், பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி உள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 233 வட்டப் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது. மேலும், வறட்சி, பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.
திருப்பதி: தெலுங்கு தேசக் கட்சியின் தேர்தல் பிரசார வாகனம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சிலர் தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.