You are here

சிங்க‌ப்பூர்

வேலையிடங்களில் 470 பாலர் பள்ளி நிலையங்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள சுமார் 470 பாலர் பள்ளி நிலையங்கள் வேலை யிடத்திலேயே அமைந்துள்ளன. வர்த்தகக் கட்டடங்கள், அர சாங்கக் கட்டடங்கள், தொழிற் பேட்டைகள் ஆகிய இடங்களில் அவ்வாறு பாலர் பள்ளிகள் அமைந் துள்ளன என்று நேற்று நாடாளு மன்றத்தில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார். வேலையிடங்களில் உள்ள பாலர் பராமரிப்பு நிலையங்கள் குறித்து நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா கேள்வி எழுப்பியிருந்தார். வேலையிடங்களில் பாலர் பள்ளி பராமரிப்பு வசதிகள் அமை வதை அமைச்சு ஊக்கமூட்டுமா என்றும் அவர் கேட்டார்.

ராணுவ முகாம்களில் கைபேசி: அமைச்சர் இங் விளக்கம்

சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம் களிலும் கட்டடங்களிலும் சேவையாளர்களுக்கு அதிக நீக்குப் போக்கையும் அதேநேரத்தில் பாதுகாப்பையும் சமநிலைப் படுத்தும் நோக்கத்தில் பாது காப்பிடங்களை வகைப்படுத்தும் நடைமுறை நற்பலன் தந்துள்ளது. அதனால் பாதுகாப்பிற்குப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்து இருக்கிறார்.

ஓய்வுகால சேமிப்பைக் கூட்ட மசே நிதி சட்ட மாற்றங்கள்

மத்திய சேமநிதி சட்டத்திற்கான மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி இருக்கின்றன. உறுப்பினர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டிகளின் கணக்குகளுக்குத் தொகையை மாற்றிவிடுவதற்கு முன் தங்கள் சொந்த மசே நிதிக் கணக்கில் தாங்கள் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையைக் குறைக்க இந்த மாற்றங்கள் வகை செய்கின்றன. இந்த மாற்றங்களை நாடாளு மன்றம் நிறைவேற்றினால் மேலும் பலர் தங்களுடைய முதியோர்கள் ஓய்வுகாலத்திற்கு அதிகம் சேமிக்க உதவ முடியும். மனிதவள அமைச்சு, இம்மாற்றங்களோடு வேலையிட பாதுகாப்பு, சுகாதார சட்டத்திற்கான மாற்றங்களையும் நேற்றுத் தாக்கல்செய்தது.

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் வடிவமைப்புக் கோளாறுகளைச் சரிப்படுத்த குத்தகை

புக்கிட் பாஞ்சாங் இலகுரக ரயில் சேவை கட்டமைப்பைச் செப்பனிட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்தக் கட்டமைப்பின் வடிவமைப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படும் என்று இரண் டாம் போக்குவரத்து அமைச்சர் இங் சீ மெங் நேற்று நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். இந்த ரயில் சேவை கட்டமைப் பில் அடிக்கடி கோளாறுகள் ஏற் பட்டதற்கு அதன் வடிவமைப்பே முக்கிய காரணமாக இருந்துள் ளது. கட்டமைப்பைச் செப்பனிடு வதற்கான ஏலக்குத்தகையைத் தாக்கல் செய்யும்படி அரசாங்கம் இந்த ஆண்டு இறுதியில் அறி விப்பு விடுக்கும். புக்கிட் பாஞ்சாங் இலகுரக சேவை அமைக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன.

அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளியேறும் அதிபர் ஹலிமா

தமது பாதுகாப்புக்குப் பொறுப் பேற்றுள்ள பாதுகாப்பு அமைப்பு களின் ஆலோசனையின்பேரில், யீ‌ஷூன் அடுக்குமாடி வீட்டி லிருந்து வெளியேறுகிறார் அதிபர் ஹலிமா யாக்கோப். பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, “தற்போதைய வீட்டில் திருவாட்டி ஹலிமா தொடர்ந்து தங்கியிருந் தால், அவரது பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் பாதுகாப்பு அமைப்புகள் பல சவால்களை எதிர்நோக்கும்,” என திருவாட்டி ஹலிமாவிடம் தெரியப்படுத்திய தாக உள்துறை அமைச்சுக் கூறியது. “வேறிடத்திற்குச் செல்வது பற்றி பரிசீலிக்குமாறு அதிபரிடம் உள்துறை அமைச்சு ஆலோ சனை கூறியுள்ளது.

புகைப்பிடிக்க வயது வரம்பு 21 ஆக உயரலாம்

புகைப்பதற்கான குறைந்தபட்ச வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகப் புதிய மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. புகையிலை (விளம்பர, விற் பனை கட்டுப்பாடு) சட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைக்கும் புதிய மசோதா, மின்-சிகரெட் போன்ற போலி புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டையும் சட்டவிரோதமாக்கும். சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் முதல் வாசிப்புக்காக மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதா வேறொரு நாடாளுமன்ற அமர்வின்போது விவாதிக்கப்படும்.

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிக்குப் புதிய அதிகாரம்

பொது செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்க நிதி உதவி பெறும் அரசுசாரா அமைப்புகளைத் தணிக்கைச் செய்யும் அதிகாரம் தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. கணக்குத் தணிக்கைச் சட்டத்திற்கான மாற்றங்களை நாடாளுமன்றம் நேற்று நிறைவேற்றியது. அந்த மாற்றங்கள் இத்தகைய அதிகாரத்தை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிக்கு வழங்குகின்றன. இந்த விவரங்களை நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று மன்றத்தில் தெரிவித்தார். தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் ஆண்டுதோறும் அரசாங்க அமைப்புகளைத் தணிக்கைச் செய்கிறது.

1,800 வெளிநாட்டு மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளியில் இடமில்லை

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடக்கப்பள்ளி முதல் வகுப்பில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்த சுமார் 1,800 வெளிநாட்டு மாணவர்கள் நிராகரிக்கப்பட்டதாக கல்விக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திருவாட்டி லோ யென் லிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “நம்முடைய அரசாங்க பள்ளிக்கூட முறை சிங்கப்பூரர் களான மாணவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது,” என்று மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி உறுப்பினர் ஓங் டெங் கூனுக்கு அளித்த பதிலில் திருவாட்டி லோ குறிப்பிட்டார். “தகுதி உள்ள வெளிநாட்டு மாணவர்கள் சிங்கப்பூர் பள்ளி களில் படிப்பதை நாம் வரவேற்கிறோம்,” என்று அவர் குறிப் பிட்டார்.

அடிப்படை வசதிகளை பாதுகாக்க புதுச் சட்டம்

பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து சிங்கப்பூரின் முக்கியமான அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கிறது. சிங்கப்பூரின் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளைப் பாதுகாக்க மிகவும் முறைப்படுத்தப்பட்ட ஒரு வழி தேவைப்படுகிறது என்று இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தில் ‘அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் பாதுகாப்புச் சட்டம்’ என்ற ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் அறிவித்தார்.

Pages