You are here

சிங்க‌ப்பூர்

நாட்டின் உயரிய விருதைப் பெறுகிறார் எடி டியோ

திரு எடி டியோ

இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு அரசாங்கம் வழங்கும் விருதுகள் பட்டியலில் முதல் இடத்தைப் பெறுகிறார் பொதுச் சேவை ஆணையத்தின் தலைவர் திரு எடி டியோ சான் செங். நாட்டின் ஆக உயரிய விரு தான ‘தி ஆர்டர் ஆஃப் நீல உத்தமா (முதல் வகுப்பு)’ விருதை அரசாங்கம் அவருக்கு வழங்கி யுள்ளது. 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பொதுச் சேவை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் திரு டியோ, லீ குவான் இயூ உபகாரச் சம்பள நிதி, லீ குவான் இயூ பரிமாற்ற ஆய்வாளர் திட்டம், டாக்டர் கோ கெங் சுவீ உபகாரச் சம்பள நிதி, எஸ்.

‘சவால்களைச் சிறப்பாக கையாளும் விமானத் துறை’

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையம் நேற்று காலையிலிருந்து இரண்டு வாரங் களுக்குப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப் பட்டுள்ளது. காலை 9 மணிக்குத் திறக்கப்பட்ட முனையத்திற்கு முதல் ஒரு மணி நேரத்தில் 1,200 பேர் வருகையளித்தனர். நான்காவது முனையத்திற்கு வருகையளித்த உள்கட்டமைப் புக்கான ஒருங்கிணைப்பு அமைச் சரும் போக்குவரத்து அமைச்ச ருமான கோ பூன் வான், விமான போக்குவரத்து சிங்கப்பூருக்கு முக்கியமான ஒரு துறை என்றும் உலகளாவிய நிலையில் அதில் நாம் போட்டியிட முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

பிலிப்பீன்சுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய ஆயதப் படை

தெற்கு பிலிப்பீன்ஸில் உள்ள மராவியில் நிலவி வரும் பதற்றநிலையின் காரணமாக வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 100,000 வெள்ளி பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்களை சிங்கப்பூர் ஆயுதப் படை விமானம் மூலம் கொண்டு சென்றுள்ளது. இதுகுறித்து நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப் பிட்டிருந்தார். சிங்கப்பூர் ஆகாயப் படையைச் சேர்ந்த சி=130 ரக விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு பிலிப்பீன்ஸை நோக்கி நேற்று அதிகாலை 6 மணிக்குப் புறப் பட்டுச் சென்றதாக அவர் தெரி வித்தார்.

ஸ்கூலிங், யிப் பின் சியூவின் பெயர்களில் ஆர்க்கிட் மலர்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பூமலை தாவரவியல் மையத்தில் உள்ள இரண்டு வகை ஆர்க்கிட் மலர்களுக்கு உள்ளூர் நீச்சல் நட்சத்திரங் களான ஜோசஃப் ஸ்கூலிங், யிப் பின் சியூ ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் வண்ணத் துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற ஸ்கூலிங்கையும் அதே ஆண்டில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் சிங்கப் பூருக்கு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற யிப்பையும் கௌரவிக்கும் வண்ணம் மலர் களுக்கு அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற அவமதிப்பு; வழக்கறிஞருக்கு $6,000 அபராதம்

வழக்கறிஞர் யூஜின் துரைசிங்கம்.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தனது கட்சிக்காரருக்கு மரணதண்டணை நிறைவேற்றப்படும் நாளுக்கு முந்தைய நாள் இரவு மனத்தளவில் துவண்டுபோன வழக்கறிஞர் ஃபேஸ்புக் பக்கத்தில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் கருத்து கூறிய வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

வர்த்தகர் மீது ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் ‘பிபி’ பெட்ரோலிய நிறுவன நிர்வாகி ஒருவருக்கு மொத்தம் 3.95 மில்லியன் யுஎஸ் டாலர் (5.4 மி. வெள்ளி) லஞ்சம் வழங்கியதாக வர்த்தகர் ஒருவர் மீது நேற்று குற்றம் சாட்டப் பட்டது. ‘பசிபிக் பிரைம் டிரேடிங்’ என்ற எண்ணெய் வர்த்தக நிறு வனத்தின் நிர்வாக இயக்கு நரான 55 வயது கோ செங் லீ, 19 சம்பவங்களில் ஒவ்வொரு முறையும் ‘பிபி’ கடற்துறை எரிபொருள் நிறுவனத்தின் அப் போதைய வட்டார இயக்குநரான கிளாரன்ஸ் சாங் பெங் ஹோங்குக்கு 100,000 யுஎஸ் டாலர் முதல் 350,000 யுஎஸ் டாலர் வரை லஞ்சம் வழங் கியதாகத் தெரிவிக்கப்பட்டது. 2006 ஜூலைக்கும் 2010 ஜூலைக்கும் இடையே இந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

வெஸ்டர்ன் யூனியன் கிளையில் கொள்ளை; சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகப் பேர்வழி

உபி அவென்யூ 1ல் உள்ள வெஸ் டர்ன் யூனியன் பணம் அனுப்பும் சேவை கிளையில் ஆயுதம் தாங்கிய கொள்ளையில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள 58 வயது ஆடவர் நேற்று குற்றச்சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார். ஆகஸ்ட் 1ஆம் தேதி கொள்ளை யடித்துவிட்டு தப்பியோடிய ஹ‌ஷிம் ஹம்சாவை காவல்துறையினர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தைக் காட்டி ஊழியரை மிரட்டி $4,000 கொள்ளையடித்துத் தப்பியோடி விட்டதாக இவர் மீது ஆகஸ்ட் 5ஆம் தேதி நீதிமன்றத் தில் குற்றம் சாட்டப்பட்டது.

மரபுடைமைக் குறியீடு திறப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னோடி தேசிய சேவையாளர் களைக் கௌரவிக்கும் வகையில் பழைய தாமான் ஜூரோங் முகாம் இருந்த இடத்தில் மரபுடைமைக் குறியீடு நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு தாமான் ஜூரோங் கிரீன்ஸ் வட்டாரத்தில் சுமார் 600 தாமான் ஜூரோங் குடியிருப்பாளர்களும் முன்னோடி தேசிய சேவையாளர் களும் நேற்று கூடினர்.

தேசிய தின கருப்பொருள் கொண்ட ‘சூ‌ஷி’ விற்றதற்கு மன்னிப்பு

சிங்கப்பூரின் 52வது தேசிய தினத்தை முன்னிட்டு சூ‌ஷி விற்பனையாளர் ‘மாகி- சான்’ தனது சிறப்பு கோழி சார் சியூ சூ‌ஷிக்கு ‘மாகி கித்தா’ என்று பெயர் சூட்டியுள்ளது. சிங்கப்பூரின் தேசிய கீதத்தில் வரும் ‘மாரி கித்தா’ எனும் முதல் இரண்டு சொற்களைக் கொண்டு அவர்கள் அப்பெயரைச் சூட்டியுள்ளனர். ‘எங்கள் சூ‌ஷி’ என்ற பொருள் கொண்டு விளையாட்டுத்தனமாக அவ்வாறு செய்ததாக நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Pages