You are here

சிங்க‌ப்பூர்

சீனாவில் நிலநடுக்கம்: சிங்கப்பூர் பயணிகள் பத்திரமாக வெளியேறினர்

சீனாவில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த ஜுசியாவ்ஜோவ் வட்டாரத்தைவிட்டு சிங்கப்பூரை சேர்ந்த இரண்டாவது சுற்றுப் பயணிகள் குழு வெளியேறிவிட்டது. அந்தக் குழுவில் 20 பேர் இருந்ததாகவும் அவர்களில் யாருக்கும் காயம் இல்லை என்றும் எல்லாரும் நிலநடுக்கப் பகுதியைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் சான் பிரதர்ஸ் சுற்றுலா நிறுவனம் தெரிவித்ததாக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

மின்னிலக்க நாணயங்களில் முதலீடு: பயனீட்டாளர்களுக்கு எச்சரிக்கை

மின்னிலக்க நாணயங்கள் அல்லது டோக்கன்கள் அடிப்படையிலான முதலீடுகளைக் கொள்முதல் செய்யலாம் என்று பரிசீலிக்கின்ற வாடிக்கையாளர்கள் அது பற்றி மறுபடியும் சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும். இத்தகைய முதலீடுகள் குறித்து வர்த்தக விவகாரத் துறையும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் எச்சரித்து இருக்கின்றன. இவை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. மின்னிலக்க டோக்கன்கள், நிகர்நிலை நாணயம் ஆகியவை தொடர்பான முதலீட்டு திட்டங்களில் ஆபத்துகள் இருப்பதாக இந்த இரண்டு அமைப்புகளும் வாடிக்கை யாளர்களுக்கு விடுத்த கூட்டறிக்கையில் எச்சரித்து இருக்கின்றன.

தைவான் ஆடவர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

தைவானைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. போலிஸ் அதிகாரிகள் போல் நடித்து வாடிக்கையாளர்களை ஏமாற்றும் ஒரு சதித்திட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. வாங் வெய்-சியாங், 23, வாங் வெய்=மிங், 25, ஆகிய அந்த இருவர் மீதும், திருட்டுப் பணத்தை நேர்மையற்ற முறையில் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.

கார்களை வாங்க, விற்க டிபிஎஸ் வங்கியின் இணையச் சந்தை

டிபிஎஸ் வங்கி கார்களுக்கான இணையச் சந்தை ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. சிங்கப்பூரில் ஒரு வங்கி இத்தகைய ஒரு சந்தையை இதுவரையில் தொடங்கியதில்லை. தங்களுடைய கார்களை விற்க அல்லது கார் வாங்க விரும்புகின்றவர்களுக்கு ஒரே இட வசதியை இந்த இணையச் சந்தை வசதி வழங்குகிறது. சிங்கப்பூரில் செயல்படும் வங்கிகள் தங்களுடைய பணத்தைக் குறிப்பிட்ட நிதி சாராத தொழில்களில் முதலீடு செய்யலாம் என்று அண்மையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் யோசனை ஒன்றை முன்வைத்தது. இதன் தொடர்பில் குறிப்பிட்ட விதிமுறைகளைத் தளர்த்தலாம் என்றும் அது கூறியிருந்தது.

பலத்த பாதுகாப்பு, தணியாத உற்சாகம்

 படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டின் தேசிய தின அணி வகுப்புக்காகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோ திலும் அணிவகுப்பைக் காண வந்தோரில் பலரும் உற்சாகம் சிறிதளவும் குன்றாமல் தேசிய நாளைக் கொண்டாடினர். சிலர் பிற்பகல் 2 மணிக்கே வரிசைபிடித்து நிற்கத் தொடங்கி விட்டனர். கடற்துறை செயற்பாட்டு நிர் வாகியான 29 வயது கய்ருல் அசர் ரொசாவி, மிதக்கும் மேடை யின் நுழைவாயில் பிற்பகல் 3 மணிக்குத் திறக்கப்படுவதற்கு முன்பே மரினா ஸ்குவேரை சென் றடைந்தார். அணிவகுப்பு மாலை 5.30 மணியளவில் தொடங்கியது.

‘நாட்டுப்பற்றின் வெளிப்பாடு, வளர்ச்சியின் அடையாளம்’

தேசிய தினக் கொண்டாட்டம் சிங்கப்பூர் உணர்வின் வெளிப் பாடு, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அடையாளம் என்று புகழாரம் சூட்டினார் அதிபர் டோனி டான் கெங் யாம். அணிவகுப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் டான், “பங்கேற்பாளர் களின் உற்சாகமும் ஈடுபாடும் பாராட்டிற்குரியது. ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்பட்டால் பொருளியல் நிலையின்மை, பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர் கொள்ளலாம். நாடு தொடர்ந்து முன்னேறும்,” என்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொண்டாட்டம், குதூகலம், கும்மாளம்

தேசிய தின அணிவகுப்பை மரினா பே மிதக்கும் மேடையில் அமர்ந்து பார்க்க முடியாத பொதுமக்கள் மெர்லயன் பூங்காவுக்கு அருகில் பெருந்திரளாகக் கூடி, அணிவகுப்பைப் பார்த்து ரசித்தனர்.

மரினா பே மிதக்கும் மேடையில் அரங்கேறிய இவ்வாண்டின் தேசிய நாள் அணிவகுப்பைக் காண சிவப்பு, வெள்ளை நிறங் களில் ஆடையணிந்த மக்கள் நேற்று மதியம் 3.30 மணிக்குள் அரங்கத்தை நிறைக்கத் தொடங்கிவிட்டனர். வரிசை நீளமாவதற்குள் உள்ளே நுழையவும் பொழுது சாய்வதற்குள் அருமையான புகைப்படங்கள் எடுக்கவும் விரும்பிய பலரும் முன்கூட்டியே ஆர்வத்துடன் கூடினர்.

மார்சிலிங்கில் ஒன்றிணைந்த சமூகம்

மார்சிலிங்கில் நேற்று நடந்த தேசிய தினக் கொண்டாட்டத் தில் எல்லா இன மக்களும் ஒன்றாகத் திரண் டனர். அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடத் தயாராகி வரும் திருவாட்டி ஹலிமா யாக்கோப், மார் சிலிங்-இயூ டீ அடித்தள ஆலோசகர் பொறுப்பேற்று இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸாக்கி முகம்மது உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடும்பத்துடன் பகிர்ந்துகொண்ட தேசிய உணர்வு

சிவபாலன், கலைவாணி தம்பதியினர் குழந்தைகளுடன் தேசிய தினக் கொண்டாட்டத்தைக் கண்டு மகிழ்ந்தனர். இவர்களைப் போலவே ஏராளமானோர் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்து சிங்கப்பூரின் 52வது பிறந்த நாளை ஒன்றுகூடிக் கொண்டாடினர். தேசத்தின் பிறந்த நாளை தங்களது குடும்பத்தில் ஒருவரின் பிறந்த நாள் போல் எண்ணி முழுமனதுடன் கொண்டாடியதை வந்து குவிந்த மக்களின் முகங்களில் காண முடிந்தது. படம்: திமத்தி டேவிட்

மார்சிலிங் அடித்தள ஆலோசகராகப் பொறுப்பேற்கிறார் ஸாக்கி முகம்மது

சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸாக்கி முகம் மதுவுக்கு (படம்) கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள் ளது. மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் பதவியி லிருந்து திருவாட்டி ஹலிமா யாக்கோப் விலகி யதை அடுத்து அக்குழுத் தொகுதியில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் கள் மட்டுமே உள்ளனர். திருவாட்டி ஹலிமா வின் மார்சிலிங் தொகுதி யின் அடித்தள ஆலோசக ராக 42 வயது திரு ஸாக்கி நியமிக்கப்பட்டுள் ளார் என்று மக்கள் கழகம் நேற்று வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிட்டது.

Pages