You are here

சிங்க‌ப்பூர்

புதிய தனியார் வீடுகளுக்குத் தேவை 34% குறைந்தது

சிங்கப்பூரில் புதிய தனியார் வீடுகளுக்கான தேவை ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் குறைந்துவிட்டது. அந்த மாதத்தில் விற்பனைக்கு வந்த வீடுகள் குறைவாக இருந்தன. வீடுகளைக் கட்டி விற்பவர் கள் மே மாதம் 1,024 புதிய வீடு களை விற்றனர். இது ஏப்ரல் மாதத்தில் விற்கப்பட்ட 1,558 வீடுகளுடன் ஒப்பிடுகையில் 34% குறைவு என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறி யது. சென்ற ஆண்டு மே மாதம் 1,058 வீடுகள் விற்கப்பட்டன. புறநகர் பகுதிகளில் அமைந் துள்ள புதிய வீடுகளில் மே மாதம் 617 வீடுகள் விற்கப்பட் டன. நகரின் விளிம்புப் பகுதி யில் 341 வீடுகளும் மைய வட்டாரத்தில் 66 வீடுகளும் மே மாதம் கைமாறின.

போலிஸ் அதிகாரி உட்பட ஐவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

லஞ்ச ஊழல் தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் களில் ஒரு போலிஸ் அதிகாரியும் முன்னாள் போலிஸ் அதிகாரிகள் இரண்டு பேரும் அடங்குவர். மூத்த ஸ்டாஃப் சார்ஜண்ட் சுக்கோர் வார்ஜி, முன்னாள் மூத்த ஸ்டாஃப் சார்ஜண்ட் டான் பீ சோங், முன்னாள் போலிஸ் இன்ஸ்பெக்டர் லாம் ஜியோ லோங் டெரன்ஸ் ஆகிய மூவரும் லஞ்சம் வாங்கிக்கொண்டு அங்கீகரிக்கப் படாத தகவல்களைத் தெரிவித்த தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டானை கைதுசெய்ய சுக்கோர் தவறிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு கூறுகிறது. டானுக்கு அங்கீகரிக் கப்படாத தகவல்களைக் கொடுத்த தாக அவர் மீதான மற்றொரு குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

பிரதமர்: உடன்பிறப்புகளின் அறிக்கை வருத்தமளிக்கிறது

தனிப்பட்ட குடும்ப விவகாரங்களை பொதுப்படையாக்கியுள்ள தமது உடன்பிறப்புகளின் அறிக்கை ஏமாற்றத்தையும் வருத்­தத்தையும் அளிப்பதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். “அவர்கள் தெரிவித்த புகார்­கள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. நானும் என் மனைவி ஹோ சின்னும் இந்தப் புகார்களை நிராகரிக்கிறோம்.  குறிப்பாக, என் மகனை அரசியலில் ஈடு படுத்துவதில் எனக்கு விருப்பம் இருப்­ப­தாகக் கூறுவது அபத்தமான புகார்,” என்று திரு லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார்.

கதவுகளை மூடிய ‘பைட் அகாடமி’

நிதித் தொடர்பான தொழில்நுட்பம், தகவல் தொகுப்பு அறிவியல் பாடத்திட்டங்களை வடிவமைப்பது தொடர்பான கல்வியைப் போதிக் கும் பயிலகமான ‘பைட் அகாடமி’ தனது கதவுகளை மூடியுள்ளது. நியூயார்க் நகரில் தலைமைய கம் கொண்டுள்ள இந்தப் பயில கம் கடந்த நவம்பரில் சிங்கப்பூரில் தனது கிளையை விரிவுபடுத்திய ஒருசில மாதங்களிலேயே செயல் பாடுகளை நிறுத்திக்கொண்டுள் ளது. தகவல், தொடர்பு ஊடக மேம் பாட்டு ஆணையத்தின் தொழில் நுட்பத்துறை ஈடுபாடு, வேலை அமர்வுத் திட்டத்தின்கீழ் செயல் பட்டு வந்த ‘பைட் அகேடமி’, தனியார் கல்விக்கான குழுவுடன் தான் செய்த பதிவைக் கடந்த மார்ச் மாதத்தில் முடித்துக் கொண்டது.

2017 வளர்ச்சி 2.5% வரை இருக்கும்

சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டு 2.5% வரை வளரும் என்று பகுப்பாய்வாளர்கள் கணித்து இருக்கிறார்கள். ஏற் கெனவே அவர்கள் 2.3%தான் பொருளியல் வளர்ச்சி இருக்கும் என்று முன்னுரைத்தனர். சிங்கப் பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்ட காலாண்டு ஆய்வு முடிவின் மூலம் இது தெரிய வருகிறது. சிங்கப்பூர் பொருளியல் 2018ல் 2.5% வளரும் என்பது அவர் களின் புதிய கணக்கீடாக இருக் கிறது. இந்த வளர்ச்சி 2.4% இருக்கும் என்று ஏற்கெனவே அவர்கள் தெரிவித்து இருந்தனர். சிங்கப்பூர் பொருளியல் அண் மைய காலத்தில் முன்னுரைப்பு களைவிட நல்ல முறையில் வளர்ச்சிகண்டு வருகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 2.7% ஆக இருந்தது.

அமைச்சர் யாக்கூப்: பயங்கரவாத மிரட்டலை சமாளிக்க முஸ்லிம் சமூகமும் பாதுகாப்பு அமைப்புகளும் சேர்ந்து செயல்படுகின்றன

அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம். கோப்புப்படம்

தீவிரவாத மனப்போக்கைக் கொண்ட சிங்கப்பூரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது, சிங்கப் பூர் கடுமையான பயங்கரவாத மிரட்டலை எதிர்நோக்குகிறது என் பதை நினைவூட்டுவதாக முஸ்லிம் விவகார பொறுப்பு அமைச்சர் டாக் டர் யாக்கூப் இப்ராஹிம் தெரி வித்தார். இந்த மிரட்டலைச் சமாளிக்க சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகமும் பாதுகாப்பு அமைப்புகளும் சேர்ந்து கடுமையாகப் பாடுபட்டுவருவதாக அவர் கூறினார். தீவிரவாத மனப்போக்கைக் கொண்டிருந்ததற்காக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் முதன்முதலாக ஒரு பெண் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.

முன்னோடி தலைமுறையினர் மருத்துவக் கணக்கில் $180மி.

ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் கோப்புப்படம்

முன்னோடி தலைமுறை உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டில் அவர்களின் மருத்துவச் சேமிப்புக் கணக்கில் (மெடிசேவ்) சுமார் $180 மில்லியன் வரவு வைக்கப்படும் என்று நிதி அமைச்சு நேற்று அறிவித்தது. இதுபற்றி அவர்களுக்கு வரும் வாரத்தில் கடிதங்கள் வரும் என்றும் அமைச்சு கூறியது. முன்னோடி தலைமுறையின ரின் மருத்துவக் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகை வருடாந்திர அடிப்படையில் ஆயுள் முழுவ தற்கும் $200 முதல் $800 வரை இருக்கும். இந்த 2017வது ஆண்டில் 83 அல்லது அதற்கும் அதிக வய தாகும் முன்னோடி தலைமுறை யினர் கூடினபட்சமாக $800 பெறுவார்கள்.

ஒத்துழைக்க சிங்கப்பூர் - சீனா இணக்கம்

படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூரும் சீனாவும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டு தங்களுக் கிடைப்பட்ட தொடர்புகளை மேம் படுத்த இணங்கி இருக்கின்றன. நிதித்துறை ஒத்துழைப்பை அதி கரிக்கவும் பயிற்சி, தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் அவை இணங்கி இருக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை இணைப் பதற்கு சீனா பிரம்மாண்டமான திட்டம் ஒன்றை தீட்டி இருக்கிறது. அந்தத் திட்டத்திற்கு ‘பிஆர்ஐ’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இறால் முட்டை ஏற்றுமதி முறியடிப்பு

பிடிபட்ட முட்டைகள் பாந்தெனில் இருக்கும் கெரிட்டா கடலில் விடப்பட்டன. படம்: புளூம்பர்க்

இந்தோனீசியாவிலிருந்து பில்லியன் கணக்கான ரூப்பியா மதிப்புள்ள இறால் முட்டைகளை சிங்கப்பூருக்கு சட்ட விரோதமாக ஏற்றுமதிச் செய்ய இடம்பெற்ற ஒரு முயற்சியை இந்தோனீசியாவின் தேசிய போலிஸ் சிறப்பு குற்றவியல் இயக்குநரகம் முறியடித்து இருவரை விசாரிக்கிறது. இந்தோனீசியாவின் பாந்தெனில் இருக்கும் செங்காரெங் நகரில் உள்ள அனைத்துலக விமானநிலையம் வழியாக அந்த முட்டைகள் ஏற்றுமதியாகவிருந்தன. “எட்டு கைப்பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டிருந்த 208,756 முட்டைகளை நாங்கள் கைப்பற்றி உள்ளோம்,” என்று அந்த இயக்குநரகத்தின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் புர்வாடி தெரிவித்து இருக்கிறார்.

காயம் அடையும் ஊழியருக்கு காப்புறுதி பாதுகாப்பு இல்லை: இரண்டு முதலாளிகள் மீது குற்றச்சாட்டு

ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் கோப்புப்படம்

தங்களுடைய 25 ஊழியர்களுக்கு வேலையிட காயத்திற்கான இழப் பீட்டுப் பாதுகாப்புக் காப்புறுதியை வாங்கத் தவறிவிட்டதாக இரண்டு முதலாளிகள் மீது குற்றம் சுமத் தப்பட்டு இருக்கிறது. எக்ஸ்ட்ரோவர்ட் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் மீதும் ரிட்ஜ்வே மரைன் & கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தின் உரிமை யாளரான சூரியகுமார் ரிட்ஜ்வே ராமையா என்பவர் மீதும் ஜூன் 8ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது. வேலைபார்த்தபோது காயம் அடைந்த ஊழியர் ஒருவருக்கு இழப்பீடு கொடுக்கவில்லை என்று கூறும் ஒரு குற்றச்சாட்டையும் சூரியகுமார் ரிட்ஜ்வே எதிர்நோக்கு கிறார்.

Pages