You are here

சிங்க‌ப்பூர்

ஜயண்ட்-17 இயந்திரங்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜயண்ட் பேரங்காடி நிறுவனம் சிங்கப்பூரிலேயே ஆகப் பெரிய, பலதரப்பட்ட பொருட்களைத் விற்கும் இயந்திர வளத்தை தான் அமைத்திருப்பதாக அறி வித்து இருக்கிறது. ‘வெண்ட்மார்ட்’ எனப்படும் அந்த 17 இயந்திரங்கள் கூடம் தெம்பனிசில் இருக்கும் ஜயண்ட் பேரங்காடியின் நுழைவாயிலில் வைக்கப்படும். மேலும் ஐந்து இயந்திரங்கள் ஜூரோங்கில் இருக்கும் ஐஎம்எம் கட்டடத்தில் உள்ள இந்தப் பேரங்காடியில் டிசம்பர் 31 வரை செயலில் இருக்கும்.

கோலாலம்பூர்=சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம் தொடர்பான மோசடி

கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதி விரைவு ரயில் திட்டத்தை மைய மாக வைத்து பல மோசடிகள் நடந்து வருகின்றன என்றும் இந்த மோசடியால் பலர் பாதிக்கப்படலாம் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. மோசடிக்காரர்கள் பொய்யான குத்தகைகள், முறிகள், கட்டுமான வரைபடங்கள் போன்றவற்றைக் காட்டி, தங்கள் ‘திட்டங்களில்’ முதலீடு செய்யுமாறு அப்பாவி மக்களை ஏமாற்றக்கூடும் என்று ஆணையம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான எச்சரிக்கையை விடுத்தது.

உதவி தேவைப்படுவோரைச் சென்றடையும் குடியிருப்பாளர் தொண்டூழிய முயற்சி

படம்: சாவ் பாவ்

உதவி தேவைப்படும் மோல்மென்= கேர்ன்ஹில் குடியிருப்பாளர்கள் தங்கள் திறன்பேசி மூலம் இனி உதவி பெறலாம். இவர்களுக்கு உதவி செய்யும் நிலையில் உள்ள தொண்டூழியர் களை இவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ‘மோ=-கே கேர்ஸ்’ எனும் புதிய திறன்பேசி செயலி இம்மாதப் பிற்பகுதியில் அறிமுகம் காணவுள்ளதாக தஞ் சோங் பகார் குழுத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் மோல் மென்-கேர்ன்ஹில் தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் தெரிவித்துள்ளார். கல்வி துணைப் பாட வகுப் புகள், முடி வெட்டுதல், ஆகியவற் றுடன் நட்பு நாடி வருவோருக்கும் உதவி வழங்கப்படும்.

மின்னிலக்கமுறையில் கார் நிறுத்தப் பேட்டையில் கட்டணம் கட்ட வசதி

வாகனமோட்டிகள் நாளை முதல், பொது கார் நிறுத்தும் இடங்களில் கைபேசியில் பதிவிறக்கம் செய்த ‘parking.sg’ செயலி (படம்) மூலம் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த ‘parking.sg’ செயலியை ‘ஆப்பிள் பிளேஸ்டோர்’, ‘கூகள் பிளேஸ்டோரிலிருந்து’ பதிவிறக் கம் செய்யலாம். பொது கார் நிறுத்தப் பேட்டை யில் கிட்டத்தட்ட 1,100 இடங்களில் மக்கள் தங்கள் கார்களை நிறுத்த தற்பொழுது தாள் கட்டணக் கூப் பன்களைப் பயன்படுத்துகிறார்கள். இனி வாகனமோட்டிகள் மின்னி லக்க முறையில் செயலி மூலம் கடன் அட்டை கொண்டோ, பற்று அட்டை கொண்டோ கட்ட ணத்தைச் செலுத்தலாம்.

வளங்களைச் சாதகமாக்க சேவைகள் இணைக்கப்படலாம்

புதிய ரயில்தடங்கள் திறக்கப்பட்ட பிறகு பேருந்து சேவைகள் இணைக்கப்படலாம், குறைக்கப்பட லாம் அல்லது பாதை மாற்றப்பட லாம். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பயண முறை உரு மாறி வருவதால், பேருந்து வளங் களைச் சாதகமாக்க இவ்வாறு செய்வது அவசியம் என போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று கூறினார். மாற்றத்திற்கு உட்படும் பேருந்து பயணப் பாதைகளின் குடியிருப்பாளர்கள் இம்மாற்றத்தை வரவேற்பதில்லை என்றார் அவர். பேருந்து சேவைகளைத் தக்க வைக்குமாறு பொறுப்பமைப்புகளை ‘வட்டாரக் குடியிருப்பாளர்கள் நெருக்குகிறார்கள்’ என்றார் அவர். “ஆனால், குறைப்பதற்கான அவசியம் முக்கியமானது,” என்று திரு கோ வலியுறுத்தினார்.

துர்நாற்றம் பாசிர் கூடாங்கில் இருந்து வந்தது

திங்கட்கிழமை சிங்கப்பூரில் ஏற் பட்ட துர்நாற்றத்திற்குக் காரணம் ஜோகூர், பாசிர் கூடாங்கில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வந்தாக தேசிய சுற்றுப் புற வாரியம் நேற்று தெரிவித்தது. மலேசிய சுற்றுச்சுசூழல் இலாகா வைத் தொடர்புகொண்டு கேட் கையில், பாசிர் கூடாங்கில் இயங் கும் தொழிற்சாலையில் இருந்து தான் இந்த துர்நாற்றம் வந்ததாக வும் அந்தத் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் மலேசிய சுற்றுச்சுசூழல் இலாகா தெரிவித்தது.

‘ஜெம்’ கடைத்தொகுதி கார் நிறுத்துமிடத்தில் தீ

ஜெம்’ கடைத்தொகு யில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த கடைத் தொகுதியின் அடித்தள கார் நிறுத்தும் இடத்தில் இருந்த கார் ஒன்றின் இயந்திரத்தில் இருந்து தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரி வித்தது. படைக்கு நண்பகல் 12.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட் டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து சேர்ந்த அவர்கள் தீயை உடனடியாக அணைத் தனர். இதில் யாருக்கும் காயமில்லை என அவர் கள் தெரிவித்தனர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சி டம் பேசிய நிகழ்ச்சி ஏற் பாட்டு அதிகாரி திரு பாஸ்கரன், இரண்டாம் அடித்தளத்தில் தீ மூண்டாலும் மூன்றாம் அடித்தளம் வரை புகை பரவியதாகத் தெரிவித் தார்.

பல வாகனங்கள் சிக்கிய விபத்தில் போலிஸ் அதிகாரி காயம்

கிளமெண்டி ரோட்டில் நேற்று நண்பகல் நிகழ்ந்த சாலை விபத்தில் போக்கு வரத்து போலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இரு கார்களும் அந்த அதிகா ரியின் மோட்டார் சைக்கிளும் இந்த விபத்தில் சிக்கின. வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ் சாலையை நோக்கிச் செல்லும் கிள மெண்டி ரோட்டின் மூன்று தடச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 28 வயது போலிஸ் அதிகாரி காயமுற்றார் என்று போலிஸ் உறுதிப்படுத்தியது. விபத்து நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை அனுப்பிய தாகவும் அந்த போலிஸ் அதிகாரி சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல் லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

படிப்பில் சமூக அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம்

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல் கலைக்கழகம் வரும் ஆண்டுகளில் சமூக அறிவியல் துறையில் இடம் பெறும் தன்னுடைய பாடபோதனைத் திட்டங்களை அதிகரிக்கும். தான் போதிக்கும் கல்வித்துறை கள் அனைத்திலும் சமூக, சமுதாய அம்சங்களை அது இடம்பெறச் செய்யும். வருங்காலத்தில் தொழில்நுட் பம், அறிவார்ந்த நகரமயம், மின் னிலக்க உருமாற்றங்கள் போன்ற பலவும் நம்முடைய வாழ்க்கையிலும் வேலையிலும் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்ளும். அதேவேளையில், அவையெல் லாம் தனிப்பட்டவர்களிடத்திலும் சமூகத்திலும் எத்தகைய விளை வுகளை ஏற்படுத்தும் என்பது சமூக அம்சங்களைப் பொறுத்தே இருக்கும்.

சிங்கப்பூரில் ஆய்வு சோதனைச்சாலை அமைக்கிறது அலிபாபா நிறுவனம்

கணினி இணைய வர்த்தகத்தில் உலகப் புகழ் பெற்ற அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆய்வு, உருவாக்கச் செலவினத்தை இரண்டு மடங்கிற்கு அதிகமாக்கும். அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களை உருவாக்கும் நோக்கத்தில் அந்த நிறுவனம் US$15 பில்லியன் (S$20.33 பில்லியன்) தொகையைச் செலவிடவிருக்கிறது.

Pages