You are here

சிங்க‌ப்பூர்

கட்டுமான நிறுவனத்திற்கு $156,000 அபராதம்

எலி நடமாட்டம் மிகுந்த அசுத்தமான இடத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் 60 பேரை தங்க வைத்திருந்ததற்காக கே லிம் கன்ஸ்ட்ரக்ஷன் & டிரேடிங் என்ற நிறுவனத்திற்கு $156,000 அப ராதம் விதிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்தக்கூடாது என்று அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கே லிம் நிறுவனமும் இதர ஒன்பது நிறுவனங்களும் அந்த ஊழியர் களை வேலையில் அமர்த்தின. காமன்வெல்த் அவென்யூ அருகிலும் கிம் மோ லிங்கிலும் உள்ள கட்டுமான இடம் ஒன்றில் தற்காலிகமான குடியிருப்பில் அந்த ஊழியர்கள் தங்கவைக்கப் பட்டு இருந்தனர்.

அதிபர் பதவி: மலேசிய ஊடக செய்திக்குத் தூதர் மறுப்பு

மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணுகோபால மேனன். படம்: வெளியுறவு அமைச்சு

இவ்வாண்டு நடைபெற இருக்கும் சிங்கப்பூர் அதிபர் தேர்தலைப் பற்றி மலேசியாவின் ஆளுங்கட்சியான அம்னோவுக்குச் சொந்தமான நாளிதழான உத்துசான் தவறான செய்தியை வெளியிட்டுள்ளதாக மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணுகோபால மேனன் கூறியுள்ளார். இம்மாதம் 14ஆம் தேதியன்று உத்துசான் நாளிதழில் ‘சிங்கப்பூர் மலாய்க்காரர்களின் அதிர்ஷ்டம் மாறுமா? அதிபர் பதவி பெயருக்குத் தான்’ எனும் தலைப்பில் வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து திரு மேனன் அந்த நாளிதழுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கார் ஓட்டுநரைத் தாக்கிய 72 வயது பெண்மணி குற்றவாளி எனத் தீர்ப்பு

72 வயது ‌ஷீ கா யீ

கார் ஓட்டுநர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்த குற்றத்துக்காக 72 வயது ‌ஷீ கா யீ (படம்) குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு தெலுக் ஆயர் ஸ்ட்திரீட்டில் 39 வயது திரு ரஃபயல் சோங் யென் பிங் என்பவரின் முகத்தில் ‌ஷீ குத்தினார். சம்பவம் நிகழ்வதற்கு முன்பு தனது பி எம் டபிள்யூ காரை நிறுத்துவதற்காக சாலையில் காத்துக்கொண்டிருந்ததாகத் திரு சோங் தெரிவித்தார். அப்பொழுது அவ்வழியே ஃபெராரி காரில் வந்த ‌ஷீ, திரு சோங்கிடம் அவ்விடத்தை விட்டுப் போகும்படி கத்தியதாகக் கூறப்படுகிறது.

பொது மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் அனைத்து பொது, பொதுச் சமூக மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்களைப் பார்க்க வருபவர்கள் பதிவு செய்வதற்கும் நுழைவதற்கும் தானியக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வடக்கு-தெற்கு ரயில் பாதையில் சமிக்ஞை பழுதால் தாமதம்; பயணிகள் தவிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

வடக்கு-தெற்கு ரயில் பாதையில் சமிக்ஞை பழுது காரணமாக நேற்று மாலை உச்சநேரத்தில் சேவைத் தாமதம் ஏற்பட்டது. அங் மோ கியோ அருகில் புதிய சமிக்ஞை முறை பழுதடைந் ததால் யீ‌ஷூன் நிலையத்துக்கும் மரீனா சவுத் பியர் நிலையத்துக்கும் இடையிலான பயண நேரம் வழக்கத்தைவிட கூடுதலாக 20 நிமிடங்கள் எடுக்கும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் டுவிட்டர் மூலம் முதலில் தெரிவித்தது. இந்த இரண்டு நிலையங் களுக்கு இடையே இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்பட்டது. இதனை அடுத்து, இரவு 7 மணிக்குப் பயண நேரத்தை எஸ்எம்ஆர்டி நீட்டித்தது.

மாணவர்களுக்குப் புதிதாக இரண்டு விருதுகள் அறிமுகம்

மாணவர்களிடம் மீட்சித்திறனை யும் கடும் உழைப்பையும் மறுஉறு திப்படுத்துவதற்காகவும் விவேக நகர் இலக்கைச் சாதிக்க உதவும் திட்டங்களை முன்வைத்திருக்கும் தொழில் படிப்பு மாணவர்களை அங்கீகரிக்கவும் இந்த ஆண்டில் புதிதாக இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ‘லீ குவான் இயூ தனிச்சிறப்பு மாணவர் விருது’ என்ற ஒரு விருது, அரசாங்க நிதி உதவி பெறும் 20 சிறப்பு கல்வி பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த மாணவர் களின் மீட்சித்திறனையும், கடும் பணியையும் அங்கீகரிக்கிறது.

டெக் வை கிரெசண்ட் வட்டாரத்தில் மாண்டு கிடந்த 35 வயது ஆடவர்

படம்: வான்பாவ்

டெக் வை கிரெசண்ட் புளோக் 165Aவுக்கு அருகில் உள்ள நடைபாதையில் 35 வயது ஆடவர் ஒருவர் நேற்று அதிகாலை மாண்டு கிடக்கக் காணப்பட்டார். அவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 48 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். நடைபாதையில் ஒருவர் பேச்சுமூச்சின்றி கிடப்பது குறித்து போலிசாருக்கு நேற்று அதிகாலை 4.42 மணிக்குத் தகவல் கிடைத்தது. அந்த ஆடவர் இறந்துவிட்டதாக அதிகாலை 4.55 மணிக்கு மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குற்றவியல் புலனாய்வுத் துறை, ஜூரோங் போலிஸ் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கினர்.

ஊழியர் விண்ணப்ப முறைகேடு: சகோதரிகளுக்கு அபராதம்

வேலை அனுமதிச் சீட்டுப் பெற போலித் தகவலை வழங்கிய குற்றத்திற்காக இரு சகோதரி களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. லியோங் சியூ பெங் (45) லியோங் சாவ் யீ (47) ஆகியோர் இரண்டு பேரை வெளிநாட்டுப் பணிப்பெண்கள் என்று பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களை அழகு பராமரிப்பாளர் களாகப் பணியில் அமர்த்த திட்டமிட்டிருந்தனர். வேலை அனுமதிச் சீட்டு பெறுவதற்காகப் போலித் தகவலை அளித்த குற்றத் திற்காக மூத்த சகோதரிக்கு $16,000 அபராதமும் இளையவருக்கு $15,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்த தவறும் பட்சத்தில் ஆறு வாரச் சிறைத் தண்டனையை அவர்கள் அனுபவிக்கவேண்டும்.

புதிய கற்றல் இணையவாயில்

தொடக்கப் பள்ளிகள் முதல் தொடக்கக் கல்லூரிகள் வரை பள்ளி மாணவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும், எந்த இடத் திலும் இருந்தபடி, கற்றல் வளங் களைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வேகத்திற்கு ஏற்ப கற்க ஏதுவாக புதிய கற்றல் இணைய வாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது 62 தொடக்க, உயர் நிலைப் பள்ளிகளில் சோதனை முயற்சியாக இடம்பெற்று வரும் அந்த ‘சிங்கப்பூர் மாணவர் கற்றல் வெளி’ திட்டம், அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த லாரி ஓட்டுநருக்குச் சிறை, தடை

கவனக்குறைவுடன் லாரி ஓட்டிய இந்திய நாட்டவரான 25 வயது தனபால் பாலசந்தருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனையும் ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியன்று யீ‌ஷூன் தொடக்கக் கல்லூரியில் உள்ள கட்டுமானத் தளத்திலிருந்து லாரியை ஓட்டி வெளியே வந்த தனபால் அவ்வழியாக மின் சைக்கிள் ஒன்றை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த 54 வயது சூ ஜின்ஃபு மீது மோதினார். விபத்துக்குள்ளான சூ, கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

Pages