You are here

உல‌க‌ம்

‘வடகொரியாவுடன் பேச்சு நடத்துவதால் பலன் இல்லை’

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்னும் வடகொரியாவுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் என்றும் வடகொரியாவுடன் திரு டில்லர்சன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதை பற்றிய விமர்சனங்களுக்கு முக்கியத் துவம் தர வேண்டாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறி யுள்ளார்கள். சீனா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர், வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் இரு நாட்டுக்கும் இடையே பேச்சு வார்தை தொடர சாத்தியம் இருப்பதாகவும் கூறினார்.

மலேசிய ஐஎஸ் பயங்கரவாதி மராவியில் மரணம்

முகம்மது ஜொரைமி அவாங் ராய்மி. படம்: தி ஸ்டார்

பெட்டாலிங் ஜெயா: ஐஎஸ் பயங்கர வாத அமைப்புடன் தொடர்புடைய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கு வதற்காக 2014ஆம் ஆண்டு பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு சென்ற மூன்று மலேசியர்கள் மீண்டும் தாயகம் திரும்பவில்லை என்று மலேசிய உளவுத் துறை கூறி யுள்ளது. அவர்களில் ஒருவரான செலாயாங் நகர மன்றத்தின் முன்னாள் அதிகாரி அபு நூர் என்று அழைக்கப்படும் முகம்மது ஜொரைமி அவாங் ராய்மி கடந்த வாரம் மராவியில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தி ஸ்டார் தெரிவித்தது.

வடகொரியாவுடன் நேரடித் தொடர்பு கொள்ள அமெரிக்கா முயற்சி

படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: வடகொரியாவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்வதாக அமெரிக்கா வின் வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித் துள்ளார். சீனாவுக்குப் பயணம் மேற் கொண்டுள்ள திரு டில்லர்சன், வடகொரியாவுடன் நேரடித் தொடர்பு கொள்வதற்குப் பல வழிகள் இருப்பதாகவும் ஆனால் வடகொரியாவுடனான தொடர்பில் முன்னேற்றம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவின் தற்போதைய அரசாங்கத்தை மாற்றும் நோக்கம் இல்லை என்று தெளிவாக கோடி காட்டியும் வடகொரிய அதிகாரிகள் அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை களுக்கு முன்வரவில்லை என்று அமெரிக்கப் பேச்சாளர் ஹீதர் நௌரெட் கூறினார்.

520 பேரோடு கிளம்பிய விமானம் அவசரமாகத் தரை இறக்கம்

இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாகத் தரையிறக் கப்பட்டது. படம்: டுவிட்டர்

பெர்லின்: தீவிர இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று ‘ஏர் பிரான்ஸ் A380’ விமானம் ஒன்று கனடாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த 500க்கும் மேலானவர்கள் உயிர் தப்பினார்கள். பாரிசில் இருந்து லாஸ் ஏஞ்சலிசை நோக்கிப் பறந்து கொண்டிருந்த இந்த விமானத்தின் ஒரு பகுதி திடீரென்று செயலிழந்தது. அவ்விமானத்தில் 496 பயணிகளும் 24 விமானப் பணியாட்களும் பயணம் செய்தார்கள். சேதமடைந்த விமானத்தின் இயந்திரப் பகுதிப் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின. “திடீரென்று பலத்த சத்தம் கேட்டது. பின்னர் அதிர்வுகளுடன் விமானம் கீழ் நோக்கிப் பாய்ந்தது. சிலர் கத்தினார்கள்.

இலங்கையில் ரோஹிங்யாக்களைத் தாக்கிய 6 புத்த பிக்குகள் கைது

கொழும்பு: ரோஹிங்யா அகதிகளைக் கடந்த வாரம் தாக்கியதன் தொடர்பில் புத்த பிக்குகள் தலைமையிலான கும்பலைத் தேடிய போலிசார் ஆறு பேரை நேற்று கைது செய்தனர். கொழும்பு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள முகாமில் சிறுவர் உள்ளிட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது சென்ற செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் புத்த பிக்குகள் மிருகத்தனமாக நடந்துகொண்டதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியது. அந்தத் தாக்குதலை நடத்திய பிக்குகளை அடையாளம் கண்டிருப்பதாக விசாரணையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி தெரிவித்தார்.

டுட்டர்ட்டே: பரம்பரைச் சொத்து, ஊழலில் சம்பாதித்தது இல்லை

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். அதிபர் டுட்டர்ட்டே முறைகேடான முறையில் சொத்து சேர்த்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிபர் இவ்வாறு கூறியுள்ளார். அதிபர் டுட்டர்ட்டேவின் வங்கிக் கணக்கில் கிட்டத் தட்ட பல மில்லியன் அளவிலான கணக்கில் வராத தொகை உள்ளதாகவும் இது சட்டவிரோதச் செயல் என்றும் ஊழல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரி கூறினார்.

அமெரிக்க சுகாதார அமைச்சர் டாம் பிரைஸ் பதவி விலகினார்

வா‌ஷிங்டன்: பணி நிமித்தம் காரணமாக பல்வேறு இடங்க ளுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டபோது ஆடம்பர தனியார் விமானங்களைப் பயன்படுத்தியது தொடர்பில் அமெரிக்க சுகாதார அமைச்சர் டாம் பிரைஸ் பதவி விலகியதாக வா‌ஷிங்டன் தகவல்கள் கூறின. அவரது பதவி விலகல் கடிதத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏற்றுக் கொண்டதாக அதிபர் மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா ஹுக்காஃபி சாண்டர்ஸ் தெரிவித்தார். சுகாதார துணை அமைச்சர் டான் ஷே ரிட் தற்காலிக சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்தது.

தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதி எம்ஏசிசியிடம் ஒப்படைப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெறவுள்ள 14வது பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்ன ணியின் வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசியிடம்) ஒப்படைக்கப்பட் டிருப்பதாக மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். மற்ற வேட்பாளர்களை முடிவு செய்த பின்னர் அவர்களின் பட்டியலும் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினார். மற்ற வேட்பாளர்களின் பட்டியல் தயாராக இருந்த போதிலும் அப்பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இருக்கிறது என்பதால் அவர் அதனை வழங்கவில்லை.

சீன உயர் அதிகாரிகளுடன் டில்லர்சன் ஆலோசனை

பெய்ஜிங்: சீனா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் சீன அதிபரையும் மற்ற உயர் அதிகாரி களையும் சந்தித்துப் பேசியுள்ளார். வடகொரிய விவகாரம் குறித்து அவர்கள் முக்கியமாக கலந்து பேசியதாகத் தெரிகிறது. வடகொரியாவின் அணு வாயுதத் திட்டத்தை தடுப்பதற் கான வழிகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நேற்று பெய்ஜிங் வந்துசேர்ந்த திரு டில்லர்சன் சீன உயர் அதிகாரி யாங் ஜிசியையும் வெளியுறவு அமைச்சர் வாங் யியையும் சந்தித்துப் பேசினார்.

‘மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயாராகும் வடகொரியா’

சோல்: அனைத்துத் தடைகளையும் பொருட்படுத்தாது வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை சோதிக் கக் கூடும் என்ற யூகம் நிலவும் வேளையில் வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிலிருந்து பல ஏவுகணைகள் வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது தெரியவந்துள்ளது என்று தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஏவுகணைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத் திலிருந்து பல ஏவுகணைகளை வடகொரியா எடுத்துச் செல்வதை தென்கொரிய மற்றும் அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்ததாக தென்கொரிய ஒலிபரப்புக் கழகம் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

Pages