You are here

உல‌க‌ம்

வட்டார மிரட்டல்: அமெரிக்காவுடன் ஜப்பான் பேச்சு

வா‌ஷிங்டன்: வடகொரிய விவகாரம் தொடர்பில் பதற்றம் நிலவும் வேளையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ஜப்பானிய வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடத்தவுள்ளார். அந்த சந்திப்பு இம்மாதம் 17ஆம் தேதி வா‌ஷிங்டனில் நடைபெறும் என்றும் அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜிம் மேத்திஸும் அந்தப் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வார் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அமெரிக்க மாநிலம் வரை சென்று தாக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஏவுகணையை வடகொரியா அண்மையில் சோதனை செய்தது. அதனைத் தொடர்ந்து வடகொரியாவின் மிரட்டலை சமாளிப்பது குறித்து அமெரிக்கா பல வழிகளில் ஆராய்ந்து வருகிறது.

வெனிசுவேலாவில் தேடப்படும் ஆயுதம் ஏந்திய கும்பல்

கராக்கஸ்: வெனிசுவேலாவில் உள்ள ஒரு ராணுவத் தளம் மீது ஆயுதம் ஏந்திய சிலர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. அத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் காயம் அடைந்ததாகவும் தகவல் கள் கூறின. அத்தாக்குதலில் சுமார் 20 பேர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் ஆயுதங்களுடன் தப்பிச்சென்ற சுமார் 10 பேரை ராணுவத்தினர் தீவிரமாகத் தேடி வருவதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வெள்ளப்பெருக்கில் சிக்கி வியட்னாமில் 26 பேர் மரணம்

ஹனோய்: வியட்னாமில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் 15 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் சாலைகள் பழுதடைந் திருப்பதால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக் கினால் வியட்னாமில் நான்கு மாநிலங் கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மொத்த சேத மதிப்பு 41 மில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

மலேசியாவில் அதிரடி சோதனை: வெளிநாட்டினர் 409 பேர் கைது

கோலாலம்பூர்: அனைத்துலக பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பவர் கள் என்று சந்தேகிக்கப்பட்ட வெளிநாட் டினர் 409 பேரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் ஒரு பாகிஸ்தானியர் தலைமையில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் மோசடிக் கும்பல் ஒன்றின் நடவடிக்கையை முறியடித்திருப்பதாகவும் போலிசார் கூறினர். பயங்கரவாத ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த புக்கிட் அமான் சிறப்புப் படை போலிசார் தலைமையில் சட்ட அமலாக்க அதிகாரிகள் சுமார் 200 பேர் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். குடிநுழைவுத் துறை, தேசிய பதிவு இலாகா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் அந்த சோதனையில் ஈடு பட்டிருந்தன.

வடகொரியா மீது உலகம் பொறுமை இழந்துவிட்டது - அமெரிக்கா

மணிலா: வடகொரியா மீது ஐநா விதித்துள்ள புதிய தடைகள் அந்நாட்டின் அணுவாயுதத் திட்டத்தால் உலக நாடுகள் பொறுமை இழந்துவிட்டதைக் காட்டுகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறினார். பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டின்போது செய்தியாளர் களிடம் பேசியபோது திரு டில்லர்சன் இவ்வாறு கூறினார். வடகொரியா அதன் ஏவுகணை சோதனையை நிறுத்தாதவரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியம் இல்லை என்றும் அவர் சொன்னார்.

சீனாவுக்கு தூதர்களை அனுப்புகிறது பனாமா

பனாமா சிட்டி: பனாமா அர சாங்கம் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அதிகாரிகள் அடங் கிய ஒரு குழுவை இன்று சீனாவுக்கு அனுப்புகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இவ்விரு நாடுகளும் உறவை ஏற்படுத்திக்கொண்டன. பனாமா குழுவினர் பெய்ஜிங் நகரில் சீன உயர் அதி காரிகளையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவர் என்று பனாமா வெளி யிட்ட அறிக்கை தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பில் சீன வர்த்தகக் குழுவினருடன் பனாமா குழு வினர் பேச்சு நடத்துவர். கடந்த ஜூன் மாதம் சீனாவுடன் பனாமா அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண் டது.

ஹிரோ‌ஷிமா மீது அணுகுண்டு தாக்குதல்: 72 ஆண்டுகள் ஆகிவிட்டன

 ஹிரோ‌ஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் மக்கள் காத்திருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் ஜப்பானின் ஹிரோ‌ஷிமா நகரம் தரைமட்டமானது ஆகஸ்ட் 6ஆம் தேதிதான். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இரண்டு அணுகுண்டு தாக்குதல்களால் ஜப்பான் நிலை குலைந்தது. 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோ‌ஷிமா மீது அமெரிக்கா முதல் அணுகுண்டை வீசித் தாக்கியதில் அந்நகரம் தரைமட்டானது. அத்தாக்குதலில் அந்நகரில் மட்டும் 140,000 பேர் கொல்லப்பட்டனர்.

ஆசியான் பங்கு: சிங்கப்பூரை புகழ்ந்து பாராட்டிய சீனா

சீனா- ஆசியான் ஒருங்கிணைப் பாளர் என்ற முறையில் சிங்கப்பூர் சாதகமான, ஆக்ககரமான பங்கு வகிப்பதாக சீனா புகழ்ந்துள்ளது. சீனா=ஆசியான் உறவுகளை முன்னெடுத்துச் செல்வதில் சிங்கப்பூர் ஆற்றும் பணிகளைப் பாராட்டுவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார். பத்து உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியான் மன்றத்தின் அடுத்த ஆண்டுக்கான தலை மைத்துவத்தை ஏற்கத் தயாராகி வரும் அதேவேளை சீனா=ஆசி யான் ஒருங்கிணைப்பாளர் பணி யையும் சிங்கப்பூர் தொடர தாம் வாழ்த்துவதாகவும் அவர் குறிப் பிட்டார். “ஆசியான் தலைமை, சீனா= ஆசியான் ஒருங்கிணைப்பு என் னும் இரு பொறுப்புகளை சிங்கப்பூர் நல்ல முறையில் ஏற்று நடத்த விரும்புகிறோம்.

ஜோகூரில் பூட்டிய அறைக்குள் தனித்து விடப்பட்ட மூன்று குழந்தைகள்

ஜோகூர்பாரு: ஜோகூர் பாருவில் பூட்டப்பட்டிருந்த ஒரு வாடகை அறைக்குள் உடன்பிறந்த மூன்று குழந்தைகள் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். ஒரு வயதிலிருந்து 6 வயது வரையிலான அந்தச் சிறார்கள், லார்கின் பெர்டானா பகுதியில் உள்ள அசுத்தமான, துர்நாற்றம் வீசிய ஓர் அறைக்குள் ஒரு சிறிய படுக்கையில் தூங்குவதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் சிறிதளவு அரிசி சாதம் மட்டுமே சாப்பிட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் குளித்து பல நாட்கள் ஆகியிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

மலின்டோ ஏர் உரிமையாளர் குறித்த கேள்விக்கு வேள்பாரி அதிருப்தி

மலேசியாவின் மலின்டோ ஏர் விமான சேவை நிறுவன உரிமை, விமானநிலைய வரி பாக்கி விவகாரங்களில் அந்நிறுவனத்தைத் தற்காத்துப் பேசியுள்ளது மஇகா. அந்நிறுவனத்தின் உரிமை குறித்து இனரீதியில் கேள்வி எழுப்பப்படுவது பற்றி அதிருப்தி தெரிவித்துள்ள மஇகாவின் தலைமைப் பொருளாளர் எஸ். வேள்பாரி, மலேசிய இந்தியர், மலின்டோ ஏர் நிறுவனத்தின் 46% பங்கை வைத்திருப்பதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார். மலின்டோ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்திரன் ராமமூர்த்தியும் அவரது மனைவியும் நிறுவனத்தில் 46% பங்குகளை வைத்துள்ளனர்.

Pages