You are here

உல‌க‌ம்

மராவி நகரில் குண்டுகளை வீசித் தாக்கியது ராணுவம்

படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்சில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட வேளையில் தென்பகுதி மராவி நகரில் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசித் தாக்கியது ராணுவம். மராவி நகரில் போராளிகளு டன் சண்டையிட்டு வரும் ராணுவ வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் ஆகியோர் தேசிய கீதத்தைப் பாடியும் பிலிப்பீன்ஸ் உயர் அதிகாரிகள் ஆற்றிய உரைகளை கேட்டபடியும் சுதந்திரதினத்தைக் கொண் டாடினர். அவர்கள் விமானத்தில் இருந்தபடியே போராளிகள் பதுங்கியிருக்கக்கூடிய பகுதி களில் குண்டுகளை வீசித் தாக்கினர்.

ஈரானில் ஐஎஸ் சந்தேகப் பேர்வழிகள் நால்வர் சுட்டுக்கொலை

அங்காரா: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த இரு தாக்குதல்களைத் தொடர்ந்து அந்நாட்டுப் போலிசார் ஐஎஸ் சந்தேகப் பேர்வழிகள் நால்வரை நேற்று சுட்டுக் கொன்றதாக ஈரானிய செய்தி நிறுவனத் தகவல் கூறியது. டெஹ்ரானில் கடந்த புதன்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய இரண்டு தற்கொலைத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் போலிசார் ஒரு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த சந்தேகப் பேர்வழிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் நால்வர் கொல்லப்பட்டதாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஓருவர் கூறினர். அந்த நால்வரில் இருவர் வெளிநாட்டினர் என்று கூறப்பட்டது.

தெரேசா மேயின் புதிய திட்டம்

லண்டன்: தேர்தலுக்குப் பிறகு தமது பதவியை தக்க வைத்துக் கொள்ளப் போராடும் பிரதமர் தெரேசா மே, தமது அரசாங்கம் சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். கன்சர்வேடிவ் கட்சியில் உள்ள திறமை யானவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பதாகக் கூறிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக முறையான பேச்சு தொடங்கும் என்று உறுதி அளித்தார்.

சிட்னிக்கு அவசரமாகத் திரும்பிய விமானம்

சிட்னி: சிட்னியிலிருந்து சீனாவின் ஷங்காய் நகருக்குப் புறப்பட்ட சீனாவுக்குச் சொந்த மான ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று அவசரமாக சிட்னிக்குத் திரும்பி யது. MU736 விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற ஒரு மணி நேரத்தில் சிட்னி விமான நிலையத்திற்குத் திரும்பியது. சிட்னி விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளி யேற்றப்பட்டனர்.

பிரெஞ்சு தேர்தலில் அதிபரின் கட்சிக்கு அமோக வெற்றி வாய்ப்பு

பாரிஸ்: பிரான்சில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோனின் கட்சி மகத்தான வெற்றி பெறும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் மெக்ரோன் கட்சிக் குச் சாதகமாகவே அமைந் துள்ளன. பிரான்சில் மெக்ரோன் ஏற்கெனவே அளித்த வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டு மானால் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி தனிப் பெரும்பான்மை பெற வேண்டும். முதல் சுற்று முடிவில் மெக்ரோன் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் 32.3% வாக்குகள் கிடைத்துள்ளன.

சகிப்புத்தன்மையை வளர்க்க போராடும் மிதவாத அமைப்பு

படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஆகப்பெரிய முஸ்லிம் அமைப்பின் துணைப்படைப் பிரிவு, ராணுவ அங்கி அணிந்து, தங்கள் கொள்கைகளை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு, சமய சகிப்புத்தன்மையற்ற நிலையைத் துடைத்தொழிக்கவும் அனை வரையும் உள்ளடக்கும் இஸ்லாமி யப் பாணியைக் கட்டிக்காக்கவும் களமிறங்கியுள்ளது. மொத்தம் 45 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட நடாதுல் உலாமா அமைப்பைச் சேர்ந்த “மிதவாதப் போராளிகள்”, உலகிலேயே ஆக அதிகமான முஸ்லிம்கள் வாழும் இந்தோனீசி யாவில் அதிதீவிர சமயப் பிரி வினரின் தலையெடுப்பை ஒடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரான்சில் நாடாளுமன்றத் தேர்தல்

படம்: ராய்ட்டர்ஸ்

பிரான்சில் நேற்று நடந்த முதல் சுற்று நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மெக்ரோன் ஆதரவாளர்களைப் பார்த்து புன்னகை பூத்தார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரான்சில் சுமார் 47மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேவைப்படுகிறது. வாக்களிப்பை முன்னிட்டு நேற்று பிரான்சில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. படம்: ராய்ட்டர்ஸ்

ஸிக்கா கிருமி: ஜோகூரில் தீவிர கண்காணிப்பு

ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் புதிதாக மேலும் இருவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியதாக வெளிவந்த தகவலைத் தொடர்ந்து ஜோகூரில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. ஜோகூர் மாநில சுகாதார சுற்றுப்புற மற்றும் தகவல் குழுவின் தலைவர் அயுப் ரஹ்மாட் இதனைத் தெரிவித்தார். ஜோகூர் பாலம் மற்றும் தஞ்சூங் கூப்பாங்கில் உள்ள துவாஸ் சோதனைச் சாவடி வழியாக ஜோகூருக்குள் நுழையும் இடத்திலும் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இவ்விரு வழிகளையும் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

மராவி சண்டையில் 13 வீரர்கள் மரணம்; மவுட்டி குழுவின் 2 சகோதரர்கள் பலி

மணிலா: பிலிப்பீன்சின் தென் பகுதியில் உள்ள மராவி நகருக் குள் ஊடுருவியுள்ள போராளி களுக்கும் பிலிப்பீன்ஸ் ராணுவத் தினருக்கும் இடையே கடந்த இரண்டு வார காலமாக சண்டை நீடிக்கிறது. இந்நிலையில் மவுட்டி குழுவைச் சேர்ந்த போராளிகளுக் கும் அரசாங்கப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை கடும் சண்டை நடந்தது. அதிகாலை 3.30 மணியளவில் தொடங்கிய மோதல் கிட்டத்தட்ட 16 மணி நேரம் நீடித்ததாகக் கூறப்பட்டது. இந்த சண்டையில் பிலிப்பீன்ஸ் கடற்படை வீரர்கள் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 40 பேர் காயம் அடைந்ததாகவும் ராணுவத் தரப்பு கூறியது. இதனை ராணுவ உயர் அதிகாரி ஒருவர் நேற்று உறுதிப்படுத்தினார்.

சீனா: விபத்தில் உயிருக்குப் போராடிய பெண் மீது மற்றொரு வாகனம் ஏறியது

சீனாவில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் ஒன்று சமூக ஊடகங் களில் கடுமையாக விமர்சிக்கப் பட்டு வருகிறது. விபத்தில் பெண் ஒருவர் மாண்ட விதம் குறித்து கருத்து தெரிவித்த பலரும் கருணையற்ற சமூகம் என்று சாடியுள்ளனர். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சீனாவின் மத்திய மாநிலமான ஹெனானில் உள்ள ஜுமடியன் என்னும் பகுதியில் விபத்தொன்று நிகழ்ந்தது. கண்காணிப்புக் கருவியில் பதிவான அவ்விபத்து படம் தற்போது காணொளி வடிவில் சமூக ஊடகங்களில் வலம் வரு கிறது. சாலையில் பாதசாரிகளுக்கு அனுமதியில்லாத சிவப்பு விளக்கு எரிந்த நிலையில் பெண் ஒருவர் அந்தச் சாலையைக் கடந்தபோது நடுவில் வாகனம் ஒன்றால் மோதப்பட்டு தூக்கி எறியப்பட்டார்.

Pages