You are here

உல‌க‌ம்

கென்யாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டங்கள்

படம்: ஏஎஃப்பி

நைரோபி: கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டு அதிபர் கென்யாட்டா மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதைத் தொடர்ந்து அவரின் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் அவரது எதிர்ப் பாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினருக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்

கோலாலம்பூர்: மலேசியாவில் பினாங்கு மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவும் மேலும் இருவரும் ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புக்கிட் மெர்டாஜாமில் சட்ட விரோதமாக ஒரு தொழிற் சாலையை நடத்தியது தொடர் பாக திரு பீ பூன் போ வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டார். கிராம மக்கள் கொடுத்த புகார்களைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையை மலேசிய ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.

பிலிப்பீன்சில் ஒரு மாதத்திற்கு முன்பு கடத்தப்பட்ட மூவர் தப்பிச் சென்றனர்

மணிலா: தெற்கு பிலிப்பீன்சில் நான்கு வாரங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட கட்டுமான ஊழியர்கள் மூவர் அபு சாயஃப் போராளிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அந்த மூன்று ஊழியர்களும் தற்போது ஜோலோ தீவில் உள்ள போலிசாரிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளதாக தகவல் கள் கூறுகின்றன. அந்த மூவருடன் தப்பிச் சென்ற நான்காவது நபர் வேறு திசையில் சென்றுவிட்டதால் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை என்று போலிசார் கூறினர். அந்த நால் வரையும் விடுவிக்க கொடுக்கப் பட்ட பிணைப் பணம் செல்லாது என்பது தெரிந்ததும் அவர்களை விடுவிக்க கடத்தல்காரர்கள் மறுத்து வந்தனர்.

ஜோகூரில் வெள்ளப்பெருக்கு; 62 பேர் வெளியேற்றம்

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து அங்குள்ள இரு ஆறுகளில் நீர் நிரம்பி ஊருக்குள் ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு கருதி 19 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் அவர்கள் தங்கியுள்ளனர் என்று ஜோகூர் சுகாதார, சுற்றுப்புற, கல்வி மற்றும் தகவல் குழுவின் தலைவர் அயுப் ரஹ்மாட் கூறினார். கம்போங் புக்கிட் பஜார், கம்போங் ஸ்ரீ ஜெயா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனா: சுரங்கப்பாதை சுவரில் மோதி நொறுங்கிய பேருந்து; 36 பேர் மரணம்

படம்: ராய்ட்டர்ஸ்

சீனாவின் வடமேற்குப் பகுதியில் விரைவுச் சாலை சுரங்கப்பாதை சுவர் மீது பேருந்து மோதியதில் குறைந்தது 36 பேர் மாண்டு போயினர். ஷான்சி மாநிலத்தில் அமைந்துள்ள சியான்=ஹன்ஸே„ங் விரைவுச்சாலையில் இருக்கும் ஒரு சுரங்கப்பாதையின் சுவர் மீது நேற்று முன்தினம் அப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் கூறினர். இவ்விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந் தனர் என்றும் அவர்கள் உடனடியாக மருத் துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் சின்ஹுவா செய்தி தெரிவித்தது.

சிரியாவில் ஐஎஸ் முகாமிலிருந்து தப்பிய இந்தோனீசியக் குழு

ஜகார்த்தா: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தும் ஒரு முகாமிலிருந்து தப்பியோடிய 17 இந்தோனீசியர்கள் அடங்கிய குழுவினர் ஈராக்கிய எல்லைப் பகுதிக்குள் பாதுகாப்பாக நுழைந்துவிட்டபோதிலும் அவர் கள் இன்னும் இந்தோனீசி யாவுக்குத் திரும்பவில்லை என்று இந்தோனீசிய வெளியுறவு துணை அமைச்சர் ஏ.எம் ஃபசிர் கூறினார். கைக்குழந்தைகள், பெண்கள், இளையர்கள் அடங்கிய அக் குழுவினர் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்னும் நாடு திரும்பவில்லை என்று அவர் சொன்னார்.

வடகொரிய விவகாரம்: அரசதந்திர ரீதியில் தீர்வு காண அமெரிக்கா நம்பிக்கை

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் குவாம் தீவைத் தாக்க திட்ட மிட்டுள்ளதாக வடகொரியா அறி வித்துள்ள நிலையில் வடகொரிய விவகாரத்திற்கு அரசதந்திர முறையில் தீர்வு காண முடியும் என்று அமெரிக்கா இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும் வடகொரி யாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள வேளை யில் போர் மூண்டால் அதனால் பேரழிவு ஏற்படும் என்றும் ஆகவே பிரச்சினைக்கு அரச தந்திர ரீதியில் தீர்வு காணவே அமெரிக்கா விரும்புகிறது என்றும் திரு மேத்திஸ் கூறினார்.

நிலநடுக்கத்திற்குப் பின்னர் சீனாவில் 60,000 பேர் வெளியேற்றம்

நிலநடுக்கத்திற்குப் பின்னர் சீனாவில் 60,000 பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கில் உள்ள மலைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 60,000 பேர் வெளியேற்றப் பட்டதாக அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் மாநில அதிகாரிகள் கூறினர். சிச்சுவான் மாநிலத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக் கத்தில் சுமார் 250 பேர் காயம் அடைந்ததாகவும் அவர்களில் 40 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது என்று மருத்துவமனைத் தகவல்கள் கூறின. இதனால் உயிரிழப்பு எண் ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மகாதீரின் 3 மகன்களின் நிறுவனங்களில் சோதனை

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்.

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மூன்று மகன்கள் நடத்தும் நிறு வனங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அதோடு அந்த நிறுவனங்களி லிருந்து சில கோப்புகளையும் அதிகாரிகள் கொண்டு சென்ற தாக இணையத் தள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சோதனைக்கு உள்ளான நிறு வனங்களைச் சேர்ந்த அதிகாரி கள் இதனை உறுதிப்படுத்தியுள்ள தாக ‘மலேசியகினி’ ஊடகம் தெரிவித்தது.

மலேசியாவில் 290 பேர் கைது

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தென்கிழக்கு ஆசிய விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற விருப்பதை முன்னிட்டு மலேசி யாவில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மலேசிய அதிகாரிகள் புதன் கிழமை இரவு மேற்கொண்ட மிகப் பெரிய அளவிலான இரண் டாவது சோதனையின்போது வெளிநாட்டினர் 290 பேர் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். சிரியா, ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சிபாங் வட்டார போலிஸ் தலைமையகத்தில் தற்போது சோதனை செய்யப்பட்டு வரு வதாகவும் இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் பயங்கர வாதச் செயல்களில் தொடர்பு உடையவர்கள் யாரும் இல்லை என்றும் போலிசார் கூறினர்.

Pages