You are here

உல‌க‌ம்

கனமழையால் பேங்காக்கில் வெள்ளம்

பேங்காக்: தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் கடந்த இரு நாட்களாகப் பெய்யும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் நிரம்பி யிருப்பதால் பேங்காக் குடியிருப் பாளர்கள் வேலைக்கு அல்லது வியாபாரம் செய்வதற்கு அவசர மாகச் செல்லவேண்டிய தேவை இல்லை என்றால் வீடுகளிலேயே தங்கியிருப்பது நல்லது என்று பேங்காக் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமையிலிருந்து இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக நேற்று குறைந்தது 55 சாலைகள் வெள்ளநீரில் மூழ்கி யிருந்ததாகக் கூறப்பட்டது.

மலேசியாவில் வடகொரிய இறக்குமதிக்குத் தடை

கோலாலம்பூர்: அண்மை காலம் வரை வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்த மலேசியா வடகொரியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்க ளுக்குத் தடை விதித்துள்ளது. வடகொரியாவின் அணுவாயுத திட்டங்களை முடக்கும் அனைத் துலக முயற்சிக்கு அதன் ஆத ரவை காட்டும் வகையில் இந்தத் தடையை மலேசியா அறிவித் துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் $6.6 மில்லியன் பெறுமானமுள்ள பொருட்களை வடகொரியாவிலிருந்து இறக்குமதி செய்த மலேசியா, ஜூன் மாதத் திலும் ஜூலை மாதத்திலும் எது வும் வாங்கவில்லை.

கலிஃபோர்னியா காட்டுத் தீ: 31 பேர் மரணம்

சொனொமா: கலிஃபோர்னியா வின் வடக்குப் பகுதியில் பரவி வரும் கடும் காட்டுத் தீயில் இதுவரை 31 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. கலிஃபோர்னியாவின் வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத் தீயாக இது வகைப் படுத்தப்பட்டுள்ளது. மிக அதிகமான உயிர் சேதமும் நியூயார்க் நகரின் அளவிற்கு 77,000 ஹெக்டர் நிலமும் சேதம் அடைந்துள்ளது. பலத்த காற்று தீயை மேலும் பரப்பி வரும் வேளையில் சுமார் 8,000 தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 5,000க்கும் மேலான குடியிருப்பாளர்களை வீடுகளை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பதவி பறிக்கப்பட்ட அதிபரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

சோல்: தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைக்கு தடுப்புக் காவல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊழல் காரணமாக சென்ற மார்ச் மாதம் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2012ல் பதவிக்கு வந்த பார்க், தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதற்காக வும் சம்சுங் நிறுவனத்திடமி ருந்து லஞ்சம் பெற்று கொள்கை களை அந்த நிறுவனத்திற்கு சாதகமாக அமைத்ததற்காகவும் அவரிடமிருந்து பதவி பறிக்கப் பட்டது. அவரது குற்றச்சாட்டு கள் நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மலேசியாவில் வடகொரிய இறக்குமதிக்குத் தடை

கோலாலம்பூர்: அண்மை காலம் வரை வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்த மலேசியா வடகொரியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்க ளுக்குத் தடை விதித்துள்ளது. வடகொரியாவின் அணுவாயுத திட்டங்களை முடக்கும் அனைத் துலக முயற்சிக்கு அதன் ஆத ரவை காட்டும் வகையில் இந்தத் தடையை மலேசியா அறிவித் துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் $6.6 மில்லியன் பெறுமானமுள்ள பொருட்களை வடகொரியாவிலிருந்து இறக்குமதி செய்த மலேசியா, ஜூன் மாதத் திலும் ஜூலை மாதத்திலும் எது வும் வாங்கவில்லை.

மலேசியா: தடுப்புக் காவலில் 45 வெளிநாட்டு பயங்கரவாதிகள்

மலேசியாவில் இந்த ஆண்டு மொத்தம் 45 பயங்கரவாதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு தேசிய போலிஸ் தலைவர் முகமது ஃபுஸி ஹாருன் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒன்பது பேர் அபு சாயஃப் குழுவையும் மூவர் ஃபெடுல்லா துருக்கிய அமைப்பையும் சேர்ந்தவர்கள் என்று காவல் துறைக் கண்காணிப்பாளர் தெரி வித்தார். மேலும் ஒருவன் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய அல் பேனியன் பயங்கரவாத அமைப் பைச் சேர்ந்தவன் என்றும் மற் றொருவன் பங்ளாதேஷ் ஜமாதுல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த வன் என்றும் அவர் சொன்னார்.

வியட்னாம், தாய்லாந்தில் வெள்ளம்

வியட்னாமில் பல இடங்களில் வெள்ளநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. படம்: ஏஎஃப்பி

ஹனோய்: வியட்னாமில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பை கருத்தில்கொண்டு தாழ்வான பகுதிகளில் வசிப்பவர் கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற் பட்டுள்ளதாகவும் கனமழையிலும் நிலச்சரிவிலும் சிக்கி சுமார் 21 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பிலிப்பீன்சில் போதைப்பொருள் கடும் நடவடிக்கைகள் நிறுத்திவைப்பு

மணிலா: போதைப்பொருள் குற்றங்களை ஒழிக்க பிலிப்பீன்ஸ் போலிசார் மேற்கொண்டு வந்த கடும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறின. போதைப் பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே போலிசாருக்கு வழங்கிய அதிகாரத்தின் பேரில் நன்கு விசாரிக்கப்படாமலேயே பலர் கொல்லப்பட்டனர். போதைப்பொருளை ஒழிக்க போலிசார் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் வலுத்து வந்தன. மனித உரிமை குழுக்களும் இந்த நடவடிக்கையை குறை கூறின. இதனால் பிலிப்பீன்ஸ் மக்கள் மத்தியில் அதிபர் டுட்டர்டேயின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்தது.

கலிஃபோர்னியா காட்டுத் தீயிலிருந்து பலர் மீட்பு

லாஸ் ஏஞ்சலிஸ்: கலிஃபோர்னியாவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பாளர்கள் போராடி வரும் வேளையில் ஹெலிகாப்டர்கள் மூலம் பலரை மீட்புக் குழுவினர் காப்பாற்றி வருகின்றனர். காட்டுத் தீ கொழுந்து விட்டு எரியும் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 42 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் காப்பாற்றப்பட்டதாகவும் ஐந்து நாய்கள் மற்றும் ஒரு பூனையும் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாகவும் ஹெலிகாப்டர் விமானி ஒருவர் கூறியுள்ளார். கடும் வறட்சி காரணமாக கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது.

மலேசிய முன்னாள் அமைச்சர் ஷஃபி விசாரிக்கப்படலாம்

கோத்தா கினபாலு: சாபா மாநில ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கையாடியது தொடர்பில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மலேசிய முன்னாள் அமைச்சர் ஷஃபி அப்டலும் விசாரிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் கிராமப்புற, வட்டார வளர்ச்சி அமைச்சரான ஷஃபி அப்டல் தற்போது முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதியாக மாறியுள்ளார்.

Pages