You are here

உல‌க‌ம்

கம்போடியா தொலைத்தொடர்பு வழி மோசடி: 400 வெளிநாட்டினர் சிக்கினர்

நோம்பென்: கம்போடியாவில் இருந்- தவாறு சீனாவில் உள்ளவர்களிடம் தொலைபேசி, இணையம் வழி மோசடி வேலைகளில் ஈடுபட்ட 400 வெளிநாட்டவர்களை அந்- நாட்டின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தைவான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இணையம், தொலைத்தொடர்பு வழி நடந்து வரும் மோசடி செயல்களில் சீனா பில்லியன் கணக்கான டாலர்களை இழந்து வருவதாக பெய்ஜிங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மோசடி வேலை களைக் கட்டவிழ்த்து விடுவதற் காக குண்டர் கும்பலுக்கு தைவான் புகலிடம் கொடுத்து வருவதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது.

13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமற்போன வைர மோதிரம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கும் மாது

அல்பெர்ட்டா: கனடாவில் ஒரு மாது 13 ஆண்டுகளுக்கு முன்பு அவரது திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை தொலைத்து விட்டார். அந்த மோதிரம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தோட்டத்தில் விளைந்த ஒரு கேரட்டில் அந்த மோதிரம் சிக்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது 84 வயதாகும் திருமதி மேரி கிராம்ஸ் என்ற அந்த மாது தனது வைர மோதிரம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

போதைப்பொருள்: மணிலாவில் 25 பேர் சுட்டுக்கொலை

மணிலா: பிலிப்பீன்சில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போலிசார் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசை யில் மணிலாவில் ஒரே இரவில் போதைப்பொருள் சந்தேக நபர்கள் 25 பேர் கொல்லப் பட்டதாக போலிசார் கூறினர். போதைப்பொருள் கடத்தல் காரர்களை ஒடுக்குவதற்கு திங்கட்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். அந்த சோதனைகளின்போது 32 பேர் கொல்லப்பட்டதாகவும் 109 பேர் கைது செய்யப் பட்டதாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கருத்தரங்கு வன்முறை தொடர்பில் தேடப்படும் மேலும் பலர்

கோலாலம்பூர்: மலேசியாவில் சென்ற வாரம் எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கின்போது ஏற்பட்ட வன்முறைக்கு காரணமான மேலும் பலரை போலிசார் தேடி வருவதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். அந்தக் கலவரம் தொடர்பில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இன்னும் பலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார். இதற்கிடையே பினாங்கில் சட்டவிரோதமாக ஒன்றுகூடிய 16 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் கெஅடிலான் கட்சி உறுப்பினர்கள் என்று நம்பப்படுவதாகவும் பினாங்கு போலிசார் கூறினர்.

தென்கொரியாவின் அனுமதி பெற அமெரிக்கா உறுதி

சோல்: வடகொரியா மீது எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு முன்பு தென்கொரியாவின் அனுமதியைப் பெற அமெரிக்கா உறுதி அளித் துள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறினார். “எங்களின் அனுமதி இல்லாமல் கொரிய தீபகற்பத்தில் ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து யாரும் முடிவு எடுக்க முடியாது,” என்று திரு மூன் கூறினார். வடகொரியா மீது எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு முன்பு தென் கொரியாவுடன் அதுகுறித்து ஆலோசிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதி அளித் திருப்பதாக திரு மூன் கூறினார்.

திருடிய கார்களை வெடிகுண்டுகளாக மாற்றிய தாய்லாந்து போராளிகள்

பேங்காக்: தெற்கு தாய்லாந்தில் உள்ள கார் விற்பனைக் கூடத்தினுள் புகுந்து இரண்டு கார்களைத் திருடிச் சென்றவர் கள் அந்தக் கார்களை வெடி குண்டுகளாக மாற்றியதாக போலிசார் கூறினர். அவ்விரு கார்களையும் திருடிச் சென்றவர்கள் போராளி களாக இருக்கக்கூடும் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர்.

நஜிப்: மலாய் சமூகத்தின் வளர்ச்சிக்கு S$4 பில்லியன் திட்டம்

கோலாலம்பூர்: மலேசியாவின் பூமிபுத்ரா என்று அழைக்கப்படும் மலாய் இனத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்காக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் 15 பில்லியன் ரிங்கிட் (4.8 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) வளர்ச்சித் திட்டத்தை அறிவித்திருக்கிறார். பொதுத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படும் வேளையில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் திரு நஜிப் ஒப்புக்கொண்ட ஆதரவு திட்டத்தை அவர் இப்போது அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் பாதிக்குள் நடக்கவேண்டிய எதிர்வரும் தேர்தல், திரு நஜிப்பின் மிகக் கடினமான தேர்தல் என நம்பப்படுகிறது.

தனிமைப்படுத்தப்படும் டிரம்ப்

அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஏறக்குறைய 200 நாட்களே ஆகியுள்ள நிலையில் டோனல்ட் டிரம்ப்புக்கு நாளுக்கு நாள் ஆதரவு குறைந்து வரு கிறது. வெர்ஜீனியா மாநிலம், சார்லட்ஸ்வில் நகரில் வெள்ளை இன தேசியவாதி களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல் குறித்து டிரம்ப் வெளியிட்ட கருத்துகளுக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, டிரம்ப்புக்கு ஆதரவாக இருந்த வர்த்தகத் தலைவர்களும் அர சியல்வாதிகளும் அவரைவிட்டு ஓட்டம் பிடிப்பது தொடர்கிறது. இதனால் தனிமைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் டிரம்ப்.

ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் மலேசிய அகதியின் இறுதி கோரிக்கை

சிருல் அஸார் உமர். கோப்புப் படம்

சிட்னி: மலேசியாவின் சர்ச்சைக் குரிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விவகாரத்தில் தொடர்புடைய மங் கோலியப் பெண்ணைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசிய அதிரடி போலிஸ் படையைச் சேர்ந்த சிருல் அஸார் உமர், 46 ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் இறுதி வேண்டு கோள் விடுத்துள்ளார். அதில் தமக்கு பாதுகாப்பு விசா வழங்க வேண்டும் என்றும் விண் ணப்பத்தைப் புறக்கணித்துவிட வேண்டாம் என்றும் ஆஸ்திரேலியா விருந்து வெளியேற்றப்பட்டால் தம்மை தூக்கிலிட்டுவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

10,000 முட்டைகளைக் கொண்டு ‘மெகா’ ஆம்லெட்

படம்: ராய்ட்டர்ஸ்

பெல்ஜியம் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மால்மேடீ நகரில் உள்ள நகர சதுக்கத்தில் பத்தாயிரம் முட்டைகளைக் கொண்டு பிரம்மாண்ட ஆம்லெட் சமைக்கப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாக நடை பெற்று வரும் இந்த வருடாந்திர ‘மெகா’ ஆம்லெட் சமைக்கும் திரு விழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நான்கு மீட்டர் விட்டத்துடன் கூடிய பாத்திரத்தில் 10,000 முட் டைகளுடன் பன்றி இறைச்சியும் மூலிகையும் கலந்து சமைக்கப்பட்ட இந்த ஆம்லெட், பின்னர் அங்கு கூடியிருந்தவர்களுக்குப் பரிமாறப் பட்டது.

Pages