You are here

தலைப்புச் செய்தி

பாலர் கல்வித் துறை மாணவர்களுக்கு நேரடி அனுபவம் தரும் ‘பாலர் பள்ளி’

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலர் கல்வித் துறை மாணவர்கள் தெமாசெக் பலதுறை தொழில் நுட்பக் கல்லூரியில் உள்ள சோதனை பாலர் பள்ளியில் நேரடி அனுபவம் பெறலாம். பாலர் கல்வி துறையில் பயில்வோர் பாலர் மேம்பாடு தொடர்பாக ஆய்வு செய்யும் அதே நேரத்தில் சோதனை பாலர் பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கலாம். சோதனை பாலர் பள்ளியில் வழக்கமான பாலர் பள்ளியைப் போல விளையாட்டுப் பொருட் களும் கற்பித்தலுக்குத் தேவை யான பொருட்களும் உள்ளன.

லாரிகள் மோதிய விபத்தில் மூவர் காயம்; பொருட்கள் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு

படம்: ஜோசஃப் நாயர்

இரண்டாவது பாலத்தின் மலேசிய பகுதியில் நேற்று பிற்பகலில் இரு லாரிகள் மோதிக்கொண்டன. அதனைத் தொடர்ந்து சாலை மீது விழுந்த பொருட்களால் போக்கு வரத்து தடைப்பட்டது. ஜோசஃப் நாயர் என்னும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வாசகர் அனுப்பிய புகைப் படம் லாரி ஒன்று பக்கவாட்டில் சாய்ந்து கிடப்பதையும் பொருட்கள் சாலையில் சிதறிக் கிடப்பதையும் காட்டியது. பிற்பகல் 2 மணியளவில் மலேசிய சுங்கச்சாவடிக்கு 500 மீட்டர் தூரத் திற்கு முன்னதாக இரு லாரிகளும் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் ஜோகூர் பாரு நோக்கிச் செல்வதற்கு சாலையின் ஒரு தடம் மட்டுமே திறந்துவிடப்பட்டது.

ஜெர்மனியில் பிரதமர் லீயுடன் தேசிய தினக் கொண்டாட்டம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெர்மனியில் 1994ஆம் ஆண்டில் குடியேறி ஓராண்டுக்குப் பிறகு திருமதி ஏமி கியஸ்ஜன் தொடங் கிய ஃபேஸ்புக் நட்பு வட்டத்தின் மூலம் அந்நாட்டில் வசிக்கும் சிங் கப்பூரர்கள் ஒன்று சேர்க்கப்பட் டார்கள். திருமதி ஏமி முதலில் ஜெர்மனி யில் குடியேறியபோது அங்கு சுமார் 200 சிங்கப்பூரர்களே வசித்து வந்தனர். “நான் முதலில் இங்கு வந்த போது நான் தனியாக வசிப்பது போன்ற உணர்வில் இருந்தேன். அங்கு ஆசியர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சிங்கப்பூரர்கள் இல்லை,” என்றார் 59 வயது திருமதி ஏமி.

தெம்பனிசில் பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ் சந்தை, உணவங்காடி மையப் பகுதியில் நேற்றுக் காலை யில் மகிழ்ச்சியாக ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டிருந்த குடியிருப் பாளர்களுக்குத் திடீரென கிளம் பிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் இடையூறாக அமைந்தது. ‘துப்பாக் கிக்காரர்கள்’ சுட்டு வீழ்த்தப்பட்டு, ‘தாக்குதலில் காயமடைந்தவர்’ களுக்கு முதலுதவி அளிக்கப்பட, மக்கள் தங்களின் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பினர். தெம்பனிஸ் சங்காட் நெருக்கடி நிலை ஆயத்த நாளின் ஓர் அங்க மாக சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சமூகத் தொண்டூழியர்கள் இணைந்து இந்த பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு பாவனைப் பயிற்சி அங்கு இடம்பெற்றது.

பிரதமர் லீ - அதிபர் டிரம்ப் சந்திப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லீ சியன் லூங் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை நேற்று ஜி20 தலைவர்களின் உச்ச நிலை மாநாட்டுக்கு இடையே சந்தித்தார். இருவரும் கைகுலுக்கிக் கொண்ட பிறகு, “சிங்கப்பூரும் நாங்களும் நெருக்கமான உறவைக் கொண்டவர்கள். நாம் பல வழிகளில் ஒன் றிணைந்து சில அற்புத மானவற்றைச் செய்ய இருக் கிறோம்,” என்று அதிபர் டிரம்ப் கூறினார். இப்போது மிகப் பெரிய நட்புறவைக் கொண் டுள்ளோம் என்று கூறிய திரு டிரம்ப், நட்புறவு மேலும் வலு வடையும் என்றும் சொன்னார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் லீ, “நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

$16.2 மில்லியன் செலவில் பழுதுபார்ப்பு, பராமரிப்பு மையம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தில் தரைப்பணிகளைக் கையாளும் ‘டிநாட்டா’ dnata நிறுவனம், தரைப்பணி சாதனங்களுக்காக $16.2 மில்லியன் செலவில் புதிய பழுதுபார்ப்பு, பராமரிப்பு மையத் தைத் திறந்திருக்கிறது. சாங்கி விமானச் சரக்கு நிலை யத்தில் ‘டிநாட்டா’ சரக்கு நிலை யத்திற்குப் பக்கத்தில் அமைந் துள்ள 6,900 சதுர மீட்டர் பரப் பளவு கொண்ட மையம், ஓராண்டில் சராசரியாக 9,000க்கும் மேற்பட்ட பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணிக ளைக் கையாளும். தற்போதைய மையத்தைவிட இது பெரும் மேம்பாடு என்று புதிய மையத்தின் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் நிறுவனம் நேற்று குறிப்பிட்டது.

பாசிர் ரிஸ் முகாமுக்கு வந்த புருணை சுல்தான்

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட புருணை சுல்தான் ஹசனல் போல்கியா நேற்று சிங்கப்பூர் ஆயுதப் படையின் பாசிர் ரிஸ் முகாமுக்கு வருகைஅளித்தார். அவருடன் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், ராணுவப் படை தலைவர் மெல்வின் ஓங் ஆகியோர் இருந்தனர். பாசிர் ரிஸ் முகாமில் இடம்பெற்ற சிங்கப்பூர் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்புப் படையின் பாவனை பயிற்சியையும் வான்குடை வீரர்களின் சாகசங்களையும் சுல்தான் போல்கியா பார்வையிட்டார். அத்துடன், பாவனை பயங்கரவாதிகள் இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தும் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டார்.

‘ஜி20’ மாநாடு: ஜெர்மனியில் மெர்க்கல்-பிரதமர் லீ சந்திப்பு

பெர்லின்: சிங்கப்பூரும் ஜெர் மனியும் தற்காப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இரு நாடுகளும் இணையப் பாதுகாப்பு ஒத்துழைப்பில் கையெழுத்திட வும் சம்மதித்துள்ளன. மேலும் புதிய அம்சங்களான ஆய்வு, மேம்பாட்டுத் துறை, நிதித் தொழில்நுட்பம், விளை யாட்டு ஆகியவற்றிலும் இரு நாடுகளும் ஒத்துழைக்கத் தயா ராக உள்ளன என்று பெர்லின் சென்றிருக்கும் பிரதமர் லீ சியன் லூங், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சாங்கி விமான நிலையம் முனையம் 4ஐ பார்க்க வாய்ப்பு

சாங்கி விமான நிலையம் முனையம் 4ஐ பார்க்க வாய்ப்பு

சாங்கி விமான நிலையத்தின் புதிய நான்காவது முனையம் திறக்கப்படுவதற்கு முன் சிங்கப்பூரர்கள் ‘போடிங் பாஸ்’ எனப்படும் அனுமதி அட்டைகளைப் பெற்று அந்த விமான நிலையத்தின் உள்ளே சென்று தங்களுடைய பைகளுக்கு எப்படி முகவரியைப் பொருத்துவது என்பதையெல்லாம் நேரடியாகத் தெரிந்துகொள்ளலாம். அங்கு இருக்கும் தீர்வை இல்லா கடைகளில் அவர்கள் பொருட்களை வாங்கலாம். புதிய முனையத்தின் பொது வரவேற்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் அந்தப் பொது வரவேற்பு நிகழ்ச்சி செயலி மூலம் பலவற்றையும் தெரிந்துகொள்ள முடியும்.

பிரதமர் லீ: குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என நாடாளுமன்றத்தில் நிரூபணம்

பிரதமர் லீ சியன் லூங்

பிரதமர் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தாயிற்று, இனி மீண்டும் நாம் நமது பணிகளைக் கவனிக்கும் நேரம் வந்துவிட்டது என்று நாடாளுமன்றத்தில் இரு நாட்களாக நடந்த விவாதத்தை முடித்து வைத்த பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இதில் தகவல்கள் முன்வைக்கப்பட்டு தகுந்த விளக்கங்கள் தரப்பட்டு விட்டதாக அவர் கூறினார். அரசாங்கம் எவ்வாறு செயல் படுகிறது, ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பாக என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் வெளிப்படையாக தெரிவிக்கப் பட்டு அவற்றில் உண்மையில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டன.

Pages