You are here

தலைப்புச் செய்தி

5.21 மி. பயணிகளைக் கையாண்ட சாங்கி விமான நிலையம்

ST PHOTO: JAMIE KOH

சாங்கி விமான நிலையம் சென்ற ஜூன் மாதத்தில் 5.21 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. 2016 ஜூன் மாதத்துடன் ஒப்பு நோக்க இது 7.7% அதிகம். எல்லா வட்டாரங்களில் இருந் தும் சிங்கப்பூருக்கு வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த உயர்வுக்குக் காரணம் என சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது. ஆக அதிகமாக, ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது இந்தியப் பயணிகளின் எண் ணிக்கை 25% கூடியுள்ளது. அதற்கடுத்ததாக, சிங்கப்பூருக்கு வந்து சென்ற வியட்னாமியப் பயணிகளின் எண்ணிக்கை 12% அதிகரித்தது.

வனவிலங்குகளைப் பாதுகாக்க மண்டாய் சுற்றுச்சூழல் பாலம் மண்டாயில் அமைக்கப்படும்

படம்: மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ்

இயற்கைவள சுற்றுலா மையத்தின் சுற்றுவட்டாரக் காடுகளில் வாழும் வனவிலங்குகள் மீதான பாதிப் பைக் குறைக்க 2019 கடைசிக் குள் தரையிலிருந்து 9 மீட்டர் உய ரத்தில் புதிய வனவிலங்கு பாலம் கட்டப்படும். ‘மண்டாய் இக்கோ=லிங்க்’ என்றழைக்கப்படும் புதிய பாலம் 110 மீட்டர் நீளமும் 44 மீட்டர் அகலமும் கொண்டிருக்கும். மண் டாய் லேக் சாலையின் குறுக்கே பாலத்தில் செல்லும் வனவிலங்கு களுக்கு உணவும் நிழலும் தர பாலத்தில் மரங்கள் இருக்கும். காடுகளை இருப்பிடமாகக் கொண்ட வனவிலங்குகள் மீதான பாதிப்பைக் குறைக்க குத்தகை யாளர்களுக்கு உயிரினப் பன்மயம் பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சியை மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ் நடத்தும்.

மும்பை: கட்டடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் மரணம்

இந்தியாவின் மும்பை புறநகரில் நேற்று நாற்பதாண்டு பழமையான நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் மாலை வரை 12 பேர் உயிரிழந்தனர். பெரிய காங் கிரீட் பலகைக்குள் பலரும் மாட்டி யிருப்பதாகவும் அதனை அகற்றி குடியிருப்பாளர்களை மீட்கும் பணி நடப்பதாகவும் மும்பை தீயணைப்பு நிலையத்தின் தலைமை அதிகாரி பி.எஸ். ரஹாங்டேல் தெரிவித்தார். காட்கோபார் என்னும் இடத்தில் தாமோதர் பார்க் பகுதியிலிருந்த அந்தக் கட்டடத்தின் தரைத்தளத் தில் தாதிமை இல்லம் ஒன்று இயங்கி வந்தது. காலை 10.45 மணியளவில் கட்டடம் இடிந்த போது அங்கு அதிகமான நோயா ளிகள் இல்லை என்று தெரிவிக் கப்பட்டது.

கடலில் தத்தளித்த யானைகளைக் காப்பாற்றிய இலங்கை கடற்படை

படம்: ஏஎஃப்பி

திரிகோணமலை கடலோரப் பகுதி யிலிருந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, தத்தளித்தபடி இருந்த இரண்டு குட்டி யானை களை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றிக் கரைசேர்த்தனர். சுற்றுக்காவல் படகு மூலம் வழக்கமான கடலோரக் கண்கா ணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் சிலர் கடலில் தத்த ளித்தப்படி இருந்த அவ்விரு குட்டி யானைகளையும் கண்டனர். இதையடுத்து, கடற்படையின ரும் திரிகோணமலை வனத்துறை அதிகாரிகளும் இணைந்து அந்த யானைகளை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர். யானைகளை மீட்பதற்காக மூன்று அதிவேக சுற்றுக்காவல் படகுகளையும் கடற் படையின் முக்குளிப்பாளர்கள் குழு ஒன்றையும் கடற்படை அங்கு அனுப்பியது.

மலேசியா: தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே எம்ஆர்டி நிலையங்களில் விஷமிகள் கைவரிசை

படம்: டுவிட்டர்

மலேசியாவில் புதிய பெருவிரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு ஒரு வாரகாலமே ஆகும் நிலையில் சில ரயில் நிலையங்களில் பொதுச் சொத்துகள் விஷமிகளால் சேதப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றைச் சரிசெய்ய ஆயிரக் கணக்கான ரிங்கிட்டைச் செலவிட வேண்டிய நிலைக்கு அதன் உரி மையாளரான ‘எம்ஆர்டி கார்ப்’ தள்ளப்பட்டுள்ளது. தலைநகர் கோலாலம்பூரின் மத்திய வர்த்தக வட்டாரத்தை, நகரின் வடமேற்கு, தென்கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள குடி யிருப்புப் பகுதிகளுடன் இணைக் கும் வகையில் 21 பில்லியன் ரிங்கிட் செலவில் அந்த எம்ஆர்டி சேவை ஏற்படுத்தப்பட்டது.

கூடுதல் மூத்தோர் உதவிகளுடன் முன்னோடித் தலைமுறை தூதுவர்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முன்னோடித் தலை முறை தொகுப்பு மூத்தோர் நல்ல உடல் நலத்துடன் வாழ அதிகமாக உதவிபுரியும். வீடு வீடாகச் செல் லும் தொண்டூழியர்கள் முதியோ ரைச் சந்தித்து இதனைத் தெரி விக்க உள்ளனர். முன்னோடித் தலைமுறை தூது வர்கள் என்று அழைக்கப்படும் அத்தகைய 3,000 தொண்டூழியர் கள் மூத்த குடிமக்களை சுகாதாரப் பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்வர். இதர மூத்தோருடன் இணைந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அவர்கள் உற்சாகப் படுத்துவர். அத்துடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் தோழமைத் தொடர்பை ஏற்படுத்து மாறு மூத்தோரை அந்தத் தூது வர்கள் ஊக்குவிப்பர்.

360 கோணத்தில் யுடியூப் வழி நேரடி ஒளிபரப்பு

இவ்வாண்டின் தேசிய நாள் கொண்டாட்டம் வெவ்வேறு கேம ராக்கள் வழியாக 360 கோணத்தில் யுடியூப் வழியாக ஒளிபரப்பப்படு வதால் பார்வையாளர்கள் வீட்டில் இருந்தவாறே காட்சிகளை நேரடி யாக ரசிக்க முடியும். வானத்திலிருந்து தரையிறங் கும் ‘ரெட் லயன்ஸ்’ வீரர்கள், அதிவேகத்தில் பாயும் படகுகள் போன்ற சாகசக் காட்சிகளும் பார்வையாளர்களுக்கு உண்மை யான அனுபவத்தைத் தரும். மூன்று இடங்களிலிருந்து மூன்று கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகள் ஒருங் கிணைக்கப்படுகிறது. இதற்காக பார்வையாளர் அரங்கம், புரோமனேட், மேடை ஆகிய இடங்களில் கோணங்களி லிருந்து கேமராக்கள் இயக்கப்படு கின்றன.

ஐந்து தொழில்துறைகளில் வேலை தேட அதிக உதவி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலை தேடுவோருக்கு வளர்ச்சி கண்டு வரும் ஐந்து தொழில் துறைகளில் வேலை கிடைக்க உதவும் வகையில் அதிக முயற் சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர்களைப் பொருத்தமான வேலைகளுடன் இணைக் கும் முயற்சிகள் அமைச்சர்களின் மேற்பார்வையில் இடம்பெறும் என்றும் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே தெரிவித்துள்ளார். அந்த ஐந்து தொழில்துறை களும் தொழில்நுட்பக் கோளாறு களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அதே நேரத் தில் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு ஏராளமான சாத்தியங்கள் இருப்ப தாகவும் திரு லிம் குறிப்பிட்டார்.

‘டோடோல்’ கிண்டிய பிரதமர் லீ சியன் லூங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அங் மோ கியோ, செங்காங் தொகுதிவாசிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதமர் லீ சியன் லூங் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் நேற்று கலந்துகொண்டார். சமூகப் பூங்கா ஒன்றில் அளிக்கப்பட்ட மதிய உணவு டன் பிரதமர் உட்பட பலரும் சேர்ந்து சமைத்த ‘டோடோல்’ என்னும் மலாய் பலகாரம் வந்திருந்தோருக்கு வழங்கப் பட்டது. ஏறக்குறைய 700 பேர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில், மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டேரல் டேவிட், திரு அங் ஹின் கீ, டாக்டர் இந்தான் அஸ`ரா மொக்தார், திரு கான் தியாம் போ, மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேம்பாலக் கட்டுமானம் இடிந்து விழுந்தது; கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி ரத்து

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டில் இருந்து தீவு விரைவுச்சாலை நோக்கிச் செல்லும் துணைச் சாலைக்கு அருகே நேற்று அதி காலை மேம்பாலக் கட்டுமானம் இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் மரணமடைந்தார்; மேலும் பத்துப் பேர் காயமடைந்தனர். இதையடுத்து, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நிலப் போக்குவரத்து ஆணையம் பாது காப்பு நடைமுறைகள் குறித்து சோதனை செய்வதற்காக தனது மற்ற எல்லா சாலை, ரயில் கட்டு மானத் தளங்களிலும் தற்காலிக மாகப் பணிகளை நிறுத்தியது.

Pages