You are here

தலைப்புச் செய்தி

தேசிய தினப் பேரணி உரை 2017: நீரிழிவு - இந்தியர்களின் சுகாதார நெருக்கடி

படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்படுதல், நாட்டின் இன நல் லிணக்கத்தை வலுப்படுத்துதல், பெரிய, சிறிய நாடுகளுடன் நமது நட்புணர்வை மேம்படுத்துதல், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் எனும் வருங் காலத் திறன் வளர்ச்சித் திட்டம் மூலம் ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்து அவர்கள் தங்களது வேலைகளைத் தக்கவைத்துக் கொள்ள உதவுதல் என்று அரசாங் கத்துக்கு உள்ள உடனடி முன்னு ரிமைகள் தொடர்ந்து செயல்படுத் தப்பட்டு வருகின்றன. இவ்வேளையில், இக்கால, எதிர்கால சிங்கப்பூரர்களின் நல் வாழ்வை மேம்படுத்த மூன்று முக் கிய அம்சங்களில் நாம் மிகுந்த அக்கறை காட்டவேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது 14வது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.

அனைவரையும் ஈடுபடுத்தி தமிழ் மொழியை கற்பிக்கும் அணுகுமுறை

படம்: சாவ்பாவ்

சுதாஸகி ராமன்

பாலர் பள்ளி தமிழ் வகுப்புகளுடன் தமிழ்மொழி கற்றல் நின்றுவிடுவ தில்லை. அதனை வீட்டிலும் பேச வேண்டும் என்று தெரிவித்தார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவ ருமான திரு விக்ரம் நாயர். ஆறாவது ஆண்டாக நேற்று நடைபெற்ற தாய்மொழிக் கருத் தரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய திரு விக்ரம், சிறு வயதிலிருந்தே தாய்மொழியைக் கற்கும்போது அது பிற மொழி களைச் சுலபமாகக் கற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்றார்.

பார்சிலோனா: தாக்குதல் பின்னணியில் எண்மர் அடங்கிய குழு

 படம்: ஏஎஃப்பி

பார்சிலோனாவில் வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக் குதலை எட்டுப் பேர் கொண்ட குழு நடத்தி இருக்கலாம் என ஸ்பெயின் அதிகாரிகள் நம்புவ தாகவும் பியூட்டேன் வாயுக் குப்பி களைப் பயன்படுத்த அந்தக் குழு திட்டமிட்டு இருந்ததாகவும் விசாரணை மேற்கொண்ட சட்ட அதிகாரிகள் நேற்று தெரிவித்த னர். தாக்குதல்காரர்கள் வாயுக் குப்பிகளைப் பயன்படுத்தி தாக் குதல் நடத்துவதற்கான சாத்தி யம் இருந்ததாக கெட்டலான் அர சாங்க அதிகாரி ஜோக்கிம் ஃபார்ன் நேற்றுக் காலை உள்ளூர் வானொலியில் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கம்

ஒத்திசைவு நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனை டெபி சோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ்

கோலாலம்பூர்: ஒத்திசைவு நீச்சல் வீராங்கனை டெபி சோ தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டி களில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். 19 வயது டெபி சோ 75.0000 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். 73.0333 புள்ளிகளைப் பெற்ற மற்றொரு சிங்கப்பூர் வீராங்கனை யான மியா யோங் வெண்கலப் பதக்கம் வென்றார். மலேசிய வீராங்கனை 74.7000 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக் கத்தைக் கைப்பற்றினார். முன்னதாக, சிங்கப்பூரின் பதக்க வேட்டையை வெள்ளிப் பதக்கத்துடன் தொடங்கி வைத் தனர் அம்பெய்தல் வீரர்கள்.

சிங்கப்பூர் பொருளியலை மேலும் வலுவாக்கும் பெரும் திட்டங்கள்

http://www.asiaone.com

சிங்கப்பூரின் பொருளியலை அடுத்த பத்தாண்டுகளில் வலுவுள் ளதாக மாற்றும் பெரிய உள் ளமைப்புத் திட்டங்களில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் நேற்றுக் காலை நடைபெற்ற சிங் கப்பூர் வட்டார தொழில் கருத் தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், “சிங்கப்பூர் ஒரு சிறிய சிவப்புப் புள்ளியாக இருக்கலாம். நாம் ஏற் கெனவே வளர்ச்சி கண்டுவிட் டோம் என்று உங்களில் பலர் கருத்து கொண்டிருக்கலாம். “ஆனால் சிங்கப்பூரை இன்னும் நாம் முழுமையாக உருவாக்க வில்லை என்பதே உண்மை.

பேராசிரியர் உல்ரிச் வெர்னர் சூட்டருக்கு கௌரவ குடியுரிமை

சிங்கப்பூரைத் துடிப்புமிக்க, பிரபல மான ஆய்வு மேம்பாட்டு மையமாக உருவாக்கியதற்காக சுவிட்சர் லாந்து நாட்டைச் சேர்ந்த 73 வயது பேராசிரியர் உல்ரிச் வெர்னர் சூட்டருக்கு சிங்கப்பூர் கௌரவ குடியுரிமை வழங்கிச் சிறப்பித் துள்ளது. அதிபர் டோனி டான் கெங் யாம் நேற்று அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந் தின் சூரிச் மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சூட்டருக்கு கௌரவ குடியிரிமையை வழங்கினார். கௌரவ குடியுரிமை என்பது சிங்கப்பூர் குடியுரிமை அல்லாதவர் களுக்கு வழங்கப்படும் ஆக உயர்ந்த அங்கீகாரமாகும்.

நாளை முதல் எஸ்எம்ஆர்டி நினைவு அட்டைகள் விற்பனை

படம்: எஸ்எம்ஆர்டி

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் 30வது ஆண்டுவிழா கொண்டாட் டங்களின் ஒரு பகுதியாக பயணி கள் நாளை முதல் வரம்புக்குட்பட்ட NETS FlashPay அட்டைகளை   வாங்கலாம். அந்த அட்டைகள் எஸ்எம்ஆர்டி ரயில் நிலையங்களில் $12 விலைக்கு விற்கப்படும். அட்டை கள் $7 பயண கட்டண மதிப்பு உள்ளவை. எஸ்எம்ஆர்டி ரயில், பேருந்து, டாக்சி ஆகியவற்றின் கலை வடி வங்கள் அந்த அட்டைகளில் இடம்பெற்று இருக்கின்றன. பயணிகள் www.flashpay.nets. com.sg என்ற இணைய முகவரி மூலமாகவும் சிங்கப்பூர் முழுவதும் நடக்கும் NETS FlashPay சாலை காட்சிகளிலும் அவற்றை வாங்க லாம்.

சிங்கப்பூர்-இந்தோனீசியா 50 ஆண்டு இருதரப்பு உறவு

படம்: துணைப் பிரதமர் டியோவின் ஃபேஸ்புக்

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் தங்களுடைய 50 ஆண்டுகால இருதரப்பு உறவை இந்த ஆண்டில் கொண்டாடுகின்றன. இந்த நிலையில் இரு நாடுகளின் மக்களுக்கிடையில் பரஸ்பர தொடர்புகள் இன்னும் விரிவடையவிருப்பதாக துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தெரிவித்து இருக்கிறார். ஜகார்த்தாவில் இருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் நடந்த தேசிய நாள் விருந்தில் பேசிய டியோ, இரு நாடுகளின் இருதரப்பு உறவில் இந்த 2017வது ஆண்டு மிக முக்கிய மான மைல்கல்லாக இருக்கிறது என்றார்.

நீச்சல் குளத்தில் பாய்ந்த கார்; ஓட்டுநரைக் காணவில்லை

படம்: இணையம்

கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் காரை இறக்கிய ஓட்டுநரைக் காணவில்லை. சம்பவத்துக்குப் பிறகு அவர் ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற செவ்வாய்க் கிழமை அன்று செம்பவாங் கிரசெண்டில் உள்ள அந்த வளாகத்தில் காலை 9.00 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று காவல்துறையினர் கூறினர். அதே நாள் காலை 10.22 மணிக்கு சம்பவம் குறித்துத் தகவல் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வருங்கால சிங்கப்பூருக்கு மூன்று அம்சங்கள்

பிரதமர் லீ சியன் லூங். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

பயங்கரவாதம், வர்த்தகத் தடை போன்ற உடனடி பிரச்சினைகளை சமாளித்து வந்தபோதிலும் எதிர் காலத்துக்குத் தயாராகும் அம்சங் களிலும் சிங்கப்பூர் கவனம் செலுத்திவருவதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். நீண்ட காலத்துக்குப் பலனளிக்கக்கூடிய மூன்று அம்சங்களில் கவனம் செலுத்த பிரதமர் தமது தேசிய தினச் செய்தியில் அழைப்பு விடுத் துள்ளார். பாலர்பள்ளிக் கல்வியை மேம் படுத்துதல், நீரிழிவைத் தடுத்தல், அறிவார்ந்த தேசத்திற்கான தொழில்நுட்பத்தைத் தழுவுதல் ஆகியன அந்த மூன்று அம்சங் கள் என்று அவர் பட்டியலிட்டார்.

Pages