You are here

தலைப்புச் செய்தி

சான்: ஒன்றுபட்டு சவால்களை எதிர்கொள்வோம்

படம்: திமத்தி டேவிட்

வெற்றி என்பது ஒருவர் வெளிப் படுத்தும் கடினமான உழைப் பாலும் அவரது அறிவாற்றலாலும் பெற்றது என்றாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங் களை மேம்படுத்திக்கொண்டு அடுத்த தலைமுறையினரை வழி நடத்திச் செல்வதில்தான் அவர் களது ஆற்றல் உள்ளது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் மாணவர்களிடம் கூறினார். நேற்றிரவு தமிழர் பேரவை மற்றும் அதன் இணை அமைப்பு கள் நடத்திய 52வது தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர், 1965ஆம் ஆண்டில் மிகப்பெரிய சவால்களோடு இந்த நாட்டை வழிநடத்தப் போராடிய நமது முன் னோடித் தலைவர்களை நினைவு கூர்ந்தார்.

கடல் நீருக்குள் பாய்ந்த கார்; கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்ட ஓட்டுநர் கைது

மூழ்கிக்கொண்டிருந்த கார். காணொளி படம்: லெய் ஸிப்பிங்

‘செந்தோசா கோவ்’வில் கடல் நீருக்குள் பாய்ந்த காரில் இருந்த 36 வயது ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட் டார். கிரிமினல் குற்றச்சாட்டின் பேரில் பின் னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட செந்தோசா ஊழியர் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஓஷன் டிரைவில் ஒரு காரும் செந்தோசா பண்ணைக் காவலர் ஒருவரும் சம்பந்தப்பட்ட விபத்து பற்றி பிற்பகல் 2.08 மணிக்கு தங் களுக்குத் தகவல் வந்ததாக போலிஸ் தெரிவித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஓட்டுநர் நல்ல நினைவுடன் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. செந்தோசா பண்ணைக் காவலருக்கு லேசான காயம் ஏற் பட்டது.

துறைமுகங்களின் பாதுகாப்பு தரம் உயர்த்தப்படும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் துறைமுக ஆணையம் கடலில் ஏதாவது பேரிடர் ஏற்படும் போது அதைச் சமாளிக்க தான் எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த அவ் வப்போது பயிற்சிகளை நடத்தி வருகிறது. அந்த ஆணையம் நேற்று நடத்திய பயிற்சியில் கடலில் ஒரு படகிலிருந்து சுமார் 100 பேர் காப்பற்றப்பட்டனர். சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அந்த அரைநாள் பாவனைப் பயிற்சியை நேற்று நடத்தியது. பயணிகள் கப்பல் ஒன்றுக்கும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பயணிகள் படகுக்கும் இடையில் ஒரு விபத்து நிகழ்ந்துவிட்டதாக பாவனை செய்து, பயிற்சி நடத் தப்பட்டது. அந்தப் பயிற்சியில் சுமார் 100 பேரை அப்புறப்படுத்த வேண்டிய தேவை இருந்தது.

கதிர் நடிப்பில் திகில் அடிதடியுடன் உருவாகும் ‘சத்ரு’

கதிர், சிருஷ்டி டாங்கே

நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர், சிருஷ்டி டாங்கே ஜோடி சேர்ந்துள்ள படம் ‘சத்ரு’. தவறு செய்கிறவர்களுக்கு சட்டம் தராத தண்டனையை ஒரு தனி மனிதன் தருகிற கதையை விவரிக்கப் போகிறார்களாம். அடிதடி, திகிலுக்குப் பஞ்சமிருக்காதாம். “கதிர் மிடுக்கான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு இந்தப் படம் நட்சத்திர தகுதியை ஏற்படுத்தி தரும். செலவு குறித்து கவலைப்படமால் படத்தைத் தரமாக உருவாக்க தயாரிப்பாளர்கள் ஒத்துழைத்தனர்,” என்கிறார் நவீன் நஞ்சுண்டான்.

36 கட்டடங்களுக்கு தீ அபாயம்

சிங்கப்பூரில் மொத்தம் 36 கட்ட டங்களின் வெளிப்புற மேற்பூச்சு தீ பாதுகாப்புத் தரநிலைகளின்படி இல்லாதிருக்கலாம் எனக் கூறப் படுகிறது. அவற்றுள் ஒன்றான டோ குவான் சாலை யிலுள்ள தொழிற் சாலைக் கட்டடத்தில் கடந்த மே மாதம் தீ மூண்டதில் ஒருவர் உயிரிழந்தார். அந்தக் கட்டடங்களில் 15 கட்டடங்கள், தீயை விரைவாகப் பரவச் செய்யும் ‘தீப்பற்றக்கூடிய பூச்சுகள்’ பயன்படுத்தப்பட்டிருப் பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழக மாணவர் சேர்க்கை 2019ல் தொடங்கும்

ஆரம்பகால மழலையருக்கான நிபுணர் களை உருவாக்கும் நோக்குடன் புதி தாக அமையவிருக்கும் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழகம் வரும் 2019ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையைத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு நேற்று தெரி வித்தது. தேசிய கல்விக் கழகத்தின் ஒரு பகுதியாக அமையவிருக்கும் அக் கழகம் தற்போதைய கல்வி அமைச்சின் கல்வி சேவைகளுக்கான பிரிவு இயக்குநர் லோக்=இயோ டெக் யோங், 50, தலைமையில் இயங்கும்.

விசாரணை வளையத்திற்குள் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குற்றவியல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரின் பழைமையான இந்து ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வீரமாகாளி யம்மன் ஆலய நிர்வாகம் தொடர்பில் விசா ரணை நடந்து வருகிறது. ஆலய நிர்வாகம் குறித்து கருத்துகளைப் பெற்றதை அடுத்து அதுகுறித்து மறுஆய்வு செய்யப்பட்டது என்று அறநிறுவன ஆணை யாளர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மறுஆய்வில் ஆலய நிர்வாகம் தொடர்பில் அக்கறைக்குரிய சில அம்சங்கள் கண்டறியப் பட்டதாகவும் அறநிறுவன ஆணையாளர் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்குமுன் அது குறித்து விசாரணை தேவை என்றும் அந்த அறிக்கை கூறியது. அந்த அக்கறைக்குரிய அம்சங்கள் எவை என்பது தெரிவிக்கப்படவில்லை. 

அமெரிக்க போர்க் கப்பல் விபத்தில் உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு

சிங்கப்பூருக்கு அருகே விபத்துக் குள்ளான அமெரிக்க போர்க் கப்பலிலிருந்து காணாமல்போன பத்து பேரை தேடி மீட்கும் முயற் சியில் நேற்று உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்காவின் பசிபிக் படைப் பிரிவின் தளபதியான அட்மிரல் ஸ்காட் சுவிஃப்ட் இதனை நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரி வித்தார். சாங்கி கடற்படைத் தளத்தில் அவர் பேசினார். அமெரிக்கக் கப்பலின் உள்ளே மோதலால் நசுங்கியிருந்த பகுதி யில் உடற்பகுதிகளை அமெரிக்க முக்குளிப்பு வீரர்கள் கண்டு பிடித்தனர் என்றார் அவர். மலேசியாவும் ஒரு சடலத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் உடற்பாகங்கள் இன்னமும் அடையாளம் காணப்பட வில்லை.

அமெரிக்க மாலுமிகளை தேடி மீட்க சிங்கப்பூர் உதவிக்கரம்

ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரின் கிழக்குக் கடற் பகுதியில் நேற்றுக் காலை வர்த் தகக் கப்பல் ஒன்றுடன் மோதி சேதமடைந்த அமெரிக்க போர்க் கப்பல் யுஎஸ்எஸ் ஜான் எஸ். மெக்கைன் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இரு கப்பல்களும் மோதி விபத்து ஏற்பட்டபோது காணமற்போன பத்து மாலுமிகளைத் தேடி மீட் கும் பணி தொடர்ந்து நடைபெற் றது. சிங்கப்பூரின் கடல் எல்லை யில் உள்ள பெட்ரா பிராங்காவின் வடக்குப் பகுதியில் அவர்கள் தேடப்பட்டனர். இதற்கிடையே, மோதலின் போது போர்க்கப்பலில் பெரிய துவாரம் ஏற்பட்டதாக அமெ ரிக்கக் கடற்படை தெரிவித்தது. அதன் விளைவாக கப்பலி னுள் உள்ள அறைகளில் கடல் நீர் புகுந்தது.

Pages