You are here

தலைப்புச் செய்தி

நீரிழிவு மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் இருக்கவேண்டும்

வில்சன் சைலஸ்

நீரிழிவு தொடர்பான பரிசோதனை களும் மருத்துவச் செலவுகளும் நீரிழிவைக் கட்டுக்குள் வைப்பதற் குத் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்வதை உறுதிசெய்ய வேண் டும் என்றார் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன். பிற இனத்தவருடன் ஒப்பிடுகை யில் நீரிழிவால் பாதிக்கப்பட்ட மூத்தோரில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பது இந் திய சமூகத்தின் அக்கறைக்குரிய விவகாரமாக இருப்பதைச் சுட்டிய அவர், உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆகியவற்றை மேற்கொள்வதற் கான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என அறிவுறுத் தினார்.

நாடாளுமன்ற நாயகராகிறார் டான் சுவான் ஜின்

திரு டான் சுவான் ஜின்

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரான டான் சுவான் ஜின், 48, அப்பதவியிலிருந்து விலகி நாடாளுமன்றத்தின் புதிய நாயகராகப் பொறுப்பேற்க இருக்கிறார். வரும் திங்கட்கிழமை நாடாளு மன்றம் கூடும்போது பிரதமர் லீ சியன் லூங் நாடாளுமன்றத்தின் பத்தாவது நாயகராக திரு டான் சுவான் ஜின்னை முன்மொழிய இருக்கிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடு வதற்காக சென்ற மாதம் 7ஆம் தேதி திருவாட்டி ஹலிமா யாக்கோப் நாடாளுமன்ற நாயகர் பதவியில் இருந்து விலகியதால் அப்பதவி காலியாக இருந்தது. “திரு டான் சுவான் ஜின்னை நாடாளுமன்ற நாயகராகத் தாம் முன்மொழியவிருப்பது பற்றி பிரதமர் லீ மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

எல்லாரையும் உள்ளடக்கும் கலைகள் நிதிக்கு $1 மில்லியன்

சமூக சேவை அமைப்புகளின் உதவியைப் பெற்று வரும் சிறார் கள், மூத்த குடிமக்கள், உடற்குறை யாளர்கள் எல்லாரும் அரசாங்க நிதி ஒன்றின் கீழ் தொடர்ந்து கலைச் செயல்திட்டங்களை அனுப விக்கலாம். இதற்கு வகை செய்யும் ‘வீ கேர் ஆர்ட்ஸ் ஃபண்ட்’ என்ற நிதி யில் அடுத்த இரண்டு ஆண்டு களுக்கு $1 மில்லியன் போடப் படும். இதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு நேற்று கையெழுத்தானது. தேசிய கலைகள் மன்றமும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் அந்தக் குறிப்பில் கையெழுத்திட்டன. அவர் தெம்பனிஸ் ஹப் மையத் தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலாசார, சமூக இளையர் அமைச் சர் கிரேஸ் ஃபூ சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டார்.

சேம் டான்: எதிர்காலத்தில் வேலை இடத்தில் சுகாதாரமும் பாதுகாப்பும் மிக முக்கியம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழில்நுட்ப மாற்றங்கள் இப் போது படுவேகமாக இடம்பெற்று வருகின்றன. இந்தத் சூழலில் எதிர்காலத்தில் வேலைகள் எப்படி எப்படியெல்லாம் பரிணாமம் பெறும் என்பதைக் கணிப்பது சிரமமான ஒன்று என்று மனிதவள துணை அமைச்சர் சேம் டான் குறிப்பிட்டு இருக்கிறார். எதிர்கால வேலையிடப் பாது காப்பிற்கும் சுகாதாரத்திற்கும் எத் தகைய பாதிப்புகளை ஏற்படுத் தும் என்பதையும் இப்போதே கணிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். எதிர்கால வேலை வடிவம், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் என்பது பற்றிய உலக மாநாட்டில் நேற்று அமைச்சர் உரையாற்றினார்.

புதிய வீவக புளோக்குகளில் சூரிய சக்தி தகடுக்கு இடம்

படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புதிய புளோக்குகளில் சூரிய சக்தி தகடுகள் இனிமேல் வேக மாகவும் குறைந்த செலவிலும் பொருத்தப்படும். இந்த ஆண்டு மே மாதம் முதல், மேற்கூரையில் போதிய அளவு இடத்தைக் கொண்டுள்ள தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளில் (பிடிஓ) சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தும் வகை யில் வடிவமைப்புகள் இடம்பெறு கின்றன என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இதற்கேற்ப மேற்கூரையில் தண்ணீர்த் தொட்டிகள் பலவும் திருத்தி அமைக்கப்படுகின்றன. இத்தகைய கூரைகளில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்துவது எளிதாக இருக்கும்.

சிங்கப்பூர் நிறுவனம் சீனாவில் $206 மில்லியன் முதலீடு

பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங்

சீனாவின் தெற்கு குவான்சி மாநிலத்தில் ஒருங்கிணைந்த தளவாடப் போக்குவரத்து பூங்கா ஒன்றை உருவாக்க சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தொடக்கமாக $206 மில்லியனை (1 பில்லியன் யுவான்) முதலீடு செய்கிறது. குவான்சி தன்னாட்சி வட் டாரத்தின் தலைநகரான நான்னிங் நகரில் அந்த தளவாடப் போக்குவரத்துப் பூங்கா தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் அலுலவக அமைச்சர் சான் சுன் சிங் நேற்று கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் உரை யாற்றிய அமைச்சர், சீனாவின் குவான்சி வட்டாரத்தை மேற்குப் புற சோங்சிங் வட்டாரத்துடன் இணைக்கும் ரயில்வே கட்ட மைப்பிற்கு ஆதரவாக இந்த புதிய பூங்கா முக்கிய பணியாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தல்: ஹலிமா யாக்கோப் வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடை பெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான பிரசார முழக்க வரியையும் பிரசார குழு உறுப்பினர்களையும் நேற்று முன்தினம் அறிவித்த நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப், அதிபர் தேர்தல் வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். இத் துடன் அதிபர் தேர்தலில் போட்டி யிட விருப்பம் தெரிவித்துள்ள கடைசி வேட்பாளராக இவர் ஆகிறார். தனது பிரசார குழுவினர் புடைசூழ 63 வயது திருவாட்டி ஹலிமா யாக்கோப் நேற்றுக் காலை 10.45 மணிக்கு தேர்தல் துறை யிடம் தகுதி, சமூக சான்றிதழுக் கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சி; நேரில் பார்வையிட்ட பிரதமர்

செனோக்கோ மீன்பிடித் துறை முகத்தில் நேற்று ஒரு துப்பாக்கிக் காரன் திடீரென புகுந்து துப்பாக்கி யால் சுடத் தொடங்கினான். ஆயினும், இது உண்மையான சம்பவமல்ல! உள்துறைக் குழுவால் நடத்தப்பட்ட பாவனைப் பயிற்சியே இது. உள்துறைக் குழு தனது பாது காப்புச் செயல்திறன்களை வெளிக் காட்டிய இந்த பாவனைப் பயிற் சியை பிரதமர் லீ சியன் லூங் நேரில் பார்வையிட்டார். உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி யையும் பார்வையிட்ட திரு லீ, அது குறித்த ஒரு காணொளியைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘டெலிகிராம்’ இணைய ஒளிவழி யிலும் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூரின் 3வது மருத்துவப் பள்ளி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது

சிங்கப்பூரின் மூன்றாவது மருத்துவப் பள்ளி நேற்று அதி காரபூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு 54 மாணவர்களுடன் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ‘லீ கோங் சியான்’ மருத்து வப் பள்ளியை துணைப் பிரத மரும் தேசிய பாதுகாப்பு ஒருங் கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இப்பள்ளியில் தற்போது படித்து வரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பட்டம் பெறவிருக்கின்றனர். இந்தப் பள்ளியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணைப்பிரதமர் டியோ, “வருங்காலத்தில் மருத்துவத் துறையை தொழில்நுட்பம் மாற்றிய மைக்கும்.

பாலர் பள்ளி மேம்பாடு: ‘பிசிஎஃப்’ உதவும்

குழந்தைகள் படைத்த கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார் பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலர் பள்ளிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பிசிஎஃப் எனப்படும் மசெக சமூக அறநிறுவனம் ஆதரவு வழங்கும் என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். கல்வி புகட்டுவதோடு நில்லா மல் ஒருபடி மேலே சென்று கலை மற்றும் விளையாட்டின் மீதான குழந்தைகளின் ஆர்வத்தை வளர்ப்பதில் பிசிஎஃப் உதவிபுரி யும் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்கள் செயல் கட்சியின் சமூக அறநிறுவன அமைப்பான பிசிஎஃப் சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பாலர் பள்ளிகளை நடத்துகிறது. 360 குழந்தை பராமரிப்பு மற்றும் பாலர் பள்ளி களை அது நடத்தி வருகிறது.

Pages