You are here

இளையர் முரசு

2016: இளையரை ஈர்த்த இணையச் செயல்பாடுகள்

ஹவ்காங் அவென்யூ 10

யாஸ்மின் பேகம்

‘நிமிர்ந்த நன்னடை’ என்ற பாரதியாரின் கூற்றையெல்லாம் மறக்கடித்து கைபேசி, கைக் கணினிகளைப் பார்த்த வண்ணம் சாலைகளைக் கடந்தது, இரவு பகல் பாராமல் சிங்கப்பூரின் பல இடங்களுக்கும் இளையரை அலைய வைத்தது என இவை அனைத்தையும் சாத்தியமாக்கியது ‘போக்கிமோன் கோ’ விளையாட்டு. சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் ‘போக்கிஸ்டாப்’கள் இருந்ததால் அங்கெல்லாம் சென்று ‘போக்கிமோன்’களைத் தேடித் திரிந்தனர் இளையர்கள்.

பெண்களின் நம்பிக்கை ஒளி

சுதாஸகி ராமன்

சுதாஸகி ராமன்

ஆண், பெண் என்ற பாகுபாடு வெளிப்படையாகப் பார்க்கப்படாவிட்டாலும் எந்தவொரு துறையிலும் ஆண்களோடு போட்டியிட்டு பெண்கள் சாதனை புரியும்போது அது பெரிய, முக்கியமான வெற்றியாகவே இப்போதும் கருதப்படுகிறது. அந்த வரிசையில் சாதனைப் பெண்களுக்குச் சவாலான ஆண்டாகவே இருந்தது 2016. பொருளியல் சரிவு, அரசியல் கொந்தளிப்பு, பயங்கரவாதம் என்று புதிய மாற்றங்கள், எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றால் மக்களைத் திகைப்பில் ஆழ்த்திய 2016 இன்னும் சில நாட்களில் விடைபெற்றுச் செல்ல இருக்கிறது.

சிங்கப்பூரின் அடையாளமான ஜோசஃப் ஸ்கூலிங்

 ஜோசஃப் ஸ்கூலிங்

தம்முடைய இளம் வயது கதாநாயகரான மைக்கல் ஃபெல்ப்ஸுடன் போட்டியிட்டு அவரைப் பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்று சிங்கப்பூரின் அடையாளமானார் ஜோசஃப் ஸ்கூலிங். இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் நீச்சல் பிரிவில் அச்சாதனையைப் புரிந்தார் சிங்கப்பூரில் பிறந்த ஸ்கூலிங், 21. “சிங்கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும் சிங்கப்பூரர்களான நாமும் சாதனைகளைப் படைக்கலாம் என்பதை ஸ்கூலிங் நிரூபித்துள்ளார்,” என்று கூறினார் தெமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் அமீர் சுஹெல், 18. “ஜோசஃப் ஸ்கூலிங்கை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.

பன்முகத் திறன்களுடன் பரிமளிக்கும் அர்வின்

படங்கள்: அர்வின் செய்தி: யாஸ்மின் பேகம்

ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் சமையலறை உடையை அணிந்துகொண்டு விதவிதமாகச் சமைக்கத் தொடங்கிவிடுகிறார் 24 வயதான அலெக்ஸ் அர்வின் பிள்ளை. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால் ஆறு வயதிலிருந்தே சமையலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் அர்வின். தற்போது சமையல் மீதான அவரது ஈர்ப்பு தவிர்க்க இயலாததாகிவிட்டது. பெற்றோர் சமைப்பதைப் பார்த்து சிறு வயதில் தாமாகவே சமையல் கற்றுக் கொண்டதாகக் கூறிய அர்வின், பதினாறு வயதில் ‘பேக்கிங்’ கலையிலும் கால் பதித்தார். பெற்றோரும் அவருக்கு மிகுந்த ஆதரவு அளித்தனர்.

டிரம்பின் அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு உதவிய ஹிரித்தி

படம்: திமத்தி டேவிட்

யாஸ்மின் பேகம்

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டோனல்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு சிங்கப்பூரின் 15 வயது இந்திய மாணவி ஹிரித்தி மேனன் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்த வாய்ப்பு பெறுவதற்கு ஹிரித்திக்கு மின்னியல் தகவல் தொழில் நுட்பத்திலும் வர்த்தகத்திலும் இருந்த ஆர்வமே முக்கியக் காரணங்களாக விளங்கின. அப்போது தொடக்கநிலை இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஹிர்த்திக்குச் சில ஒட்டுவில்லைகளை (stickers) அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் அவரது பாட்டி.

வாயே இவரின் வரம்

கே. பிரதீபன்

சுதாஸகி ராமன்

பேசி மயக்குபவர்கள், பாடி மயக்குபவர்களைப் போல் வாயினால் ஒலிகளை எழுப்பி மயக்கும் வித்தைக்காரர்களும் உண்டு. அந்த ஜாலவித்தையில் கை தேர்ந்தவராக வளர்ந்து வரும் இளம் கலைஞர் சிங்கப்பூரின் பிரதீபன். ‘பீட்பாக்சிங்’ எனும் வாய் இசையில் திறன் பெற்று சிங்கப் பூருக்கு அனைத்துலக ரீதியில் பெருமை சேர்த்து வரும் 17 வயது கே. பிரதீபன் இத்துறையில் படிப் படியாக முன்னேறி வருகிறார். தொடக்கநிலையில் பயின்ற போது நண்பர்கள் மூலம் ‘பீட்பாக்சிங்’ இசைக்கு யூட்டியூப் காணொளிகள் வழி பிரதீபன் அறி முகமானார்.

மனப் பதற்றத்தை தணிக்க அடிக்கடி கை கழுவுபவர்கள்

யாஸ்மின் பேகம்

மிதமிஞ்சிய மதுப்பழக்கத்திற்கு அடுத்து, சிங்கப்பூரர்கள் அதிகமாக பாதிக்கப்படுவது மனச் சுழற்சி எனும் மனநலப் பிரச்சினையால். சமீபத்தில் ‘மனநல கழகம்’ வெளியிட்ட ஆய்வு 33 சிங்கப்பூரர்களில் ஒருவர் மனச் சுழற்சியினால் அவதிப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. ‘ஒசிடி’ (Obsessive compulsive disorder) எனப்படும் மனச் சுழற்சி நோய், பெரியவர்களுடன் சிறுவர்கள், இளையர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆண்டிற்கு 100 முதல் 200 சிறுவர்களும் இளையர்களும் மன சுழற்சி நோய்க்குச் சிகிச்சை பெற மனநல கழகத்தின் குழந்தைகள் ஆலோசனை மருந்தகத்தை நாடுகின்றனர்.

Pages