You are here

இளையர் முரசு

வளங்களைப் பகிர்ந்து செயல்திறன் மேம்பாடு

கார்த்திகேயன் சண்முகம்

நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்த தீர்வுகள் உருவாக்குவதுடன் மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தையும் வழங்குகிறது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயல்படும் ‘சிஓஐ-எஸ்சிஎம்’ எனப்படும் புத்தாக்க, விநியோகத் தொடர்பு நிர்வாக நிலையம். நிறுவனங்கள் தனிப்பட்ட திறன்களை வளர்ப்பதுடன் ஒன்றிணைந்து நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொண்டு பொதுவான சவால்களைச் சமாளிக்கும் விதத்தில் 2013ஆம் ஆண்டிலிருந்து பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி வழங்கி வருகிறது இந்த நிலையம்.

கல்வி, திறன் மேம்பாட்டுக்கு உதவிக்கரம்

சமைத்த உணவை அலங்கரிக்கும் கணபதி தனபாலன்.

கணபதியின் பெற்றோர் இருவரும் வீட்டில் மிக சுவையான உணவை சமைத்துத் தருவார்கள். குறிப்பாக, தாயார் சமைக்கும் பிரியாணியின் மீது கணபதிக்கு மிகவும் விருப்பம் என்பதால் தாயாரைப் போல் தானும் சுவையான உணவைச் சமைக்கவேண்டும் என்று அவரும் விரும்பினார். முதன்முதலாக ஆட்டிறைச்சி பிரியாணி செய்த அவரது சமையல் பயணம் முக்கியமான இலக்குடன் தொடர்கிறது. சமையல் திறனை வளர்த்துக்கொள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சமையல் படிப்பை மேற்கொண்டார் கணபதி தனபாலன், 22.

மாணவர் படைப்பில் உருவாகும் ‘மோகா’

‘மோகா’ படைப்பில் ஒரு காட்சிக்கான ஒத்திகையில் மாணவர்கள். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்

உலகில் நிலவி வரும் போர், சண்டை சச்சரவுகள் அதனி டையே வாழ்ந்து வரும் காதல், மனிதாபிமானம் போன்றவற்றின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டது தான் ‘மோகா’. நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் இவ்வாண்டு படைக்கும் கலை இரவுக் கொண்டாட்டம் ‘மோகா 2017’. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ‘மோகா’ வின் கருப்பொருள் ‘மோதலும் காதலும்’. அன்றாட வாழ்வில் காதலின் தாக்கம், காதல் இல்லையெனில் அதனால் ஏற்படும் மோதல்கள் போன்றவற்றை ஆராய முனைந்துள்ளது ‘மோகா’ குழு.

‘மோகா’ படைப்பில் ஒரு காட்சிக்கான ஒத்திகையில் மாணவர்கள். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்

நிதி கல்வியறிவு இயக்கம்

படம்: ஐடிலிக் நிறுவனம்

அஷ்வினி செல்வராஜ்

நிதி தொடர்பான கல்வியறிவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை யும் தனி நபர் எதிர்காலத்தின் மீதான அதன் தாக்கத்தையும் வலியுறுத்துவதற்காக தொடங் கப்பட்டதுதான் ‘இட்ஸ் லிட்’ எனும் நிதி தொடர்பான கல்வி யறிவு பற்றிய இயக்கம். அண்மையில் நீ ஆன் பல துறைத் தொழிற் கல்லூரி மாணவர்கள் நிதி தொடர்பான கல்வியறிவு பற்றிய விரிவான ஆய்வு ஒன்றை இளையர் களிடையே நடத்தினர்.

 

‘இட்ஸ் லிட்’ இயக்கத்தை ஏற்பாடு செய்த நீ ஆன் தொழிற் கல்லூரியின் விளம்பரம், பொதுமக்கள் தொடர்புத் துறையில் பட்டயக்கல்வி பயிலும் மாணவர்கள். படம்: ஐடிலிக் நிறுவனம்

கட்டுடல் பெற கட்டுக்கோப்பு

கிஷண்டிரா தனபாலன்

சுதாஸகி ராமன்

உடல் பருத்துக் காணப்பட்டதால் சிறு வயதில் தன்னம்பிக்கை இழந்து இருந்தார் கிஷண்டிரா தனபாலன், 23. இப்போது மல்யுத்த வீரரின் உடலமைப்புடன் உடல் கட்டழகுப் போட்டிகளில் பங்கேற் கும் அளவுக்கு முன்னேறியுள்ளார் அவர். மூன்றாண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் பயின்றபோது, தமது பருத்த உடலமைப்பின் காரணமாக பிடித்தமான உடைகளைக்கூட அணிய முடியாமல் இருந்தார் கிஷண்டிரா. அந்தச் சமயத்தில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு முதன்முதலில் தம் நண்பர் அடிலுடன் சென்ற கிஷண்டிராவின் வாழ்க்கை அதன் பிறகு தலைகீழாக மாறியுள்ளது.

Pages