You are here

இளையர் முரசு

தொழில்நுட்பம் துணைபுரியும்

ரேவதி.

சிறுவயதிலிருந்தே தமிழின் மீதான ஈடுபாடு, தேசிய கல்விக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்பை மேற்கொள்ள ரேவதி குணசேகரனுக்கு, 20, உந்துதலாக அமைந்தது. ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்ற கனவுடன் இருந்துவந்த ரேவதியின் தமிழ் ஆசிரியர்களும் தமிழ்மொழி மீதான அவரது ஆர்வத்தை மேலும் தூண்டினர். உயர்நிலைப் பள்ளியில், உயர்தமிழ்ப் பாடத்திற்கு வேறொரு பள்ளிக்குச் சென்று பயின்று வந்தபோதுதான், முழு நேரமாக தமிழில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன என்பதை அவர் அறிந்தார். “பலதுறை தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்துறையில் பட்டயக்கல்வி பயின்றேன்.

தமிழ்த்துறையில் பெருகிவரும் வேலைவாய்ப்புகள்

பொறியியல் துறையில் பட்டயக் கல்வியை மேற்கொண்டிருந்தும் தமிழ்மொழியின் மீதான ஆர்வத் தால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மொழி, இலக்கியம் சார்ந்த இளங்கலைப் பட்டக் கல்வியை மேற்கொண்டார் ஆனந்த் குமார், 28 (வலது படம்). சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆனந்த் பகுதிநேரமாக இந்தப் படிப்பை மேற்கொண்டார். “நான் தற்போது செய்யும் பணிக்கு மொழிபெயர்ப்பு அடிப் படையாக உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள ஆவணப் படங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் போது, இருமொழிகளிலுமே திறன்பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது,” என்றார் ஆனந்த்.

வித்தியாசமான வடிவங்களில் தமிழ் எழுத்துகள் உருவாக்கம்

பிருந்தா

அஷ்வினி செல்வராஜ்

தொடக்கத்தில் ஃபிரிலான்சர்.காம் என்ற இணையத்தளத்தில் சில நிறுவனங்களின் தேவைக்கு ஏற்றவாறு சின்னங்களையும் தலைப்புகளையும் வடிவமைத்து வந்தார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பட்டதாரியான பிருந்தா மேனன். சமூக ஊடகம் வழியாக இந்தியாவின் கேலிச் சித்திரக் கலைஞர் ஒருவரின் படைப்புகளைப் பார்த்த பிருந்தா, நிறுவனங்களுக்கு வடிவமைத்துத் தரும் பாணியைவிட கேலிச்சித்திர வடிவமைப்பு பாணியே தன்னுடைய ஓவியத் திறனுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை உணர்ந்தார்.

நுணுக்கங்கள் நிறைந்த தமிழ் எழுத்து உருவாக்கம்

படம்: திமத்தி டேவிட், சசிகுமார்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத் தமிழர் பேரவை 2012ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்த உலகத் தமிழ் மாநாட்டின் தலைப்புச் சின்னத்திற்காக நடத்தப்பட்ட வடி வமைப்புப் போட்டியில் முதன் முதலாகப் பங்கேற்ற ஜே.எஸ்.சசி குமார் வெற்றி பெறவில்லை. இருப்பினும், சசிகுமாரின் வடிவமைப்பைப் பார்த்த அவாண்ட் நாடகக் குழுவின் இயக்குநர் செல்வா, தமது நாடகங்களுக்கான தலைப்புகளையும் சுவரொட்டி களையும் வடிவமைத்துத் தரு மாறு கேட்டுக்கொண்டார். தமிழ் எழுத்துருக்களை தொடர்ந்து வடிவமைப்பதற்கு அது அடித்தளமாக அமைந்தது. அப்போதுதான் தமிழ் எழுத்துரு வியல், வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படைகளை சசிகுமார் கற்றுக்கொண்டார்.

‘புரோ போனோ’ விருது

படம்: பெரித்தா ஹரியான்

‘ஷரியா’ சட்டம் என்னும் இஸ்லாமிய சட்டத்தை ஆராய்ந்து, இஸ்லாமியர்களின் தனித்துவ உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மாணவர்களால் தொடங்கப்பட்ட ஒரு குழு முயற்சிக்கு ‘ப்ரோ போனோ’ விருது பெற்றுள்ளார் பிரபு தேவராஜ். இந்தக் குழு முயற்சிக்கு சிங்கப்பூர் தேசியப் பல்கலைகழக ‘புரோ போனோ’ குழு, இஸ்லாமிய சங்கம், ஐஆர்பி என்னும் சட்ட நிறுவனம் ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் நடத்திய 25வது ‘புரோ போனோ’ விருது நிகழ்ச்சியில் அந்த விருதைப் பெற்றார் திரு பிரபு.

தமிழ்மொழி விழாவில் முதல்முறையாக தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் அரங்கேற்றப்பட்டுள்ள நாடகம்

‘செங்குழல் சீவிய பத்தினித் தீ’ என்ற தலைப்பில் பட்டிமன்றம், நாடகம், இசைக்காணொளிப் போட்டி என்று மூன்று விதமான அங்கங்களோடு அரங்கேறியது ‘பார்வை 2017’.

பார்வையாளர்கள் சுற்று ஒன்று தொழில்நுட்பத்தின் உதவியோடு விறுவிறுப்பாக நடைபெற்றது இவ்வாண்டின் சிறப்பு. சங்கத் தமிழ்ப் புழக்கத்தையும் தமிழ் இலக்கியங்களையும் பற்றி தொழில்நுட்பத்தின் துணையோடு இளையர்களுக்காக இளையர்களே படைத்து வரும் பார்வை நிகழ்ச் சியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

பற்களின் சுத்தம் பேணுவதில் பின்தங்கி இருக்கும் இளையர்கள்

பற்களைச் சரியாகத் துலக்காவிட் டால் வாய்க்குள் தண்ணீரோ அல்லது உணவோ இறங்காது. வாயைத் திறந்து மற்றவர் களிடம் பேசுவதற்குக்கூட நாம் தயக்கம் கொள்வோம். பற்களுக்கிடையே அழுக்குகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு, அதனால் பல உடல்நல பிரச் சினைகளும் ஏற்படுகின்றன. தினமும் இரண்டு வேளை பற்களைத் துலக்குவதன் அவ சியத்தை நாம் அறிந்திருந்தாலும் பற்களைத் துலக்குவதைவிட முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பழக்கம், நூலைக் கொண்டு பல் இடுக்குகளைச் சுத்தம் செய்வது. பற்களைத் துலக்கும்போது நாம் பற்களை மேலோட்டமாகத் தான் சுத்தம் செய்கிறோம்.

Pages