You are here

இளையர் முரசு

3,000 இளையருக்கு நிரலிடல் பயிற்சி வழங்கும் கூகல் நிறுவனம்

படம்: கூகல் நிறுவனம், செய்தி: ரவீணா சிவகுருநாதன்

அறிவார்ந்த தேசமாக மாறிவரும் சிங்கப்பூரில் எதிர்காலத்துக்குத் தேவையான திறன்களை இளம் வயதினரிடையே வளர்க்கும் நோக்கில 8 முதல் 15 வயது வரையிலான பிள்ளைகளுக்கு நிரலிடுதல் பயிலரங்கை நடத்துகிறது கூகல் நிறுவனம். சிண்டா, சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், மெண்டாக்கி, யுரே‌ஷியர் சங்கம் ஆகிய சுய உதவி அமைப்புகளுடன் ‘கோட் இன் தி கம்யூனிட்டி’ என்ற நிரலிடல் பயிலரங்கை 20 வாரங்களுக்குக் கூகல் நிறுவனம் நடத்துகிறது. அதில் முதல் 10 வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள் இம்மாதம் 20ஆம் தேதி தாங்கள் இதுவரை கற்றுக்கொண்டவற்றையும் உருவாக்கிய மென்பொருள்களையும் சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர் ஆகியோரிடம் பகிர்ந்துகொண்டனர்.

தேசிய தமிழ்மொழி பண்பாட்டு முகாமில் புத்தாக்கத்துடன் பாரம்பரியம்

கபடியில் கைவரிசை காட்டிய மாணவிகள். : படம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம்

தமிழ்மொழி, கலாசாரம், பாரம் பரிய பண்பு நெறிகளை மாண வர்களிடம் புத்தாக்கம் நிறைந்த முறையில் கொண்டு செல்லும் விதத்தில் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் தேசிய தமிழ்மொழி பண்பாட்டு முகாமை நடத்தியுள்ளது. இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற இந்த விறுவிறுப் பான முகாமில் 150 மாணவர்கள் ஆர்வத்துடன் மொழி, பாரம் பரியம் சார்ந்த தேடலில் ஈடுபட்டனர். “இக்கால மாணவர்களுக்கு மிகவும் நெருக்கமான தொழில் நுட்பம், அவர்களுக்குப் பரிச்சய மில்லாத பாரம்பரியம் ஆகிய இருவேறு கூறுகளை ஒன்றாக இணைத்து கற்றல் விளைவு களாக இந்த முகாமில் கொண்டு வந்தோம்,” என்றார் முகாமின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் ஆசிரியருமான திருமதி.கலாராணி.

தகுதியை உயர்த்திய தணியாத ஆர்வம்

படம்: சஹானா

மாதங்கி இளங்கோவன்

உயர்நிலைப்பள்ளியில் பல தோல்விகளைக் கண்டிருந்தாலும் முன்னேற்றம் குறித்த அயராத சிந்தனையால் வர்த்தகத் துறையில் பட்டயக் கல்வியை முடித்துள்ளார் 21 வயது சஹானா மனோகரன். கணிதம், கணக்கியல் பாடங் களில் மிகுந்த ஆர்வம் கொண் டிருந்த சஹானா, நன்யாங் பல துறைத் தொழிற்கல்லூரியில் வர்த்த கப் பாடத்தைத் தேர்ந்தெடுத்து இவ்வாண்டு பட்டயமும் பெற்றார். உயர்நிலைப்பள்ளியில் சில சவால்களைச் சந்தித்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வழக்கநிலைத் தேர்வினை முடித்து, பின் சாதாரணநிலைத் தேர்வினையும் எழுதினார்.

பிரியங்காவின் விருப்பத் தேர்வு கலைத்துறை

பிரியங்கா. படம்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி

இருபது வயதிலும் கேலிச்சித்திரக் கதைகள், காணொளிகளை விரும்பிப் பார்க்கிறார் பிரியங்கா ரவிச்சந்திரன். இளம் வயதிலிருந்தே கேலிச் சித்திரங்களின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு, அந்தத் துறையில் பட்டயக் கல்வி பயிலும் அளவுக்கு அவரிடையே வேர்விட்டது. உயர்நிலைப் பள்ளியில் முழுமையாக அறிவியல் சார்ந்த பாடங்களைப் படித்த பிரியங்கா, பலதுறைத் தொழிற்கல்லூரியில் கலை சார்ந்த படிப்பினை மேற்கொள்ளப்போவதாகச் சொன்ன போது அவரது தந்தை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை.

விளையாட்டு பயிற்றுவிப்பாளராக இலக்கை எட்டிய கபிலன்

ரா.கபிலன் நாயுடு

இளம் வயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம்கொண்ட ரா.கபிலன் நாயுடு, அத்துறையில் பயிற்றுவிப்பாளராக விரும்பி இலக்கை வகுத்து அதனை எட்டிப்பிடித் திருக்கிறார். உயர்நிலைப் பள்ளியில் காற்பந் துக் குழுவிலும் திடல்தடக் குழுவிலும் இடம்பெற்ற அவருக்கு விளையாட்டில் இருந்த ஆர்வம் விளையாட்டுப் பயிற்றுவிப்பிலும் பரவத் தொடங்கியது. அந்த ஆர்வமே அவரை அத்துறையில் பட்டயப் படிப்பையும் மேற்கொள்ளத் தூண்டியது. அண்மையில் ரிபப்ளிக் பல துறைத் தொழிற்கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் படிப்பில் பட்டயம் பெற்றார் கபிலன்.

மேற்கல்வித் திட்டங்களில் தமிழ் சார்ந்த பாடங்கள்

துர்கா‌ஷினி முரளி

சிறு வயதிலிருந்தே தமிழ் இலக்கியம் படிக்கவேண்டும் என்ற ஆசை சிஎச்ஐஜே உயர்நிலைப்பள்ளியை (தோபாயோ) சேர்ந்த துர்கா‌ஷினி முரளிக்கு, 18, இருந்தது. ஆனால், உயர்நிலைப் பள்ளியில் உயர்தமிழ் பாடத்தைப் படித்தால் மட்டுமே தமிழ் இலக்கியத்தைப் படிக்க முடியும் என்ற கட்டாயமும் இருந்தது. சாதாரண கல்விப் பிரிவில் இருந்ததால் அவரால் உயர்தமிழ் பாடத்தைப் பயில முடியவில்லை. இவ்வாண்டு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தொடங்கப் பட்டுள்ள ‘ஆரம்பக்கல்வியில் தமிழ் மொழி’ என்ற பட்டயக்கல்விப் பிரிவின் மூலம் அவரது விருப்பம் நிறைவேற வுள்ளது. இத்துறையில் சேரும் முதல் முப்பது மாணவர்களில் துர்கா‌ஷினியும் ஒருவர்.

Pages