இளையர் முரசு

‘டாடா கன்சல்டன்சி’ நிறுவனம் நடத்திய அனைத்துலக ‘கோட்விட்டா’ எனும் கணினி நிரலாக்கப் போட்டியில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் வெனெஸ் விஜயா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர், ஈப்போ மாநிலம் ஆகியவற்றிலுள்ள தொடக்கப்பள்ளி, பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி வழங்கும் பல்கலைக்கழகம், பயிற்சிக் கல்லூரி ஆகிய கற்றல் நிலையங்களுக்குப் பயணக்குழு சென்றிருந்தது. 16 பேர் கொண்ட இப்பயணக்குழுவில் மாணவ ஆசிரியர்களுடன் தமிழ்த்துறை விரிவரையாளர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரே பயணத்தில் ஐந்து கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் வகையில் பயணம் நடைபெறுவது இதுவே முதல் முறை.
மக்களுக்கு எரிச்சலூட்டும் ஓர் உயிரினம், சிங்கப்பூரின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றைச் சமாளிக்க உதவுகிறது என்று சொன்னால் அதை நம்புவீர்களா? உருவத்தில் சிறுத்தாலும் இந்த ஈவகையை, ‘பிளாக் சோல்ஜர் ஃபிளை’ அதாவது, ‘படைவீரன் ஈ’ என்று அழைப்பர்.
அனைத்துலக உபகாரச் சம்பளத்திற்குத் தகுதிபெற்றதன் மூலம் சிங்கப்பூருக்குப் படிக்க வந்த ராகுல் ராஜு, 22, தனது வேலைப் பயிற்சித் திட்டம் முடியும் முன்னரே ‘எஸ்எம்ஆர்டி’ போக்குவரத்து நிறுவனத்தில் ஒரு முழுநேரப் பணியை உறுதிசெய்துவிட்டார்.