You are here

தலைப்புச் செய்தி

இயற்கை வள பெருமையை கொண்டாட இருநாள் விழா

படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரின் இயற்கை பாரம்பரியத் தைப் போற்றிக் கொண்டாட ஊக்கமூட்டும் நோக்கத்தில் தேசிய பூங்காக் கழகம் இரு நாள் விழாவை நேற்றுத் தொடங்கியது. இந்தக் கழகத்துக்கும் பல் கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங் கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை உள்ளிட்ட சுமார் 30 அமைப்புகளுக்கும் இடைப்பட்ட கூட்டுத் திட்டமாக அந்த விழா இடம்பெறுகிறது. உயிரியல் பன்மயம், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தாவ ரங்களின் சிற்றினங்கள், இந்த க் கழகத்தின் புதிய பூங்கா இணைப் புப் பாதை முதலான பலவும் அந்த விழாவில் முக்கிய இடத்தைப் பெற்று இருக்கின்றன.

விரைவுச்சாலை விபத்துகள்: மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம்

படம்: ‌ஷின்மின்

தீவு விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் நடந்த விபத்து ஒன்றில் மோட்டார்சைக்கிளோட்டி படுகாயம் அடைந்தார். சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலை யில் இரவு 7 மணிக்கு நடந்த இந்த விபத்தில் கறுப்பு நிற கார் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியது. மோதப்பட்ட மோட்டார் சைக்கிள் வலது பக்கத் தடத்திற் குத் தள்ளப்பட்டது. வலது பக்கத் தடத்தில் சென்றுகொண்டிருந்த வெள்ளை கார் ஒன்று மோட்டார் சைக்கிளோட்டி மீதும் அவரது வாக னத்தின் மீதும் ஏறிச் சென்றது. அப்போது அந்த காரில் இருந்து தீப்பொறிகள் கிளம்பியதா க வும் அந்த மோட்டார் சைக்கிளை கொஞ்ச தூரத்திற்கு அந்த கார் இழுத்துச் சென்றதாகவும் தெரிகிறது.

ஜகார்த்தா தாக்குதல்காரர்களுக்கு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு

இந்தோனீசியாவின் கிழக்கு ஜகார்த்தா நகரிலுள்ள ஒரு பேருந்து முனையத்தில் பயங்கர வாதிகள் இருவர் நேற்று முன் தினம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் மூன்று போலிஸ் காரர்கள் கொல்லப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர். தாக்குதல்காரர்களாகச் சந் தேகிக்கப்படும் இக்வான் நூருல் சலாம், சொலிகின் ஆகிய இரு வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து இருந்தனர் என்று இந்தோனீசிய போலிஸ் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் அவ்விருவரும் மாண்டு போயினர். குறைந்த வீரியமுள்ள வெடிபொருட்களை அவர்கள் தாக்குதலுக்குப் பயன் படுத்தியதாக போலிஸ் குறிப்பிட்டது.

அதிபர் டான்: சிங்கப்பூர்-போலந்து இருதரப்பு உறவு எதிர்காலத்தில் இன்னும் சிறப்படையும்

படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூருக்கும் போலந்துக்கும் இடைப்பட்ட உறவு மனமுவந்த தாகவும் நீடித்து நிலைத்திருப்பதா கவும் இருக்கிறது என்று அதிபர் டோனி டான் கெங் யாம் தெரி வித்து இருக்கிறார். போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு ஏழு நாள் அதிகாரத்துவ பயணம் மேற் கொண்டுள்ள அதிபர் டான், போலந்து அதிபர் டுடா அளித்த அதிகாரபூர்வ விருந்தில் உரையாற் றியபோது இவ்வாறு தெரிவித்தார். சிங்கப்பூரும் போலந்தும் 48 ஆண்டு அரசதந்திர உறவைக் கொண்டாடும் இத்தருணத்தில் இருநாட்டு உறவு அதற்கு அப் பாலும் பழமையானது என்றார் அதிபர் டான்.

தீவு விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

ஜூரோங்கை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில், தோ பாயோ லோரோங் 6 வெளிவழிக்கு அருகே நேற்று பிற்பகலில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அந்தக் கருநீல நிற வோக்ஸ்வேகன் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானது. பிற்பகல் மூன்றேகால் மணியளவில் சம்பவ இடத்திற்கு ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ சென்றபோது தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டது. சம்பவம் குறித்து பிற்பகல் 2.35 மணிக்குத் தகவல் கிடைத்ததும் உடனடியாக ஒரு தீயணைப்பு வாகனம், ஓர் அவசர மருத்துவ வாகனம், இரு தீயணைப்பு மோட்டார்சைக்கிள்களை அனுப்பியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழோடு இணைவோம் முகாமில் முத்தமிழ் புழக்கம்

படம்: திமத்தி டேவிட்

இயல், இசை, நாடகம் வழி யதார்த்தமான சூழலில் தமிழை எளிமையான முறையில் பயன்பாட் டிற்குக் கொண்டுவரும் நோக்கத் துடன் ‘தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!” என்ற இரு நாள் முகாமை கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு கடந்த வார இறுதியில் அறுசுவையுடன் நடத்தியது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பைத் தமிழைக்கொண்டு வலுப்படுத்தும் நோக்கில் சூச்சின் உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச் சியில் 35 பெற்றோர்= பிள்ளைகள் ஜோடியாகக் கலந்துகொண்டனர்.

இளையரின் ‘ரயில் நகரத்’தில் அமைச்சர் கோ

இளையரின் ‘ரயில் நகரத்’தில் அமைச்சர் கோ

ரயில் ஆர்வலரான 19 வயது ஐசக் நாதனியெல் டி’சோசா (இடது) அமைத்துள்ள ‘ரயில் நகரத்தை’ தாம் பார்வையிட்டதாக போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எஸ்எம்ஆர்டி ரயில் சேவைத் தூதுவரான ஐசக் இந்த ‘ரயில் நகரத்தை’ வீட்டில் தமது அறையில் அமைத்துள்ளார். இவர் செம்பவாங்கில் வசித்து வருகிறார். பல்வேறு மாதிரிகளில் ரயில்கள், ரயில் கட்டமைப்புகள் ஒன்பது ரயில் பாதைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஐசக்கின் ‘ரயில் நகரம்’ இருப்பதாக செம்பவாங் குழுத்தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கோ பதிவு செய்துள்ளார்.

2வது முனையம் வழக்கநிலைக்குத் திரும்பியது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீ விபத்து காரணமாக மூடப்பட்ட சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் நேற்று அதிகாலை 3 மணிக்கு வழக்கநிலைக்குத் திரும்பியது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 5.40 மணிக்கு சென்னைக்கு 6E54 என்ற இண்டிகோ விமானம் அந்த முனையத் திலிருந்து முதலாவது விமானமாகப் புறப்பட்டது என்று சாங்கி விமான நிலையம் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெரிவித்தது. அந்த விமானத்தில் புறப்பட்ட பயணி களில் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது அவ்னீஷ் மேத்தாவும் ஒருவர்.

சாங்கி விமான நிலையத்தில் தீ

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2ல் நேற்று மாலை தீ மூண்டது. முனையம் இரண்டின் பயணிகள் புறப்பாட்டுப் பகுதியில் தீ பற்றியதாக போலிஸ் தனது ஃபேஸ்புக் தளத்தில் மாலை 5.43 மணிக்கு அறிவித்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் இணைந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப் பட்டதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது. மாலை 5.40 மணிக்கு குளிரூட்டி குழாயில் இருந்து புகை கிளம்பியதை அடுத்து அங்கு தீ எச்சரிக்கை ஒலி ஒலிக் கத் தொடங்கியதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அங்கு விரைந்த விமான நிலைய அவசரகால சேவைக் குழு அங்கிருந்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு க் கொண்டு சென்றனர்.

கடற்பகுதியைப் பாதுகாக்க பன்முனை ஒத்துழைப்பு தேவை

சிங்கப்பூர் கடற்படையின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு உலகெங் கிலுமிருந்து பல்வேறு கடற்படைகள் ஒன்றுகூடிய கொண்டாட்டம், சிங்கப்பூரின் வலுவான உலகளா விய நட்புறவுக்கும் கட்டமைப்புக ளுக்கும் சான்று என அதிபர் டோனி டான் கெங் யாம் நேற்று கூறினார். சிங்கப்பூர் கடற்படை ஒருமித்த நோக்கமுடைய கடற்படைகளுடன் நீடித்த பங்காளித்துவத்தை வளர்த் துக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய டாக்டர் டான், “நிலையான கடல்துறையையும் பாதுகாப்பான கடற்பகுதியையும் உறுதிப்படுத்த, பன்முனை ஒத்துழைப்பு முக்கியம்” என்று கூறினார்.

Pages