தமிழகத்தில் அரிசி விலை உயர்வு

திருச்சி: போதிய விளைச்சல் இல்லாததால், தமிழகம் முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

மொத்த சந்தையில் பொதுவான அரிசி வகைகளின் விலை (அளவில் பெரியது) கிலோ ரூ46லிருந்து ரூ.51 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள சாகுபடி மையங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக டெல்டா பகுதியில் இருந்து வரத்து குறைந்துள்ளது, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளது, வடமாநிலங்களில் பெய்து வரும் மழை போன்ற காரணங்களால் தமிழகம் முழுவதும் அரிசி விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும்,  இம்மாதம் 18 ஆம் தேதி முதல் பொட்டலமிடப்பட்ட அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

தளர்வான அரிசி ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது என்றாலும், மாநில உணவுத் துறை அனைத்து கடைக்காரர்களுக்கும் அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை பொட்டலமிடப்பட்ட வடிவில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதை அரிசி ஆலைகளும் அரிசி வியாபாரிகளும் சுட்டினர். அதனால் விலை ஏறும் என அவர்கள் கூறினர்.

இதனையடுத்து, சில மாதங்களுக்குப் முன்பு ஒரு கிலோ ரூ.40க்கு விற்கப்பட்ட அரிசி தற்போது ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. 25 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

தரமான முதல் ரக சாப்பாட்டு அரிசி 25 கிலோ மூட்டை கடந்த மாதத்தில் ரூ.1,400லிருந்து ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200 லிருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது.

இட்லி அரிசியும் 25 கிலோ மூட்டை ரூ.850 லிருந்து ரூ.950 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் கர்நாடக பொன்னி என்று பிரபலமாக அழைக்கடும் 1 கிலோ ஆர்.என். ஆர். அரிசி ரூ. 46-க்கு விற்கப்பட்டது. தற்போது சில்லறை சந்தைகளில் ஒரு கிலோவுக்கு ரூ. 55 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல், மணச்சநல்லூர் பொன்னியின் விலையும் (ஒரு வருட ரகம்) கிலோ ரூ.65 ஆக உள்ளது.

தமிழகத்தில் வடநாடுகளிலும் பெய்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

தமிழகத்தில் பெய்த மழையால், புதிதாக சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சம்பா பருவம் என்பது அக்., முதல் ஜனவரி வரை. இப்பருவத்தில் டெல்டா மாவட்டங்களில், விளைச்சல் அதிகம் இருக்கும். இம்முறை, மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் சேதம், ஏற்றுமதி, நெல் இருப்பு குறைவு போன்ற காரணங்களால், அரிசி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொங்கல் நெருங்குவதால், பச்சரிசி விலை உயர்ந்து வருகிறது.

தமிழக அரிசி ஆலைகளில், அரவைக்கு தேவையான நெல் இருப்பு குறைவாக உள்ளது. பொதுவாக 10,000 முதல் 15,000 மூட்டை நெல் கையிருப்பு வைத்திருப்பர். தற்போது 3,000 அல்லது 4,000 நெல் மூட்டை கையிருப்பு உள்ளது. வட மாநிலங்களிலும் இதே நிலை தான்.

மோட்டா ரக அரிசி, அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எனினும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அண்டை மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரிக்கும். அதன்பிறகு அரிசி விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!