ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட கோஹ்லியும் ஒரு காரணம்!

மும்பை: உலகில் அதிகமானோர் ஈடுபாடுகொண்டுள்ள இரண்டாவது விளையாட்டாகத் திகழும் கிரிக்கெட், 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறவுள்ளது.

வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் டி20 வகை போட்டியாக கிரிக்கெட் விளையாடப்படவுள்ளது.

அமெரிக்காவிலும் கிரிக்கெட் விளையாட்டு செல்வாக்கு பெற்று வருகிறது. அடுத்த ஆண்டு உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகளை வெஸ்ட் இண்டீசும் அமெரிக்காவும் இணைந்து நடத்தவுள்ளன. இந்தியாவில் இடம்பெறும் ஐபிஎல் தொடரைப்போல, அமெரிக்காவில் இவ்வாண்டு முதன்முறையாக ‘மேஜர் லீக் கிரிக்கெட்’ போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்படி அமெரிக்காவில் கால்பதிக்கத் தொடங்கியிருந்தாலும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட இந்திய அணியின் நட்சத்திர விளையாட்டாளரும் முன்னாள் தலைவருமான விராத் கோஹ்லியும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டின் அனைத்துலகத் தூதுவராகத் திகழ்கிறார் கோஹ்லி. இன்ஸ்டகிராமில் 250 மில்லியன் பேர் பின்தொடரும் முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் கோஹ்லி.

உலக அளவில், கிறிஸ்டியானோ ரொனால்டோ (585 மில்லியன்), லயனல் மெஸ்ஸி (464 மில்லியன்) என்ற இரு முன்னணிக் காற்பந்து ஆட்டக்காரர்களுக்குப் பிறகு, மூன்றாவதாக இன்ஸ்டகிராமில் அதிகம் பின்தொடரப்படுவது கோஹ்லிதான்.

உலகளவில் கோஹ்லிக்கு இருக்கும் புகழையும் செல்வாக்கையும் ஒப்புக்கொண்டுள்ளார் லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நிக்கோலோ கேம்பிரியானி.

“விளையாட்டுகளை இளையர்களைக் கவரும் வகையில் வைத்திருக்க இணைய உலகிலும் அதற்கு வலுவான இடமிருப்பது மிக மிக முக்கியம். கிரிக்கெட்டிற்கு அத்தகைய இடமுண்டு. என் நண்பர் விராத்தைப் பாருங்கள். 314 மில்லியன் பேருடன் உலகளவில் சமூக ஊடகங்களில் அதிகம் பின்தொடரப்படும் மூன்றாவது விளையாட்டாளர் கோஹ்லிதான். லெப்ரோன் ஜேம்ஸ், டாம் பிராடி, டைகர் உட்ஸ் என மூவரைச் சேர்த்தாலும் அதனைவிட இது அதிகம். இது லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்கிற்கு உறுதியாக வெற்றியைத் தரும்,” என்றார் அவர்.

இப்படி 1900ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற கோஹ்லி ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு ஒரே ஒரு கவலையும் எழுந்துள்ளது. 2028ஆம் ஆண்டில் கோஹ்லிக்கு 40 வயது ஆகியிருக்கும். அப்போதும் அவர் கிரிக்கெட் விளையாட்டாளராக நீடிப்பாரா, ஒலிம்பிக்கில் அவர் விளையாடுவாரா என்பதுதான் அந்தக் கவலை!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!