நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு

‘உற்பத்தித்திறன் பாதிக்காதபோது ஊதியத்தைக் குறைக்க எந்த அடிப்படையும் இல்லை’

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைக் கொண்ட ஊழியர்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாவிட்டால் அவர்களின் சம்பளத்தைக் குறைக்க முதலாளிகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் செவ்வாய்க்கிழமை (மே 7) தெரிவித்துள்ளார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு கோரிக்கைகளுக்கான முத்தரப்பு வழிகாட்டி, படிப்படியான சம்பள உயர்வு முறையுடன் எவ்வாறு இணங்கி வரும் என்று நாடாளுமன்ற நியமன உறுப்பினர் ராஜ் தாமஸின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

டிசம்பர் 1ஆம் தேதி நடப்புக்கு வரும் புதிய வழிகாட்டி நெறிமுறைகள், அனைத்து முதலாளிகளும் தங்கள் ஊழியர்களின் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கான வசதியைக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

முதலாளிகள் கோரிக்கைகளை நியாயமான முறையில் பரிசீலித்து இரண்டு மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அவர்கள் “நியாயமான வணிக அடிப்படையில்” ஒரு கோரிக்கையை நிராகரிக்கலாம். அதுகுறித்து ஊழியருக்கு எழுத்துபூர்வமாக காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

பயிற்சி, உற்பத்தித்திறன் மேம்பாடுகளுடன் ஊதிய உயர்வுக்கான கட்டமைப்பையும் படிப்படியான சம்பள உயர்வு முறை வழங்குகிறது. இது துப்புரவு, பாதுகாப்பு போன்ற சில துறைகளின் குறைந்த ஊதிய உள்ளூர் ஊழியர்களைக் உள்ளடக்கியது.

எந்தவொரு வழிகாட்டுதலும் படிப்படியான சம்பள உயர்வு முறை குறித்த சிந்தனையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்கள் முத்தரப்பு மற்றும் ஒத்துழைப்பு அடிப்படையில் உள்ளன என்றும், இது “மிகவும் நுணுக்கமான அணுகுமுறையை” பிரதிநிதிக்கிறது என்றும் அவர் கூறினார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கான பரிசீலனை முறையில், மனநலம் போன்ற தங்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டால், அது தங்களின் தொழில் முன்னேற்றத்தை பாதிக்கக்கூடும் என்ற ஊழியர் சிலரின் அச்சத்தை ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் முன்வைத்தார்.

முதலாளிகள் ஊழியர்களின் செயல்திறனை மதிப்பிட்டு, அவர்கள் பணியை அடிப்படையாகக் கொண்டு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும். அவர்களின் செயல்திறனைப் பாதிக்காத சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று திருவாட்டி கான் மீண்டும் வலியுறுத்தினார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை சிங்கப்பூர் இயல்பாக்குவதால், உள்ளூர் ஊழியர் அணி போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வது முக்கியம் என்று திருவாட்டி கான் தலைமையிலான வழிகாட்டுதலுக்கான முத்தரப்பு பணிக்குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

தொலைதூர வேலைகள்,வெளிக் குத்தகைகள் ஏற்கெனவே உலகளாவிய போக்குகளாக உள்ளதை திருவாட்டி கான் மீண்டும் சுட்டினார்.

“வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்யாவிட்டாலும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும்போது அவர்கள் சிங்கப்பூர் மக்களுடன் போட்டியிடுவார்கள்,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் மட்டுமின்றி உலகளவில் வேலைகளுக்குப் போட்டியிட, உள்ளூர் ஊழியர்கள் தொடர்ந்து திறன்களை மேம்படுத்தி, உற்பத்தித் திறனுடன் இருப்பது மிகவும் முக்கியம் என்று திருவாட்டி கான் மேலும் கூறினார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு வழிகாட்டுதல்களின் விளைவாக சிங்கப்பூர் அதிக வேலைவாய்ப்புகளை இழக்குமா என்றும், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களாலும் வேலைகளை மறுவடிவமைப்பதாலும் நடுத்தர வயது நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்குப் பாதகமாக இருக்குமா என்றும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரல் சானின் கேட்டார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு என்பது ஊழியர்களின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கும் என்று அர்த்தமல்ல என்றார் திருவாட்டி கான்.

திறமைகளையும் செலவுகளையும் மதிப்பிடுவதில் வணிகங்கள் தங்கள் சொந்த அடித்தளத்தில் இயங்குகின்றன என்றார் அவர்.

நடுத்தர வயது ‘பிஎம்இடி’ பிரிவினர் வேலை வாய்ப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த அவர்களுக்கு சரியான திறன்கள் இருப்பதை உறுதி செய்வதிலும் அவர்களின் ‘ வாழ்க்கைத்தொழில் ஆரோக்கியம்’ மீதும் கவனம் செலுத்தப்படுவதாக திருவாட்டி கான் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசிய அவர், இந்த வழிகாட்டுதல்கள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை கட்டாயமாக்குபவையோ அல்லது கடுமையான இலக்குகளை நிர்ணயிப்பவையோ அல்ல என்று மீண்டும் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!