சிங்கப்பூர்க் கவிதைகள் உரையாடலைக் கிளர்த்தவேண்டும் என வலியுறுத்து

ஜனவரி மாதம் 27ஆம் தேதி மாலை, தேசிய நூலக வாரிய கட்டடத்தின் ‘தி பாட்’ அறையில் கவிஞர் இன்பாவின் ‘கடல் நாகங்கள் பொன்னி’ நூல் வெளியீடு கண்டது. இந்த நூலிலிருந்து தேர்ந்தெடுத்தக் கவிதைகளை ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவர்கள் வாசித்தனர்.

லீயெனும் ஆறாவது நட்சத்திரம் என்ற கவிதையைச் சிறப்பாக வாசித்த வர்ஷிகா தேசிய கொடியிலிருந்த ஐந்து நட்சத்திரங்களும் இறங்கிவந்து ஆறாவது நட்சத்திரத்தைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றதைச் சுவைபடக் கூறினார். தேசிய கல்விக் கழகத்தில் பயிலும் ஷ்ருதிகா, ‘நள்ளி ஊறும் குளம்’ என்னும் கவிதையில் ‘யாருடைய முள் கரண்டியில் புரள்கிறேன் நான்’ என்ற வரியை ரசித்ததோடு பெனடால் சக்கரங்கள் பூட்டிய சாரட்டுகளில் நகர்ந்து கொண்டிருக்கும் நகரத்தைப் பற்றியும் தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.

யாதுரி மற்றும் தேஜஸ்வினி இருவரும் தெருவைப் போலிருக்கும் ரயில் என்னும் நீள் கவிதையை மாறி மாறி வாசித்து விரைவு ரயில் பயணத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அஷ்வதாவும் நிவேதாவும் உலகின் முதல் இதயத் துடிப்பு என்னும் கவிதையைப் படித்தனர். வெண்ணிலா, வானதி இருவரும் தேசம் தாண்டும் பொன்னி என்ற அந்தாதி நடையில் எழுதப்பட்ட நீள் கவிதையைப் படைத்தனர்.

பழ.மோகன் அலைகளின் முதுகிலேறும் வீரனென ஏறி அமர்கிறேன் என்ற கவிதையில் சங்கப்பாடல்களையும் ஐந்து திணைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்டதைப் பகிர்ந்துகொண்டார்.

கவிஞர் மகேஷ் குமார் தனது உரையில் இன்பாவின் கவிதைகளில் தான் ரசித்த வரிகளைப் பற்றி பேசினார். கிளிப்பச்சை நிறச் சட்டையணிந்து சாலைகளின் நிற்பவன் தன் நிழலைத்தானே தேடுகிறான் என்ற வரியைத் தாண்டிச்செல்ல முடியவில்லை என்றும் மாய மலர் கவிதையில் மலருக்குள் மலரென மாறி நிற்கிறேன் என்ற வரிகளைத் தான் மிகவும் ரசித்ததாகக் கூறினார்.

முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் தங்கமழை என்ற கவிதையை மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தார் தங்கமாக மாறிய மூளையோடும் தங்கமாக மாறிய கண்களால் வருடும் பார்வையோடும்தான் இந்த உலகை வருடிக் கொண்டிருக்கிறோம் , இப்படியான கவிதைகள் இந்தக் காலச் சூழலுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டுள்ளன என்பதை சங்கப்பாடலுடன் எடுத்துரைத்தார்.

திரு சித்துராஜ் பொன்ராஜ் பேசுகையில், “சிங்கப்பூர் சார்ந்து எழுதப்பட்டுள்ள கவிதைகள் சிங்கப்பூரின் கதைகளும் தொன்மங்களும் திணை மயக்கங்களும் வாழ்க்கை முறைகளும் இந்த மண்ணில்தான் இருக்கின்றன. நம் வாழ்வும் இந்த நிலத்தின் போதாமைகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல்தான் இந்த மொத்தத் தொகுப்பும். ஒரு கவிதை உரையாடலைக் கிளர்த்தும்போதுதான் நம் நாட்டில் கவிதை வளர்ச்சியடைய முடியும் என்று குறிப்பிட்டார். சிங்கப்பூரில் இப்படியான நூல்கள் உரையாடல்களை கிளர்த்த வேண்டும், உரையாடல்கள் வழிதான் ஒரு நூல் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்,” என்று கூறினார்.

நூலை இன்பாவின் கணவர் கண்ணன் வெளியிட முதல் நூலை தமிழ் க்யூப் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் AT பிள்ளை பெற்றுக்கொண்டார். கவிமாலையின் மாதாந்திரச் சந்திப்பு நிகழ்வின் வழக்கமான அங்கங்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. பியன்கா அனபெல் பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் என்ற பாடலுக்கு நடனமாடினார்.

செய்தி: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!