இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு விற்பனையில் மோசடி; ஒரே ஆண்டில் 1,534 பேர் $1.1 மி. பறிகொடுத்தனர்

சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகளை விற்பதாகக் கூறி ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதில் சிக்கிய 1,534 பேர் ஒரே ஆண்டில் $1.1 மில்லியன் வரை பறிகொடுத்துள்ளனர்.

2023 ஜனவரியிலிருந்து 2024 ஜனவரி வரை நடந்த ஏமாற்றுச் சம்பவங்களில் அவர்கள் பணத்தை இழந்துள்ளனர்.

டெலிகிராம், கேரசல், ஃபேஸ்புக், எக்ஸ் (முந்தைய டுவிட்டர்) மற்றும் ஸியாஹோங்ஷு போன்ற ஊடகங்களில் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் விற்கப்படுவதை அறிந்த அவர்கள் அதனுடன் இணைக்கப்பட்ட செயலி வழியாகத் தொடர்புகொண்டுள்ளனர்.

இதையடுத்து நுழைவுச் சீட்டுகளை வாங்க வாட்ஸ்அப் அல்லது வீசாட் தளத்துக்கு அவர்கள் திருப்பிவிடப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் பேநவ், வங்கி பரிமாற்றம், அன்பளிப்பு அட்டைகள் போன்றவற்றின் மூலம் பணம் செலுத்துமாறு மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர்.

இதை நம்பிய அவர்கள் பணத்தை மாற்றியிருக்கின்றனர். பணம் கைமாறியதும் மோசடிக்காகரர்கள் கூடுதலாக பணம் கேட்டுள்ளனர் அல்லது நுழைவுச் சீட்டுகள் வழங்குவதை தாமதப்படுத்தினர் அல்லது தொடர்புகொள்ள முடியாமல் காணாமல் போயினர்.

சிலருக்கு நுழைவுச் சீட்டுகள் கிடைத்தாலும் அவை போலியானதாக இருந்தது.

2023 ஜூலையில், அந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி வரை குறைந்தது 522 பேர் ஏமாற்றப்பட்டனர் என்று காவல்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இழந்த தொகை குறைந்தது 518,000 வெள்ளி.

அதேபோல 2022ஆம் ஆண்டு முழுவதும் நடந்த மோசடிகளில் இழந்த 175,000 வெள்ளியுடன் ஒப்பிட்டால் 2023 இழந்தத் தொகை மும்மடங்காகியுள்ளது.

இந்த நிலையில் இணையம் வழியாக பொருள்களை வாங்கும்போது கவனமுடன் இருக்குமாறு காவல்துறை வலியுறுத்தியது.

குறிப்பாக, மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்கும்போது அதிக கவனம் தேவை. ஸ்கேம்ஷீல்ட் செயலி போன்ற பாதுகாப்பு அம்சங்களை கைப்பேசியில் சேர்த்துக் கொள்வது, வங்கிக் கணக்குகளுக்கு ‘2எஃப்ஏ’ பாதுகாப்பு முறையைப் பயன்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!