கடனை மீட்க கடைவீடுகளை விற்பனைக்கு விடும் டிபிஎஸ் வங்கி

சிங்கப்பூரில் $3 பில்லியன் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சீன நாட்டவர் இருவருக்குச் சொந்தமான பத்து கடை வீடுகளை டிபிஎஸ் வங்கி விற்பனைக்கு விட்டுள்ளது.

வாராக் கடனை மீட்க வங்கி அவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தக் கடை வீடுகளின் ஒட்டுமொத்த மதிப்பு $100 மில்லியனுக்குமேல் இருக்கும் என்று கவனிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களான ஜியாஷெங் அமோய், சுய் ஆகியவற்றின் மூலம் அந்தக் கடை வீடுகள் தனித்தனியே வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திரு சு பிங்காய், திரு சு ஃபூசியாங் இருவரும் முறையே அவ்விரு நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகினர்.

2023ல் நடைபெற்ற கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் மோசடி தொடர்பான விசாரணைக்கு இடையே அவர்கள் இருவரும் திடீரென்று சிங்கப்பூரிலிருந்து வெளியேறியதாகத் தெரிகிறது.

உரிமையாளர்கள் கடன் தொகையைச் செலுத்தத் தவறியதால் டிபிஎஸ் வங்கி கடந்த செப்டம்பரில் அவர்களின் நிறுவனங்களிலிருந்து வாராக் கடனை மீட்கவேண்டுமெனப் பதிவு செய்ததாக ‘அக்ரா’ எனப்படும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் கூறியது.

டிபிஎஸ் வங்கி இதுகுறித்துக் கருத்துரைக்க மறுத்துவிட்டது.

2022ல் கடன் குறித்த விசாரணையை வங்கி தொடங்கியது.

2023 டிசம்பர் 1ஆம் தேதி, வர்த்தக ஆலோசனை நிறுவனமான எஃப்டிஐ கன்சல்டிங் 10 கடை வீடுகள் தொடர்பில் மூன்று விளம்பரங்களை பிசினஸ் டைம்சில் வெளியிட்டது.

அவற்றில் ஒன்று தெலுக் ஆயர் ஸ்திரீட்டிலும் நான்கு, அமோய் ஸ்திரீட்டிலும் எஞ்சிய ஐந்து, கேலாங் ரோட்டிலும் அமைந்துள்ளன.

ஜனவரி 15ஆம் தேதி நிலவரப்படி 30க்கு மேற்பட்டோர் இந்தக் கடை வீடுகளை வாங்க விண்ணப்பித்திருப்பதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இணைய விளையாட்டுக் குற்றம் தொடர்பில் சீன அதிகாரிகளால் தேடப்படும் சைப்ரஸ் நாட்டவரான வாங் தேஹாய் பண மோசடி தொடர்பில் இங்கு குற்றம் சாட்டப்பட்டவர். அவருடன் இந்தக் கடை வீடுகளின் உரிமையாளர்களில் ஒருவரான திரு சு பிங்காய்க்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

திரு சு பிங்காய்க்கும் கேலாங் ரோடு கடை வீடுகளின் உரிமையாளரான திரு சு ஃபூசியாங்கிற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.

பண மோசடி வழக்கு விசாரணை இன்னும் தொடரும் நிலையில் இந்தக் கடை வீடுகளை வங்கி எப்படி விற்பனைக்கு விடுகிறது என்பது வியப்பளிப்பதாக சொத்துச் சந்தை முகவர்கள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!