சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு ‘சூப்பர்ஸ்டார்’ விருதுகள்

ஸ்ரீ நாராயண மி‌ஷன் தாதிமை இல்லத்தில் 224 படுக்கைகள் உள்ளன.

அங்கு பராமரிக்கப்படுபவர்களைக் கவனித்துக்கொள்ள நான்கு இயன் மருத்துவர்கள் (ஃபிசியோதெரப்பிஸ்ட்) மட்டுமே பணியில் உள்ளனர். அப்படியிருந்தும் நாராயண மி‌ஷனில் பராமரிக்கப்படுவோருக்குக் கூடுதல் சிகிச்சை அமர்வுகள்கூட வழங்கப்படுகின்றன.

அங்கிருக்கும் 20 தாதிமை உதவியாளர்கள், சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோருக்குத் தேவையான இயன் மருத்துவப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதால் அது சாத்தியமானது.

மனிதவள சவால்களைக் கையாள பராமரிப்பு ஊழியர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கில் மாற்றுத் துறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஸ்ரீ நாராயண மி‌ஷனின் தாதிமைப் பிரிவு இயக்குநரும் சிகிச்சைப் பிரிவுத் தலைவருமான குமாரி ஜெஸ்சிகா ஐடா சு இம்முயற்சியைத் தொடங்கி வைத்தார்.

மூன்று பிள்ளைகளுக்குத் தாயான குமாரி சு, தற்போது தாதிமையில் முனைவர் கல்வி பயின்று வருகிறார். இவ்வாண்டுக்கான சிங்கப்பூர் சுகாதாரச் சேவைத் தரம் விருது (சிங்கப்பூர் ஹெல்த் குவாலிட்டி சர்விஸ் அவார்ட்ஸ்) நிகழ்ச்சியில் ‘சூப்பர்ஸ்டார்’ விருது பெற்ற 16 பேரில் அவரும் ஒருவர்.

செவ்வாய்க்கிழமையன்று (23 ஜனவரி) விருது நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சரான டாக்டர் ஜனில் புதுச்சேரி 14வது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

2011ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் மூன்று ஆகப் பெரிய பொதுச் சுகாதாரக் குழுமங்களில் ஒன்றான சிங்ஹெல்த் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

குமாரி சு, சாங்கி பொது மருத்துவமனையின் அவசர சகிச்சை பிரிவின் நோயாளி சேவைக் குழுக்களில் ஒன்றுக்குத் தலைமை தாங்கும் குமாரி நெனி ஃபாடில்லா ஹஸ்னாவி உள்ளிட்ட சில வெற்றியாளர்களை டாக்டர் ஜனில் குறிப்பிட்டுப் பேசினார்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவதற்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கு ஆதரவும் பராமரிப்பும் வழங்குவதற்கான திட்டம் புதிதாகத் தொடங்கப்பட்டது. அதன்கீழ் பணியாற்றிய முதல் சில நோயாளி சேவைப் பணியாளர்களில் குமாரி நெனியும் ஒருவர்.

செங்காங் பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் பிரிவின் தலைவரும் மூத்த மருத்துவ ஆலோசகருமான இணைப் பேராசிரியர் லீ லூய் ஷியோங்குக்கும் ‘சூப்பர்ஸ்டார்’ விருது வழங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!