பணவீக்கம் 2023ல் 4.8 விழுக்காடாகக் குறைந்தது

பணவீக்கம் 2023ஆம் ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் கணிசமாக குறைந்தபோதிலும், டிசம்பர் மாதம் பொருள்களின் விலை அதற்கு முந்தைய மாதத்தைவிட ஏற்றம் கண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களைக் கணக்கில் கொண்டு பார்த்ததில் 2023ஆம் ஆண்டின் பணவீக்கம் சராசரியாக 4.8 விழுக்காடாக இருந்தது. இது முந்தைய 2022ஆம் ஆண்டில் 6.1 விழுக்காடாக இருந்தது என்று கூறப்படுகிறது.

எனினும், தனியார் போக்குவரத்து செலவு, தங்குவசதிச் செலவுகளைத் தவிர்த்துப் பார்த்தால், மூலாதார பணவீக்கம் 2023ஆம் ஆண்டு 4.2 விழுக்காடாக இருந்தது என்றும் இதுவே முந்தைய 2022ஆம் ஆண்டு 4.1 விழுக்காடாக இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு பணவீக்கம், பொருள், சேவை வரி 8%க்கு உயர்ந்ததால் ஏற்பட்டதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலாதாரப் பணவீக்கம் 4 விழுக்காடாகவும் ஒட்டுமொத்தப் பணவீக்கம் 5 விழுக்காடாகவும் இருக்கும் என்ற முந்தைய கணிப்புடன் தற்போதைய பணவீக்க புள்ளிவிவரங்கள் ஒத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆண்டு அடிப்படையில் பார்த்தால் கடந்த டிசம்பர் மாத மூலாதாரப் பணவீக்கம் 3.3%ஆக இருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. இது, அதற்கு முந்தைய நவம்பர் மாதம் 3.2% ஆக இருந்தது என்றும் இதில் புளூம்பெர்க் கணிப்பு 3%ஆக இருந்தது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், ஒட்டுமொத்த பணவீக்கம் டிசம்பர் மாதம், நவம்பர் மாதத்தில் இருந்த 3.6 விழுக்காட்டிலிருந்து 3.7 விழுக்காடாக இருந்தது என்றும் கூட்டறிக்கை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!