2023ல் அதிக பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகளுக்கு அதிக ஊதியத்துடன் முழுநேர வேலை

கடந்த 2023ஆம் ஆண்டில் புதிதாகப் பட்டயம் பெற்ற பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகள் அதிக சம்பளமும் சிறந்த வேலை வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.

சிங்கப்பூரின் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகள் நடத்திய வாக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்ட அண்மைய பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வின் (ஜிஈஎஸ்) விவரங்களின்படி, 2023ல் புதிய பட்டதாரிகளில் 60 விழுக்காட்டினர் முழு நேர நிரந்தர வேலைகளில் சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை 2022ல் 59 விழுக்காடாகவும், 2021ல் 58 விழுக்காடாகவும் இருந்தது.

ஒட்டுமொத்தமாக, 2023ல், 92.7 விழுக்காட்டு பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகள் பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் அல்லது முழு நேர தேசிய சேவை முடித்த பிறகு நிரந்தர, தன்னுரிமை வேலைகள் அல்லது பகுதி நேர வேலைகளைப் பெற்றனர்.

இது 2022 ஆம் ஆண்டின் 91.8 விழுக்காட்டிலிருந்து சிறிய அதிகரிப்பாகும், சிங்கப்பூர் பொருளியல் கொவிட்-19 பெருந்தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டதால் வேலை வாய்ப்புகளில் நிலையான முன்னேற்றத்தைத் தொடர்கிறது.

முழுநேர நிரந்தர வேலை பெற்ற பட்டதாரிகளின் சராசரி மொத்த மாதச் சம்பளம் 2022ன் $2,600இலிருந்து 2023ல் $2,800 ஆகி $200 அதிகரித்துள்ளது.

சுகாதார அறிவியல், மானுடவியல், சமூக அறிவியல், தகவல் மற்றும் மின்னிலக்கத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பட்டதாரிகள், மற்ற துறைகளின் பட்டதாரிகளை விட அதிக சம்பளம் பெற்றனர்.

சென்ற ஆண்டில் 10,757 புதிய பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகளில் மொத்தம் 8,065 பேர் ஆய்வில் பங்கேற்றனர். பட்டம் பெற்ற ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு 2023 அக்டோபர் 1ஆம் தேதி நிலவரப்படி அவர்களின் வேலை குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது.

கடந்த 2022 ஏப்ரல் 1க்கும் 2023 மார்ச் 31க்கும் இடைப்பட்ட காலத்தில் தங்கள் முழு நேர தேசிய சேவையை முடித்த 2020ன் 8,739 பட்டதாரிகளில் 5,055 பேரும் ஆய்வில் பங்கெடுத்தனர்.

“பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகள் மீது முதலாளிகள் காட்டும் நம்பிக்கையானது, ஊதிய வளர்ச்சியிலும் நிலையான வேலைவாய்ப்பு விகிதத்திலும் தெளிவாகத் தெரிகிறது,” என்று பலதுறைத் தொழிற்கல்லூரி ஜிஇஎஸ் குழுவின் சார்பில் பேசிய ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி முதல்வர் ஜீனி லியூ கூறினார்.

“வலுவான தொழில்துறை உறவுகளும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் பாடத்திட்டமும் தங்களை வேலைகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளக்கூடிய மீள்திறன் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளன,” என்றார் அவர்.

வேலையின்மை விகிதம் 2022ன் 8.2 விழுக்காட்டிலிருந்து 2023ல் 7.3 விழுக்காடாகக் குறைந்தது. தொற்றுநோயின் உச்ச காலகட்டமான, 2020ல் இந்த எண்ணிக்கை 12.6 விழுக்காடாக இருந்தது.

2023 ஆய்வில் பங்கேற்றவர்களில் 5 விழுக்காட்டினர் தன்னார்வப் பணிகளில் இருந்ததாகவும் 28 விழுக்காட்டினர் தற்காலிக அல்லது பகுதி நேரப் பணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, பகுதிநேர அல்லது தற்காலிக வேலைகளை மேற்கொண்டுள்ள பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகள் பாதிப் பேர் மேற்படிப்பைத் தொடர்கிறார்கள் அல்லது அதற்குத் தயாராகிறார்கள்.

தனிப்பட்ட பயிற்சி, படிப்புக்கேற்ற வேலைகளை அடையாளம் கண்டு தருவது போன்ற வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் தங்கள் பட்டதாரிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக சிங்கப்பூர், தெமாசெக், நீ ஆன், நன்யாங், ரிபப்ளிக் ஆகிய பலதுறைத் தொழிற்கல்லூரிகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

பட்டதாரிகள் தங்கள் பட்டயக்கல்வி தொடர்பான வேலை சார்ந்த 12 அல்லது 18 மாத பயிற்சித் திட்டத்தை மேற்கொள்ளும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை-படிப்புத் திட்டம் போன்ற
பட்டதாரிகளுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுத்தர பலதுறைத் தொழிற்கல்லூரிகள் தங்கள் தொழில்துறை பங்காளிகளின் கட்டமைப்பை பயன்படுத்துகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!