40 மீட்டர் உயரத்தில் பாரந்தூக்கியில் இருந்த ஆடவர் மீட்பு

துவாஸ் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 40 மீட்டர் உயர பாரந்தூக்கியில் இருந்து ஆடவர் ஒருவரை மீட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

அந்த 47 வயது ஆடவரை, தீயணைப்பு வீரர்களும் ‘டார்ட்’ எனப்படும் பேரிடர் உதவி, மீட்புக் குழுவின் வல்லுநர்களும் இணைந்து மீட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் துவாஸ் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானத் தளத்தில் மீட்பு நடவடிக்கை இடம்பெற்றது.

பாரந்தூக்கியை இயக்கிக் கொண்டிருந்தபோது, தனக்கு உடல் நலமில்லை என்றும் தன்னால் கீழே இறங்கிவர முடியவில்லை என்றும் ஆடவர் கூறியிருந்தார்.

பாரந்தூக்கியை இயக்கிக்கொண்டிருந்தபோது அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அந்தத் தளத்தை நிர்வகிக்கும் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

“ஆடவர் சுயநினைவுடன் இருந்தார். இருப்பினும் பாரந்தூக்கியில் இருந்து தானாகவே கீழே இறங்குவதில் சிரமத்தை எதிர்கொண்டார். குடிமைத் தற்காப்புப் படையினரும் அதை உறுதிப்படுத்தினர்,” என்று கழகம் குறிப்பிட்டது.

முன்னதாக, பாரந்தூக்கியில் இருந்து ஆடவரை மீட்க குடிமைத் தற்காப்புப் படையின் உதவியை நாடியதாக அது கூறியது.

‘டார்ட்’ குழுவைச் சேர்ந்த நான்கு வல்லுநர்கள் ஏணி வழியாக பாரந்தூக்கியை இயக்குபவர் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்றனர்.

உயரத்திலிருந்து மீட்பதற்கான கருவிகளைப் பொருத்தினர். பின்னர் ஆடவரை தூக்குப் படுக்கையில் கிடத்தினர். ஆடவரின் பாதுகாப்பை முன்னிட்டு, அவருடன் வல்லுநர் ஒருவர் தன்னைப் பிணைத்துக்கொண்டார். பின்னர் இருவரும் பாதுகாப்பாகக் கீழிறக்கப்பட்டனர்.

மருத்துவ உதவியாளர்கள் ஆடவரின் உடல்நிலையைச் சோதித்த பிறகு, அவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

ஊழியர் விரைவில் நலம்பெற வேண்டுவதாகவும் தேவைப்பட்டால் உதவி வழங்கும் பொருட்டு அவரின் முதலாளியுடன் இணைந்து செயல்படுவதாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!