fontsize: 60% 70% 80% 90%

மரம் வீழ்ந்து கார் சேதம்

அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு-பிடோக் சவுத் அவென்யு 1 சந்திப்பில் கார் ஒன்றின் முன்பக்கக் கண்ணாடி மீது மரம் விழுந்தது.
ஆனால் காரின் உள்ளே உட்கார்ந் திருந்த ஔட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

நேற்று புதன்கிழமை காலை 8.30 மணிக்கு அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு-பிடோக் சவுத் அவென்யு 1 சாலைப் போக்குவரத்து சந்திப்பில் வாகனத்தை ஔட்டுவதற்கான அறிகுறியான பச்சை விளக்குக்காக வாகன ஔட்டி ஒருவர் காத்திருந்தார்.
அப்பொழுது அவரது காரின் முன்பக்கக் கண்ணாடி மீது மரம் ஒன்று விழுந்தது.

இது கடந்த இரண்டு வாரங்களில் நிகழ்ந்துள்ள மூன்றாவது சம்பவம் இது.

முதல் சம்பவத்தில் இம்மாதம் 20ம் தேதி இயோ சூ காங் ரோடில் திரு சுவா லூங் வாய் என்பவரின் கார் மீது மரம் விழுந்ததால் அவர் உயிரிழந்தார்.

இதே போன்று இரண்டு நாட்கள் கழித்து அங் மோ கியோவில் நிகழ்ந்த சம்பவத்தில் மூவருக்கு காயம் ஏற்பட்டது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838