fontsize: 60% 70% 80% 90%

பேங்காக்கில் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 10 பேர் காயம்

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கின் பரபரப்பான கடைத் தொகுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை வெடித்த குண்டில் ஒருவர் மரணமமைந்தார், மேலும் 10 பேர் காயமடைந்ததாக சிஎன்என் செய்தித் தகவல் கூறுகிறது.

இந்தக் குண்டு வெடிப்பில் காயமடைந்த 51 வயது ஆடவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் துயரச் சம்பவத்தில் காயமடைந்த 10 பேர் மூன்று மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அரசாங்க அவசர நிலைப் பிரிவு மையம் தெரிவித்தது.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்திருந்த கடைத் தொகுதியில் குப்பைத் தொட்டியில் இந்தக் குண்டு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, தாய்லாந்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் குறுகிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாக செய்தித் தகவல் கூறுகிறது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838