சென்னை: சென்னையில் நடந்த மாணவர்களின் ஜல்லிக்- கட்டுப் போராட்டத்திற்கு நடுக்குப்ப மீனவர்கள் ஆதரவளித்- தற்காக காவல்துறையினரால் தீக்கிரையாக்கப் பட்டதாகக் கூறப்படும் நடுக்குப்பத்தில் உள்ள மீன்சந்தை, தற்காலிக- மாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்- களின் கோரிக்கைக்கு இணங்க தமிழக அரசு அங்கு தற் காலிக மீன் சந்தை ஒன்றைக் கட்டிக்கொடுத்துள்ளது. நேற்று செயல்படத் தொடங்கிய அந்தத் தற்காலிகச் சந்தையை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
போராட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் தற்காலிக மீன் சந்தை
1 mins read

